Published:Updated:

“ஒரு பாட்டுல உழைச்சுத்தானே முன்னேறுறான்!”

சுளீர் விக்ரமன்க.ராஜீவ் காந்தி

“ஒரு பாட்டுல உழைச்சுத்தானே முன்னேறுறான்!”

சுளீர் விக்ரமன்க.ராஜீவ் காந்தி

Published:Updated:
##~##

னது பீக் பீரியடில் விஜய், சூர்யா, விக்ரம் போன்றவர்களை ஃபேமிலி ஆடியன்ஸ்களிடம் கொண்டுசேர்த்த விக்ரமன், இன்று 'நினைத்தது யாரோ’ படத்தைப் புதுமுகங்களை வைத்து இயக்குகிறார்.

''அதுதான் சினிமா... என் படத்துக்கு இப்ப பிசினஸ் இல்லை. ஃபர்ஸ்ட் காப்பி மூலம்தான் என்னை நான் நிரூபிக்கணும்னு தயாரிப்பாளர்கிட்ட தெளிவா சொல்லித்தான் பட வேலையை ஆரம்பிச்சேன். இதோ ஃபர்ஸ்ட் காப்பி அவர் முகத்தில் சந்தோஷத்தை உண்டாக்குச்சு. நான் ரொம்பப் பிராக்டிக்கலான ஆளு. உண்மையைச் சொல்றதில் எனக்கு என்ன கஷ்டம்?'' - இயல்பாகச் சிரிக்கிறார் விக்ரமன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஒரு பாட்டுல உழைச்சுத்தானே முன்னேறுறான்!”

'' 'லாலாலாலா...’ ஒரே பாட்டுல பெரிய ஆளாகிறதுனு உங்க பட க்ளிஷேக்களை இப்போ சினிமாவிலேயே கிண்டல் அடிக்கிறாங்களே?''

''ஹீரோவை ஒரு பாட்டுல பெரிய ஆளாக்கிக் காமிச்சது உண்மைதான். ஆனா, அவன் திருடியோ, லாட்டரி டிக்கெட்ல பிரைஸ் அடிச்சோ வாழ்க்கையில் பெரிய ஆளாகலையே? உழைச்சுத்தானே முன்னேறுறான். அதுல என்ன தப்பு? என் படங்களின் ப்ளஸ், சின்ன பட்ஜெட்ல பெரிய லாபம். இதுவரை எந்த புரொடியூஸரையும் நான் அழவெச்சதில்லை. இப்போ இந்தப் படத் தையும் சொன்ன பட்ஜெட்டைவிடக் குறைச்சலாவே முடிச்சிருக்கேன். என் படங் களைப் பார்த்துட்டு வரும்போது, ரசிகர்கள்கிட்ட ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அது இந்தப் படத்திலும் கிடைக்கும். 'காதல் நல்லதா... கெட்டதா?’ இதுதான் படத்தின் ஒன் லைன். படத்தில் வேலை பார்த்தவங் கள்ல என்னைத் தவிர, எல்லாருக்கும் 30 வயசுக்குள்தான் இருக்கும். இது முழுக்கவே இளைஞர்களுக்கான காதல் கதை. படத்துல குடும்பமே கிடையாது. ஆனா, எல்லாக் குடும் பங்களுக்கும் இந்தக் காதல் கதை பிடிக்கும். அதனால் இளைஞர்கள், குடும்பங்கள் எல்லோருமே தியேட்ட ருக்கு வருவாங்க. 'நான் ஈ’ குடும்ப சப்ஜெக்ட் இல்லை. ஆனா, குடும்பம் குடும்பமா வந்து பார்த்தாங்களே... அப்படித்தான்!''

“ஒரு பாட்டுல உழைச்சுத்தானே முன்னேறுறான்!”

''இப்ப வர்ற படங்களைப் பார்ப்பது உண்டா?''

''எல்லாப் படங்களையுமே பார்த்துடுவேன். அதுதான் என்னை இயங்கவைக்குது. இப்ப தமிழ் சினிமாவின் போக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. இயக்குநர்களின் ஆதிக்கம் திரும்ப ஆரம்பிச்சிருக்கு. ஆனா, படத்துக்கு ஓப்பனிங் வேணுமேனு படத் தயாரிப்புச் செலவைவிட, விளம்பரத்துக்கு அதிகமா செலவு பண்றாங்க. அப்படி அதிக விளம்பரம் செய்ய முடியாம, 'மதுபானக் கடை’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் ரீச் ஆகாமப் போறது நல்லதில்லையே?!''

''ஸ்டார் ஹீரோக்கள் உங்களோட டச்ல இருக்காங்களா?''

''நேத்துகூட ரஜினி சார்கிட்ட பேசினேன். முன்னாடி அவர்கூட ஒரு படம் பண்ற வாய்ப்பு வந்து, கடைசி நேரத்துல மிஸ் ஆகிடுச்சு. விஜய், சூர்யா எல்லோருமே டச்ல தான் இருக்காங்க. மத்த ஹீரோக் களுடனும் நட்புலதான் இருக் கேன்!''

“ஒரு பாட்டுல உழைச்சுத்தானே முன்னேறுறான்!”

''சின்ன பட்ஜெட்னு ப்ளஸ் இருந்தும் பெரிய இடைவெளி விழுந்திருச்சே?''

''இங்கே ப்ளஸ்தான் எனக்கு மைனஸும் ஆகிடுச்சு. எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்தாலும், விக்ரமன்னா லோ பட்ஜெட் படம்கிற எதிர்பார்ப்புடனேயே என்கிட்ட வந்தாங்க. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல அந்த பட்ஜெட்ல பெரிய வித்தியாசம் பண்ண முடியாது. நான் கஷ்டப்படலாம். ஆனா, என்னை நம்பினவங்க கஷ்டப் படக் கூடாது. அதனால, அந்த இடைவெளியை நானே ஏற்படுத்திக்கிட்டேன். விஜயகாந்தை வெச்சு 'மரியாதை’ படம் இயக்கவே ரொம்ப யோசிச்சேன். 'வானத்தைப் போல’ அளவுக்கு எல்லாரும் எதிர்பார்ப்பாங்கனுபயந் தேன். கடைசியில் அதுதான் நடந்துச்சு. ஆனா, இப்போ இளைஞர்களை நம்பிக் களம் இறங்கியிருக்கேன். இப்பவும் அந்த சின்ன பட்ஜெட் தான் எனக்குக் கை கொடுக்கப்போகுது!''