Published:Updated:

“அஞ்ஞ்ஞ்ஞ்சலி!”

மனுஷ் ஃபீலிங்ஸ்க.ராஜீவ் காந்தி, படம்: கே.ராஜசேகரன்

##~##

டிஸ்கவரி, அனிமல் பிளானட் தவிர, எல்லா சேனல்களிலும் உங்களைத் தினமும் பார்க்க முடியுது’ என்று கலாய்த்தாலும், தமிழினத்துக்காகத் தன் சேவையை நிறுத்துவதாக இல்லை மனுஷ்யபுத்திரன். அநீதி கண்டு 24x7 அணு உலை கொதிகலனாகவே தன்னை ஃபீல் பண்ணுபவருடன் இந்த ஜாலி பேட்டி...

''நாட்டுல எல்லாத்தைப் பத்தியும் கருத்து சொல்றீங்க... இந்த டி.வி-ல வந்து கருத்து சொல்லிட்டே இருக்காங்களே... அவங்களைப் பத்தி உங்க கருத்து என்ன?''

''தமிழர்களோட பாரம்பரியப் பழக்கமே சுயமாகச் சிந்திக்க மறுப்பதுதானே! மத்தவங்க சிந்திப்பதை, பேசுவதை வேடிக்கை பார்ப்பாங்க. ஆக, அந்த எட்டுக் கோடித் தமிழர்களுக்காகத்தான் நாங்கள்லாம் கஷ்டப்பட்டு பெர்ஃபார்ம் பண்றோம்!''

''விஜயகாந்த், ஜெயலலிதா, கருணாநிதி ஆளுக்கு ஒரு அட்வைஸ் சொல்லுங்க?''

''விஜயகாந்த் - முதல்ல உங்க கட்சி எம்.எல்.ஏ-க்கள் உடம்புல ஒரு ஜி.பி.ஆர்.எஸ். கருவியைப் பொருத்துங்க. தொகுதிப் பிரச்னையைப் பத்திப் பேச சி.எம்மைச் சந்திக்கப்போனா, நீங்க ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.

“அஞ்ஞ்ஞ்ஞ்சலி!”

கருணாநிதி - மக்களை நம்புங்க... சி.பி.ஐ-யை நம்பாதீங்க!

ஜெயலலிதா - ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது!''

''நீங்க ஹீரோவா நடிச்சா, யார் ஹீரோயின்?''

''எனக்கு அஞ்சலிதான் ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் படத்துல நடிச்சுக் கொடுக்குற வரை பொண்ணு எங்கேயும் எஸ்கேப் ஆகிரக் கூடாது!''

'' 'இலக்கிய உலகின் பவர் ஸ்டார்’னு உங்களைச் சொல்லலாமா?''

''சென்னையிலேயே இருந்தாலும் பவர்கட்டால நான் படாதபாடு படுறேன். அதனால எனக்கு இப்ப பவர் மட்டும்தான் தேவை. ஸ்டார்லாம் வேணாம்!''

  ''பின்நவீனத்துவம்னா என்ன சார்?''

''வேதாளம் கணக்கா இந்தக் கேள்வியும் விடாமப் பல வருஷமா என்னை ஆட்டிவைக்குது. நமக்குத் தேவை இல்லாத விஷயத்தைப் பத்தி நாம ஏங்க பேசணும்?''

''பி.ஜே.பி. தமிழ்நாட்டுல ஆட்சியைப் பிடிக்க ஒரு ஐடியா கொடுங்களேன்?''

''நிறுத்தணும்... அவங்க முதல்ல பேசறதை நிறுத்தணும்!''

“அஞ்ஞ்ஞ்ஞ்சலி!”

''இவர்களில் சிறந்த தலைமைப் பண்பு யாருக்கு இருக்கிறது?
அ) தங்கபாலு ஆ) ஞானதேசிகன் இ) ஜி.கே.வாசன் ஈ) கார்த்தி சிதம்பரம்.

நேர்மையாப் பதில் சொல்லணும்!''

''தங்கபாலு. ஏன்னா, அவர்தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாப்ல!''

'' 'சுயமரியாதைக்காகக் காதலியை இழந்திருக்கேன்’னு கருணாநிதி சொல்லியிருக்காரே... நீங்க அப்படி எதை இழந்திருக்கீங்க?''

''காதலிகள்கிட்ட என்னையே இழந்திருக்கேனே தவிர, காதலிகள் யாரையும் நான் இழந்ததில்லை!''

''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க... கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழக அரசியல்ல இல்லைன்னா, உங்களால 'அரசியல்’ பண்ண முடியுமா?''

''அரசியல் பண்ண முடியாம இருக்கலாம். ஆனா, நிம்மதியா வாழலாமே?''

''அன்புமணி நினைச்சா ஒபாமாகிட்ட பேசுவேன்னு சொன்னாரே... அவரோட இந்த அரசியல் வளர்ச்சியை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?''

''ஒபாமாகிட்ட இவர் பேசலாம். ஆனா, இவர்கிட்ட ஒபாமா பேசுவாரானு தெரியலையே?''

''ஜெயலலிதா, ராமதாஸ், அழகிரி, காடுவெட்டி குரு... இவங்களோட ஸ்மார்ட்போன்ல உங்க ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்லாம் தானா அப்டேட் ஆகுற மாதிரி செஞ்சுட்டா என்ன ஆகும்?''

''முந்துவோருக்கே முன்னுரிமை! யார் கைல சிக்குறேனோ... அவங்க என்னைப் போட்டுத் தள்ளிடுவாங்க!''

“அஞ்ஞ்ஞ்ஞ்சலி!”

''ஃபேஸ்புக்ல நீங்க ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து ரிஜெக்ட் பண்ணது யாரு?''

''அப்படி ஒருத்தன் இதுவரை பொறக்கலை. இனிமேலும் பொறப்பான்னு நினைக்கலை!''

''உங்க வீட்டுல ராத்திரி ஏ.சி. ஓடலைனு நீங்களே லைன்மேனுக்கு லஞ்சம் கொடுத்திருக்கீங்க... 'இந்தியன்’, 'அந்நியன்’... உங்களை யார்கிட்ட புடிச்சுக் கொடுக்குறது?''

“அஞ்ஞ்ஞ்ஞ்சலி!”

''நான் இந்தியனாவோ, அந்நியனாவோ மாறிடக் கூடாதுன்னுதான் லஞ்சமே கொடுத்தேன்!''

''சட்டசபைல அ.தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனைகளைப் பத்திப் பேசும்போதே பவர்கட் ஆகியிருக்கே?''

''பல மணி நேரம் பேசினாலும் விளக்க முடியாத உண்மையைச் சில நொடியில விளக்கிடுச்சே. அது மட்டுமா... 'சட்டம் - ஒழுங்கு அருமையா இருக்கு’னு சட்டசபைல துதி பாடிட்டு இருந்தப்ப, கோர்ட்ல சாட்சி சொல்லவந்த ஒருத்தனை வெட்றாங்க. என்னா டைமிங்கு?''

''ஸ்ரீசாந்த்?''

  ''அவர் சும்மா பவுல் பண்ணியிருந்தாலே, அதைவிட அதிகமா ரன் கொடுத்திருப்பார். அவருக்கெல்லாம் எதுக்கு ஃபிக்ஸிங்?''

“அஞ்ஞ்ஞ்ஞ்சலி!”