Published:Updated:

“தனுஷ் ஃப்ரெண்ட்லி... ஆர்யா பத்திச் சொல்லமாட்டேன்!”

க.நாகப்பன், படங்கள்: கே.ராஜசேகரன்

“தனுஷ் ஃப்ரெண்ட்லி... ஆர்யா பத்திச் சொல்லமாட்டேன்!”

க.நாகப்பன், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

டியாத்தீ... இப்படியொரு ஓப்பனிங் ரவுண்ட் மிகச் சமீபத்தில் எந்த ஹீரோயினுக்கும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை! நஸ்ரியாவின் ஒரு ஸ்டில்கூட இன்னும் மனதில் பதியவில்லை. அதற்குள் தனுஷ், ஆர்யாவுடன் ஜோடியாக நடிப்பவர், மேலும் சில பல படங்களை தன் கால்ஷீட் டைரியில் குறித்திருக்கிறார். மிக விரைவில் தமிழகம் முழுக்க போஸ்டர், பேனர்களில் சிரிக்கவிருக்கும் நஸ்ரியாவின் இன்ட்ரோ பேட்டி இங்கே...

''என் முழுப் பேர் நஸ்ரியா நசீம். மலையாளப் பொண்ணு. எட்டாவது வரை துபாய்ல படிச்சேன். மலையாளப் படத்துல மம்முட்டி சாருக்கு மகளா, ஒரு குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். செம ரெஸ்பான்ஸ். அப்படியே மோகன்லால் சார், சீனிவாசன் சாருக்கெல்லாம் மகளா நடிச்சேன். நடுவில் டி.வி. காம்பியரிங் பண்ணிட்டு, இப்போ தமிழ் சினிமாவில் ஹீரோயினா வர்றேன். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இப்பதான் ப்ளஸ் டூ எழுதியிருக்கேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லாம் ஓ.கே... அது எப்படி ஆரம்பமே தனுஷ், ஆர்யானு கலக்குறீங்களே?''

''ஹேய்... கண்ணு வெக்காதீங்கப்பா! அசின், நயன்தாரா, அமலா பால்னு  மலையாளப் பெண்களைக் கொண்டாடிய தமிழ் சினிமா என்னையும் ஏத்துக்்கிட்டது. அவ்ளோதான். நானும் அவங்களை மாதிரி பெரிய ஸ்டார் ஆகணும்!''

 “தனுஷ் ஃப்ரெண்ட்லி... ஆர்யா பத்திச் சொல்லமாட்டேன்!”

''வாழ்த்துகள்... ஆனா, உங்க ரூட் என்னன்னு சொன்னீங்கன்னா, ஊர் உலகத்துக்கு உபயோகமா இருக்கும்ல?''

''ஏசியா நெட் சேனல்ல ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியை ஆங்கர் பண்ணேன். அந்த நிகழ்ச்சி செம ஹிட். அந்த அறிமுகத்தில் சோனி மியூஸிக் தயாரிச்ச 'யுவ்’ ஆல்பம்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. 'நெஞ்சோடு சேர்த்து’னு ஆலப் ராஜு பாடின அந்தப் பாட்டு அவ்ளோ லவ்லியா இருக்கும். யூ டியூப்ல அந்த ஆல்பம் வைரல் ஹிட். அதில் என் க்யூட், பப்ளி ரியாக்ஷன்ஸ் பார்த்துட்டு தமிழ் சினிமா வாய்ப்பு வந்தது. இப்போ 'நேரம்,’ 'திருமணம் எனும் நிக்கா’, 'நய்யாண்டி’, 'ராஜா ராணி’னு நாலு தமிழ்ப் படங்களில் நடிச்சுட்டு இருக்கேன். 'நய்யாண்டி’யில் தனுஷ§டன் நான் வர்ற ஒவ்வொரு சீனும் செம கலாட்டாவா இருக்கும். 'ராஜா ராணி’யில் நான் ஆர்யாவுக்குக் காதலி!''

 “தனுஷ் ஃப்ரெண்ட்லி... ஆர்யா பத்திச் சொல்லமாட்டேன்!”

''தனுஷ§க்கு ஜோடியா அமலா பால், சமந்தா, ஹன்சிகான்னு யார் யாரோ நடிக்கிறாங்கன்னு சொன்ன 'நய்யாண்டி’ பட வாய்ப்பை, நீங்க எப்படிப் பிடிச்சீங்க?''

''இத்தனை ஹீரோயின்கள் லிஸ்ட்ல இருந்ததே நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும். படம் பார்த்தீங்கன்னா, அந்த கேரக்டருக்கு நஸ்ரியாதான் பெஸ்ட் சாய்ஸ்னு நீங்களே சொல்வீங்க!''

''தனுஷ், ஆர்யா பத்திச் சொல்லுங்க?''

''தனுஷ் ரொம்ப ஃப்ரெண்ட்லி.  அதே சமயம் ரொம்பவும் அமைதியானவர். எதுக்கும் அலட்டிக்க மாட்டார். 'நீ என்கூட நடிக்கிறேனு நியூஸ் வந்ததுமே என்னைப் பத்திக் கேப்பாங்க. எதுவும் சொல்லக் கூடாது’னு ஆர்யா என்னைக் கிட்டத் தட்ட மிரட்டியிருக்கார்.  அதனால... நோ ஆர்யா சீக்ரெட்ஸ்!''

கண்ணடித்துச் சிரிக்குது கிளி!

 “தனுஷ் ஃப்ரெண்ட்லி... ஆர்யா பத்திச் சொல்லமாட்டேன்!”