க.நாகப்பன், படம்: ஆ.முத்துக்குமார்
##~## |
அட... ஆச்சர்யம்!
சமீப ஹிட் குத்துப் பாடல்களைக் கேட்டால், அத்தனையும் ஆண்ட்ரியாதான். 'மாமா... டவுசர் கழண்டுச்சு...’, 'கூகுள்... கூகுள்’, 'ஹூஸ் தி ஹீரோ...’, 'நோ மணி... நோ ஹனிடா...’ என கண் முன் தரிசனம் இல்லாதபோதும் காற்றின் வழி கொஞ்சுகிறார் ஆண்ட்ரியா.

''தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் அள்ளும் ஹீரோயின்கள் அபூர்வம். உங்களுக்கு அந்த ஸ்பேஸை ஃபில் பண்ணுவோம்னு நினைப்பே இல்லையோ? தொடர்ந்து டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்லயே நடிச்சுட்டு, பாடிட்டு இருக்கீங்களே?''
'' 'ஆயிரத்தில் ஒருவன்’, 'என்றென்றும் புன்னகை’, 'விஸ்வரூபம்’, 'வேட்டை’ தெலுங்கு ரீமேக் 'தடக்கா’ படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுக்கிறதுக்கு, என் கிட்ட எந்தக் காரணமும் இல்லை. அதான் டபுள் ஹீரோயின்ல ஒருத்தியானு யோசிக்காமலே நடிச்சேன். நல்ல கதையா, நல்ல டீமானு எல்லாமே பார்த்துதான் ஒரு படத்தில் நடிக்க முடிவுபண்ணுவேன். பெரும்பாலான படங்கள்ல சிங்கிள் ஹீரோயினா நடிக்கிற வங்க, அஞ்சு பாட்டுக்கு ஆடுறததைத் தவிர, வேற என்ன பண்றாங்க? ஹீரோயினை மையமாவெச்சுப் படங்கள் எப்பவாவதுதான் வரும். சிலர் 'அஞ்சு பாட்டு’ படங்களா பண்ணிட்டு, சட்டுனு ஒரு சென்சிபிள் படம் பண்ணி ஸ்டார் ஹீரோயின் ஆவாங்க. சிலர் அப்படியான ஒரு நல்ல படத்துக்காகக் காத்திருந்து ஒரே படத்தில் ஸ்டார் ஹீரோயின் ஆவாங்க. இது கொஞ்சம் லாங் ரூட்தான். ஆனா, அந்த டிராவல்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ரேவதி, சுஹாசினிக்கு எல்லாம் இன்னமும் ஒரு அடையாளம் இருக்கு. அப்படி ஒரு அடையாளம்தான் எனக்கு வேணும்!''
'' 'இனி, ஃப்ரெண்ட்ஸ் விஷயத்தில் ரொம்பக் கவனமா இருக்கணும்’னு முடிவெடுத்திருக்கீங்களாமே... ஏன்?''
''எனக்கு எல்லா நல்லது கெட்டதும் ஃப்ரெண்ட்ஸ் மூலமாத்தான் நடக்குது. அதான் கொஞ்சம் கவனமா இருக்கலாமேனு நினைச்சேன். ஆனா, அதுக்காக ஸ்ட்ரிக்ட்டா எந்த முடிவும் எடுக்கலை. என்னோடு நடிக்கிற எல்லார்கூடவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிடுறேன். 'வேட்டை’ தெலுங்கு ரீமேக் 'தடக்கா’ல நான் தமன்னாவுக்கு அக்காவா நடிச்சேன். இப்போ நிஜமாவே நாங்க சிஸ்டர்ஸ் மாதிரிதான் பழகுறோம். என் ஸ்வீட் ஹார்ட் தமன்னா. 'விஸ்வரூபம்’ ஷூட்டிங்ல என்னை அதிகம் சிரிக்கவெச்சது பூஜாதான்.
'என்றென்றும் புன்னகை’ சமயத்தில் ஜீவா அவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருந்தார். ஜீவாவை ஒரு நல்ல மனிதரா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அஜித் சார் பத்திச் சொல்லவே வேணாம். பக்கா ஜென்டில்மேன். இதுவரை நான் நடிச்ச ஹீரோக்கள்ல கார்த்திதான் என் ஃபேவரைட். 'ஆயிரத்தில் ஒருவன்’ பட ஷூட்டிங் அவ்வளவு கஷ்டமான அனுபவம். ஆனா, கார்த்தி இருந்ததால், கலகலனு பாஸ் பண்ணிட்டோம். டைரக்டர் ஃபாசில் மகன் ஃபஹத் ஃபாசில், மிகச் சிறந்த நடிகர். நடிக்கிறதுக்காகவே வரம் வாங்கிட்டு வந்த மாதிரி செம சின்ஸியர்!''
''ஆண்ட்ரியா துணிச்சலான பெண்தானே... அப்போ மழுப்பாம உண்மை சொல்லுங்க? சுந்தர், அனிருத், ஃபஹத் பாசில்னு தொடர்ந்து உங்களைச் சுத்திக் காதல் கிசுகிசுக்கள். நீங்க யாரைக் காதலிக்கிறீங்க?''
''நான் யாரையும் காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லையே. காதலிக்கவும் இல்லை. 'ஆண்ட்ரியா காதலிக்கிறா’னு மத்தவங்க ஏதாச்சும் பேசிட்டு இருந்தா, அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் விளக்கம் சொல்லிச் சொல்லி என் எனர்ஜிதான் வேஸ்ட் ஆகுது. அதனாலயே இப்போலாம் கிசுகிசுக்கள் வந்தா, கண்டுக்குறது இல்லை!''

''தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், சினிமா நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி... அடுத்து என்ன?''
''ஏன்... இவ்வளவு பத்தாதா? சின்னச் சின்னதா மியூஸிக் கம்போஸ் பண்ணப் பிடிக்கும். அது எனக்கே எனக்கான கம்போஸிங். சம்திங் பெர்சனல்!''
''உங்க ட்ரீம் பாய் எப்படி இருக்கணும்?''
''ட்ரீம் பாய் நிஜ வாழ்க்கையில் வர்றதில்லை. அதனால், எனக்கு ட்ரீம் பாய் யாரும் தேவை இல்லை. எனக்கு யதார்த்தமான, உண்மையான ஆண்தான் வேணும்!''