Published:Updated:

‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா!

க.நாகப்பன்

‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

 'மூன்று வருடங்களுக்கு ஒரு படம்’ என்ற டயட்டில் இருந்த விஷால், இப்போது 'பட்டத்து யானை’, 'மதகஜராஜா’, 'பாண்டிய நாடு’ என்று ஒரே சமயத்தில் மூன்று படங்கள் என அன்லிமிடெட் அதிரடிக்குத் தாவி இருக்கிறார்!

''சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு பத்தாவது வருஷத்தில் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’னு தயாரிப்பாளர் அவதாரம் ஏன்?''  

''என் இரண்டாவது படத்துலயே என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. 'இவன் அடிப்பான். இவன் அடிச்சா நம்பலாம்’னு தியேட்டர்ல ரசிகர்கள் எதிர்பார்க்கும்போது நாமஅடிப் போம்ல.... அப்படி ரசிகர்களுக்கும் எனக்குமான ஆக்ஷன் கெமிஸ்ட்ரி அற்புதமா செட் ஆச்சு. ஆனா, அதுலயே நிலைச்சு நிக்க முடியாது. இங்கே சக்சஸ் மட்டும்தான் பேசும். அது பேசுறப்போ அதோட குரல் மட்டும்தான் கேக்கும்.  ஒரு ஹீரோவா என் படத்தை ரிலீஸ்

‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா!

பண்ணவே நான் ரொம்ப சிரமப்பட்ட காலமும் உண்டு. 'சமர்’ படத்துல நடிச்சதுக்காகக் கிடைச்ச பாராட்டுக்களைவிட, அந்தப் படம் வெளியானதுதான் எனக்குப் பெரிய சந்தோஷம்.  அப்பவே இதுதான் நாம தயாரிப்பாளர் ஆக சரியான நேரம்னு மனசுக்குள்ளே மணி அடிச்சது. அதான் புரொடக்ஷன் ஹவுஸ் ஆரம்பிச்சுட்டேன்.  சுசீந்திரன் கதையைத் தயாரிச்சு, அதில் நான் நடிக்கிறேன்.  திரு இயக்கும் படத்தைத் தயாரிக்கிறேன். இந்தப் பத்து வருஷத்துல நிறையப் பாடம் படிச்சிருக்கேன். ஆனா, நான் யாருக்கும் பாடம் சொல்லிக்கொடுக்க வரலை. எனக்குப் பிடிச்ச சினிமாவைக் கொண்டுவர்றேன். நல்ல கதைகள், பரிசோதனை முயற்சிகள்னு இறங்க ஆசை!''

''பாலாவின் இயக்கத்தில் இன்னொரு படம் நடிக்கிறீங்களாமே!''

''ஆமாம். பாலா சார் படத்தில் நடிச்சா உடம்புல இருக்குற ஒவ்வொரு செல்லும் ரீசார்ஜ் ஆகிடும். திருப்தியா, சந்தோ ஷமா, நிம்மதியாத் தூங்க முடியும். 'என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்க? மத்த புராஜெக்ட்லாம் எப்போ முடிப்பே?’னு அவர் கேட் டார். மத்தபடி என்ன படம், எப்போ ஆரம்பிக்கும்... எதுவும் எனக்கும் தெரியாது!''

''ஜீவா, 'ஜெயம்’ ரவி, ஆர்யா, விஷால்... இந்த நண்பர்களுக்குள்ள ஈகோவே இருக்காதா?''

''நிச்சயம் இருக்காது. நாங்க செட் சேர்ந்தா கிரிக்கெட், குடும்பம், ஜோக்ஸ்னுதான் பொழுதுபோகும். சினிமா பத்திப் பேசவே கூடாதுனு எங்களுக்குள் சட்டமே இருக்கு. எங்க நட்பை அவ்வளவு பொக்கிஷமாப் பராமரிக்கிறோம். ஆர்யா அவனைவிட எனக்கு 200 சதவிகிதம் நல்லவனா இருப்பான். ஆனா, நான் அவனுக்கு அப்படி இருப்பேனானு தெரியலை. ஜீவா ரொம்ப சிம்பிள். நாங்க அவனை 'சயின்டிஸ்ட்’னு சொல்வோம். 'இந்த மோட்டார்ல ஏன் தண்ணி வரலை? இந்த

‘சயின்டிஸ்ட்’ ஜீவா... ‘குழந்தை’ ரவி... ‘லவ் மேரேஜ்’ ஆர்யா!

டி.வி.டி. பிளேயர் ஏன் ப்ளே ஆகலை?’னு விளக்கம் கொடுத்துட்டே இருக்கிறதால, அந்தப் பட்டம்.  ரவி ஒரு வளர்ந்த குழந்தை. அவன்கிட்ட பேசுறப்பலாம் ஏதோ குழந்தைகிட்ட பேசுற மாதிரியே இருக்கும். இதுல எப்படி ஈகோ வரும்? செட்ல நானும் ஆர்யாவும் மட்டும்தான் பேச்சுலர்ஸ். சீக்கிரமே நாங்களும் கல்யாணம் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குமே லவ் மேரேஜ்தான்!''

''தமிழ் சினிமாவில் சமீபமா ஜெயிச்ச ஹீரோக்களைக் கவனிச்சீங்களா?''

''ஆஹா... அட்டகாசமா இருக்காங்களே! இந்தக் குடும்பத்துப் பையன், இந்தப் பின்னணியில் இருந்து வந்தவன்தான் ஹீரோ ஆக முடியும்னு இனிமே சொல்ல முடியாது. 'இவர்நடிச்சாத்தான் படம் பார்க்கலாம்’கிற நம்பிக்கை உடைஞ்சி ருச்சு. யார் நடிச்சாலும், படம் நல்லா இருந்தா பார்ப்போம்கிற சூழல் வந்திருச்சு. விமல், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விதார்த் இவங்க வளர்ச்சி ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. ஹீரோ, ஹீரோயின்களா இருக்கட்டும், கதை, மேக்கிங், பப்ளிசிட்டியா இருக்கட்டும்... தமிழ் சினிமாவின் பெஸ்ட் பீரியட் இது!''

''இயக்குநர் விஷால்..?!''

''ஒரு ஸ்க்ரிப்ட் மனசுல பளிச்னு மின்னல் அடிச்சது. எழுதலாம்னு உட்கார்ந்ததும், ஸ்ருதி முகம்தான் மனசுக்குள்ள ஃப்ளாஷ் ஆச்சு. நேரம் கிடைக்கிறப்போ, சின்னச் சின்னதா எழுதிட்டு இருக்கேன். இப்போ இருக்கும் பொறுப்புகளை முடிச்சுட்டு அப்புறம்தான் டைரக்ட் பண் ணணும். அதுக்குள்ள அந்த ஸ்க்ரிப்ட்டுக்குள்ளே இன்னும் ஆழமா டிராவல் பண்ணணும். மனசுக்குள்ள ஒவ்வொரு சீனையும் கற்பனையிலேயே ஷூட் பண்ணி, இன்னும் இன்னும் அழகாக்கணும். முழுப் படத்தையும் உள்ளே ஓட்டிப் பார்த்து அப்ளாஸ் அள்ளின பிறகு, ஷூட்டிங் கிளம்பிர வேண்டியதுதான்!''