Published:Updated:

“இயற்கை விவசாயமே இனி, இளைஞர்களின் எதிர்காலம்!”

க.ராஜீவ் காந்தி

“இயற்கை விவசாயமே இனி, இளைஞர்களின் எதிர்காலம்!”

க.ராஜீவ் காந்தி

Published:Updated:
##~##

“ராமாயணத்துல, ராமர் உதவி வேணும்னு கேட்கிறதுக்கு முன்னாடியே இந்தக் கரையில இருந்து அந்தக் கரைக்குக் கொண்டுசேர்த்து உதவிசெஞ்சவன் குகன். அதனாலதான் ராமரே, 'குகனோடு ஐவரானோம்’னு அவனைத் தன்னோட சகோதரனா ஏத்துக்கிட்டார். நாம எங்கே இருக்கோம்கிறது முக்கியம் இல்லை, எப்படி இருக்கோம்கிறதுதான் முக்கியம். அதை உணர்த்தும் குகன், கர்ணன் போன்ற குணாதிசயங்களோடுதான் இப்போ இளைஞர்கள் இருக்காங்க. அவங்க தடம் மாறிப்போவதற்கான காரணங்கள், அவங்கவங்க வளர்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான்!'' - இளைஞர்களின் மீதான கரிசனத்தோடு பேசுகிறார் இயக்குநர் அழகப்பன்.சி. 'வண்ணத்துப்பூச்சி’ படத்துக்காக மாநில அரசின் சிறந்த பட விருது வென்றவர், இப்போது 'குகன்’ எனத் தன் புதிய படத்தில் மும்முரமாக இருக்கிறார்.  

''நான் ஒரு வயதாக இருக்கும்போதே என் தாயை இழந்தவன். அதனால், எல்லா கேரக்டரிலுமே தாய்மையைப் பார்க்கிறவன். குகன் என்பவன் தாயுமானவன். அடுத்த 10 ஆண்டுகளில் உலகை ஆளப் போவது இயற்கை விவசாயம்தான். விவசாயம் தெரிந்தவன் மட்டும் தான் இனி உயிர் வாழ முடியும். அந்த விவசாயத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்ப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம். இதே கருத்தைத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் சொல்ல நினைத்துத் தோற்றார்கள். ஆனா, நான் ஜெயிப்பேன்னு எனக்குநம்பிக்கை இருக்கு. ஏன்னா, சொல்ல வேண்டிய அளவில் பிரசாரமாக இல்லாமல், அதை உணர்வுபூர்வமா சொல்லியிருக்கேன். இன்றைய இளைஞர் களைத் தூண்ட பெரிய செயல்கள் தேவையில்லை. ஓரிரு நல்ல வார்த்தைகள் போதும். அவர்கள் வாழ்க்கை மாறும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இயற்கை விவசாயமே இனி, இளைஞர்களின் எதிர்காலம்!”

''இன்றைய கமர்ஷியல் காலகட்டத்தில் இப்படியொரு சப்ஜெக்ட்டோட ஜெயிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கா?''

''கமர்ஷியல்ங்கிற பேர்ல எதை விற்க முடியுமோ, அதைத்தான் இப்போ சினிமாவா எடுக்குறாங்க. விக்கிறதை மட்டும்தான் நாம படமா எடுக்கணும்னு அவசியம் கிடையாது. எடுத்ததை விக்கிறதுக்கு முயற்சி பண்ணணும். வேகமா விக்கும்கிற துக்காக மருந்துக் கடைல பஜ்ஜி, போண்டாவா விக்க முடியும்? பஜ்ஜி, போண்டா சாப்பிடறவங்களும் மருந் துக் கடையை நோக்கி வருவாங்க. தேவையை உணர்த்தினால் போதும்!''