Published:Updated:

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

Published:Updated:
##~##

ரு பேருக்கு இத்தனை அக்கப்போரா?

குஞ்சிதபாதம் என்ற பெயர் 27 வயது வரை தன்னைப் பாடாய்ப்படுத்திய சுவடுகளை மறைக்க, சிவகார்த்திகேயன் அடிக்கும் 'எதிர்நீச்சல்’! கல்யாணத்துக்குப் பிறகு தன் பேருக்குப் பின் இந்தப் பேரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டேக்கா கொடுக்கும் காதலி. 'எந்தப் பேரையும் நான் சுருக்கித்தான் கூப்பிடுவேன்!’ என்று அடமாக குஞ்சிதபாதத்தை 'ஷார்ட்’ ஆகக் கூப்பிட்டுக் கடுப்படிக்கும் மேனேஜர் என பார்ட்டிக்குப் பயங்கர சிக்கல்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'ஹரீஷ்’ எனத் தன் பெயரை மாற்றியதும் ப்ரியா ஆனந்தைக் காதலிக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறுகிறது சிவகார்த்திகேயனுக்கு. ஆனால், அந்தப் பெயர் மாற்றமே இருவருக்கும் இடையில் பிரச்னையை உண்டாக்க, தன் காதலின் ஆழம் உணர்த்த சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது மீதிக் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

முதல் பாதியில் காதல், காமெடி. இரண்டாவது பாதியில் சென்டிமென்ட், லட்சிய த்ரில் என அழகான பேக்கேஜில் படம் தந்திருக் கிறார் அறிமுக இயக்குநர் துரை செந்தில்குமார். முதல்முறையாகக் கூட்டம் சேர்க்காமல் 'ஸோலோ’ ஆட்டம் ஆடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். உடல்மொழி, நக்கல் டைமிங், ரொமான்ஸ், டான்ஸ் என அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் 'ஃபைன் டியூன்ட் ஹீரோ மெட்டீரியல்’! சீனுக்கு சீன் சிரிக்கவைத்தே சிக்ஸர் அள்ளுகிறார். பள்ளிக்கூட அறிமுகக் காட்சியில் ப்ரியா ஆனந்தின் முகத்தில் அட்டகாச ஜன்னல், மின்னல் எக்ஸ்பிரஷன்கள். ஆனால், அதன் பிறகு அழகிக்கு வேலையே இல்லை. ''நீ ஓடுவியானு வள்ளிக்குச் சந்தேகம். நீ வள்ளிகூட ஓடிருவியோனு கீதாவுக்குச் சந்தேகம்'' - செம லந்து வசனங்களை நச்நச்செனப் பிரசென்ட் செய்யும் சதீஷ்... ஹீரோவின் நண்பர்கள் பட்டியலில் ஃப்ரெஷ் டாப்அப்!  

பெயர் உண்டாக்கும் இம்சைகள், பெயர் மாற்றும் படலம், சிறுவனின் பள்ளிக்கூட டிராப்கள், கல்யாண மண்டபக் களேபரம் என முன்பாதி முழுக்கவே குட்டிக் குட்டி அத்தியாயங்களில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ்.  

மாரத்தானில் சிவகார்த்திகேயன்தான் ஜெயிப்பார் என்பதை யூகிக்க முடிந்தாலும் அதையும் சுவாரஸ்ய டெம்போவோடு கொண்டுசென்றிருப்பது... வெல்டன்! ஆனால், அதற்காக மூன்று மாதப் பயிற்சியிலேயே மாரத்தான் ஓட்டத்தில் சிவகார்த்திகேயன் சாதிப்பதெல்லாம்... டூஹண்ட்ரட் மச். அவ்வளவு பரபரப்பு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு நயன்தாரா ஸ்க்ரீனில் வரும் காட்சி, இப்படியா கவனிக்கப்படாமல் கடந்து போக வேண்டும்!?

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

'ஸ்பீடு... ஸ்பீடு...’ எனப் பாடலுக்கும் படத்துக்கும் செம மைலேஜ் கொடுக்கிறது அனிருத்தின் துள்ளல் இசை. பாடல் காட்சிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுக்கிறது வேல்ராஜின் கேமரா.  

ஒரு 'பெயர் மாற்றும்’ படலத்தை வைத்துப் பெயர் தட்டியிருக்கிறது சிவகார்த்திகேயன் - துரை செந்தில்குமார் - அனிருத் அடங்கிய தனுஷ் கூட்டணி!

- விகடன் விமர்சனக் குழு