Published:Updated:

“ஐ லவ் யூ சொல்லாம விடியாது... முடியாது!”

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

##~##

மிழ் சினிமாக்களில் 'அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை’ போல ப்ரியா ஆனந்த் 'அமெரிக்க ரிட்டர்ன் ஹீரோயின்’!

பிறந்தது... வளர்ந்தது சென்னையில். படித்தது... அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில். விரல்கள் கோத்து, அடிக்கடி கன்னம் வருடிக்கொண்டு (அவங்க கன்னம்தாங்க), இதழ்களுக்கு முன் கண்கள் சிரிப்பது ப்ரியா ஆனந்தின் மோனலிசா மேனரிசம்.

''சென்னைப் பொண்ணா இருந்துட்டு, தமிழ் சினிமாவுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கலை?''

''சின்ன வயசுல இருந்தே சினிமா ரொம்பப் பிடிக்கும். ஆனா, நான் ஒரு நடிகை ஆவேன்னு நினைச்சதுஇல்லை. பத்து வருஷத்துக்கு முன்னாடி ஜர்ன லிசம் படிக்க அமெரிக்கா போனேன். அங்கே சினிமா தயாரிப்புக்கான டெக்னிக்கல் விஷயங்களையும் கத்துக்கிட்டு சென்னை வந்தேன். பொழுதுபோக்கா மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். டோனி, சூர்யானு விளம்பரப் படங்களில் நடிச்சேன். டி.வி, ஃபேஸ்புக்ல அடிக்கடி என்னைப் பார்த்துப் பார்த்து லைக்ஸ் எகிறி, தமிழில் 'வாமனன்’, தெலுங்கில் 'லீடர்’னு ரெண்டு படங் களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆந்திராவில் 'லீடர்’ செம ஹிட். அடுத்தடுத்து அங்கே பெரிய கேன்வாஸ்ல வாய்ப்பு வந்ததால், தெலுங்கில் பிஸி. இப்போ 'எதிர் நீச்சல்’ எனக்கு தமிழ்ல ரீஎன்ட்ரி. தமிழ்ல நாலு படங்களில் கமிட் ஆகி இருக்கேன். அடுத்த ஆறு மாசம் சென்னையில்தான் என் வாசம். சந்தோஷமா இருக்கேன்!''

“ஐ லவ் யூ சொல்லாம விடியாது... முடியாது!”

''மாடலிங், ஆர்ட் ஃபிலிம், சினிமானு நிறைய டிராவல் பண்ணியிருக்கீங்க... சக்சஸ் டிப்ஸ் என்ன?''

''எப்பவும் எல்லார்கிட்டயும் கனிவா இருக்கணும். எல்லாருக்கும் மரியாதை கொடுக்கணும். எவ்வளவு பெரிய ஸ்டாரா லைம் லைட்டுக்கு வந்தாலும், லைட்பாய் வரை ஆரம்பத்தில் இருந்த அதே மனசோட இருக்கணும். நிறைய ஹார்டு வொர்க் பண்ணணும். ஆனா, ரிசல்ட் பத்தி எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்கக் கூடாது. தினமும் நிறைய ஏமாற்றங்கள் கிடைக்கலாம். 'உன் முகம் சரியில்லை’, 'உனக்கு நடிக்க வரலை’, 'ஹீரோயினா நீ ஜெயிக்கிறது கஷ்டம்’னு என் முகத்துக்கு முன்னாடியே நிறைய கமென்ட் பண்ணியிருக்காங்க. அதில் சின்சியர் கருத்துகளை மட்டும் எடுத்துக்கிட்டு, மத்ததைக் கண்டுக்கக் கூடாது. வருஷத்தில் ஒரு மாசம் பெய்ற மழைதான், மீதி பதினோரு மாசத்துக்கும் தண்ணீர் கொடுக்கும். அப்படி அப்பப்போ கிடைக்கும் பாராட்டுகளை மட்டும்வெச்சு, எதையும் தாண்டி வந்துரணும்!''

''அழகாப் பேசுறீங்க... அதான் உங்க ப்ளஸ்ஸா?''

''யார்கூடவும் ஈஸியாப் பழகிருவேன். அவங்க எப்படிப்பட்ட ஆளா இருந்தாலும் ஃப்ரெண்ட் பிடிச்சுடுவேன். என்கூட நடிச்ச, வேலை பார்த்த எல்லாருமே என் ஃப்ரெண்ட்ஸ்தான். ஐஸ்வர்யா தனுஷ் மேம், கிருத்திகா உதயநிதி மேம்னு இப்போ இரண்டு பெண் இயக்குநர்கள் என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்காங்க. காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல தோழிகளோட பேசிட்டே நாடகம் ரிகர்சல் பண்ணி ஸ்டேஜ்ல நடிச்சு க்ளாப்ஸ் அள்ளுற மாதிரி இருக்கு அவங்களோட வேலை பார்க்கிறது. எனக்கே தெரியாம என்கிட்ட இருக்கிற பெஸ்ட்டைக் கொண்டுவந்துடுறாங்க!''    

''உங்களைப் பத்தி ஒரு ரகசியம் சொல்லுங்க?''  

 ''தினமும் நான் ஒருத்தர்கிட்ட 'ஐ லவ் யூ’ சொல்வேன். அந்த ஐ லவ் யூ சொல்லாம என் ஒரு நாள் விடியாது... முடியாது. அது யாருங்கிறது மட்டும் சஸ்பென்ஸ்!''

எவ்வளவோ கேட்டும் அந்த 'ஒருவர்’ யார் என்று ப்ரியா சொல்லவே இல்லை. சின்ன ஏமாற்றத்துடன் பேட்டிக்கு பேக்கப் சொன்னேன். சில நிமிடங்களில் ப்ரியாவே லைனுக்கு வந்தார். ஹஸ்கி வாய்ஸில்... ''நீங்களா 'அவரா... இவரா’னு கற்பனை பண்ண வேண்டாம். என் அம்மாகிட்டதான் தினமும் 'ஐ லவ் யூ’ சொல்வேன். வேற எந்த ரகசியமும் இல்லை. நான்லாம் வளர்ற பொண்ணு. இன்னும் நல்லா வளர வேண்டிய பொண்ணு. உங்க சப்போர்ட் வேணுங்க!''

நீங்கள்லாம் நல்லா வருவீங்க ப்ரியா!