சினிமா
Published:Updated:

பவர் ஸ்டார், ராஜகுமாரன்லாம் ஜெயிச்சிட்டுப் போகட்டுமே!

க.ராஜீவ்காந்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்

##~##

''சினிமாவில் ரீ-என்ட்ரிக்காக பலமா அஸ்தி வாரம் போட்டுட்டு இருக்கேன். இந்த நேரத்துல எடக்குமடக்குப் பேட்டியா?'' - கொஞ்சம் ஜெர்க்குடன்தான் பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் ராமராஜன்.

''எம்.ஜி.ஆர்.,  கருணாநிதி.... ரெண்டு வித்தியாசம் சொல்லுங்க.''

''வித்தியாசமா? ஏங்க... தரைல ஓடுறதும் வாகனம் தான். வானத்துல பறக்குறதும் வாகனம்தான். அதுக்காக ரெண்டும் ஒண்ணுனு சொல்வீங்களா? இவரை எல்லாம்போய் தலைவர்கூட ஒப்பிட முடியுமா? யார் கொடுக்கிறவங்க, யார் கெடுக்கிறவங் கன்னு மக்களுக்கே தெரியுமே!''

''அம்மா ஒருவேளை பிரதமர் ஆகிட்டா, அப்போ  உங்களை தமிழக முதல்வர் ஆக்கிட்டா என்ன பண்ணுவீங்க?''

''ஏன், அவங்க பிரதமர் ஆகக் கூடாதா? ஒரு மாதிரி சந்தேகமாக் கேக்கிறீங்க? பிரதமராக, மக்கள் செல்வாக்குதான் வேணும். அது அம்மாவுக்கு நிறைய இருக்கு. ஏன், தேவகவுடா பிரதமர் ஆகலையா? அம்மா பிரதமரானா நம்ம எல்லா ருக்கும்தான் பெருமை. முதல்ல, அம்மாவைப் பிரத மர் ஆக்குவோம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்!''  

''உங்களைவிட அதிகமா லிப்ஸ்டிக் போட்டு மிரட்டுறாங்களே பவர் ஸ்டார், ராஜகுமாரன்லாம்?''

''யாரா இருந்தா என்னங்க... எல்லாரும் வரட்டும். திறமை இருக்கிறவங்க நிப்பாங்க. ஜெயிக்கட்டும்!''

பவர் ஸ்டார், ராஜகுமாரன்லாம் ஜெயிச்சிட்டுப் போகட்டுமே!

''ஷங்கர், பாலா.... ரெண்டு பேருமே அவங்க படத்துல நடிக்க உங்களைக் கூப்பிடுறாங்க. ஆனா, ஒரே நேரத்துல கால்ஷீட் கேக்கிறாங்க... யார் படத்துல நடிப்பீங்க?''

''அப்படி எந்த ஆசையும் எனக்கு எப்பவுமே இல்லை. டைரக்டர்ல ஏ,பி,சி,டி எல்லாம் கிடையாது. எல்லா டைரக்டருமே டைரக்டர்ஸ்தான். யார் கூப்பிட்டாலும் முதல்ல கதையைக் கேப்பேன். எனக்கு எது பிடிக்குதோ, அதுக்குத்தான் ஓ.கே.  சொல்வேன்!''

''விஜயகாந்துக்கு வசனம் சொல்லிக்கொடுத்தேன்னு சொல்லியிருக்கீங்க... அது என்ன வசனம்?''

''அதெல்லாம் 30 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. மறந்துபோச்சு. நான் எழுதிக்கொடுத்ததை பேசித்தானே ஹீரோவா நடிச்சாரு அவரு!''

''அவரை 'கறுப்பு எம்.ஜி.ஆர்’னு சொல்ற மாதிரி உங்களை 'சிவப்பு எம்.ஜி.ஆர்’னு சொல்லலாமா?''

''நாம ஒரு பாதையில போயிட்டு இருக்கோம். அந்தப் பாதையில இன்னொருத்தரைப் பிடிச்சு இழுக்கக் கூடாது. எம்.ஜி.ஆர்-னா, அது அவர் மட்டும்தான். நான் எந்தக் காலத்துலயும் அப்படிலாம் சொல்லிக் கிட்டது கிடையாது. அது ரொம்பத் தப்புங்க.. நம்மளுக்கு ஒருத்தரைப் பிடிக்கு துங்கிறதுக்காக நாமதான் அவருனு எப்படி சொல்லிக்க முடியும்?''

''இத்தனை வருஷமா அம்மாவுக்கு விசுவாசமா இருந்தும் ஒரு அமைச்சர் பதவிகூட கிடைக்கலையே உங்களுக்கு?''

''அமைச்சர் பதவி என்ன. கடலை மிட் டாயா? ஆளாளுக்கு அள்ளிக் கொடுக்கிற துக்கு! அதெல்லாம் பொறுப்பு. தானா வரணும்ங்க. ஒருவேளை தேர்தல் சமயத் தில் நான் விபத்தில் சிக்காம இருந்திருந்தா, அம்மா எனக்கு ஒரு தொகுதி கொடுத்தி ருக்கலாம். ஜெயிச்சிருந்தா பதவிகூட கொடுத்திருக்கலாம். ஆனா, எனக்கு அந்த அமைப்பு இல்லாமப்போச்சு. பதவியை எதிர்பார்த்து நான் அம்மாகிட்ட போய் சேரலை. நடிக்க வந்த ஒரு வருஷத்துல எல்லாம் அம்மாகிட்ட போய் சேர்ந்துட் டேன். சில பேரு மாதிரி அரசியலுக்கு வருவோமா... வேணாமானு வருஷக் கணக்குல சிந்திக்கலை. எதையுமே எதிர் பார்த்துப் போகலை நான். தலைவரும்அம்மாவும்தான் முக்கியம்னு நினைச்சேன். அவ்வளவுதான்.''

''ஸ்டாலின், அழகிரி.... ரெண்டு பேர்ல யார் நல்லவங்க?''

''அவங்கக்கிட்ட நான் பழகினதே கிடையாதே. இனிமே அப்படியரு வாய்ப்பு வந்தாலும் வேண்டாம். எனக்கு அம்மா மட்டும் போதும்!''

''நேத்து வந்த நாஞ்சில் சம்பத்துக்கே  இன்னோவா கொடுத்துட்டாங்க. உங்களுக்கு ஏன் இன்னும் கார் எதுவும் தரலை?''

''அதெல்லாம் தலைமை எடுக்கிற முடிவுங்க. நான் எதையுமே அம்மாகிட்ட கேக்கலை. கட்சியில உழைக்கிற இந்த வாய்ப்பு போதும். அம்மாவுக்குத் தெரியும், யாருக்கு என்ன செய்யணும்னு!''

'' 'கரகாட்டக்காரன்’ படத்தை இப்போ ரீமேக் பண்ணா, எந்த ஹீரோ, ஹீரோயினை நடிக்கவைக்கலாம்?''

''என்னைப் பொறுத்த வரைக்கும் அதை ரீமேக் பண்ணக் கூடாது. சிவனையோ, முருகனையோ ரீமேக் பண்ண முடியுமா? முருகனை விடுங்க.. நம்மளை இன்னொரு முறை ரீமேக் பண்ண முடியுமா? இப்பல்லாம் ஒரு பல்லவிக்கு 10 பாட்டு எழுதித் தர்றாங்க. இவ்வளவு திறமை இருக்கும்போது ஏன் ரீமேக் பண்ணணும்?''

''நீங்க அடுத்து படம் இயக்கப் போறீங்கன்னு ஒரு பேச்சு இருக்கே... இன்னிக்கு ட்ரெண்டுக்கு உங்க பாணி படங்கள் செட் ஆகுமா?''

''ட்ரெண்ட் என்ன ட்ரெண்ட்? சினிமாவை சினிமாவாப் பண்ணா நிச்சயம் சக்சஸ் ஆகும். மக்களுக்குப் பிடிச்ச விஷ யத்தைக் காட்டினா, எந்தப் படமும் ஓடும். இன்னமும் டி.வி-யில் பழைய பாட்டை ரசிக்கலையா? பழைய பாடல், படத்துக்காகவே  சேனல் ஆரம்பிச்சு வெற்றிகரமா ஓடலையா? எனக்கு, தியேட்டர்ல வேலை பார்த்த அனுபவம் இருக்கு. அது இப்ப உள்ள ஹீரோக்களில் யாருக்கு இருக்கு? சொல்லச் சொல்லுங்க. என்னைத் தெலுங்கு, மலையாள சினிமாவில் எல்லாம் கூப்பிட்டாங்க. ஆனா, தமிழ்தான் முக்கியம்னு போகலை. அப்படிப்பட்ட என்னை தமிழக  மக்கள் கைவிடமாட்டாங்க!''