Published:Updated:

மும்பையில் தமிழ் ஃபீவர்!

ம.கா.செந்தில்குமார்

மும்பையில் தமிழ் ஃபீவர்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

 '''நம்ம விஜயை, பாலிவுட்ல ரசிக்காதவங்களே இல்லைனு சொல்லலாம். அங்கே இருக்கிற எல்லா டான்ஸ் மாஸ்டர்களும்,  'அலட்டிக்காம டான்ஸ் ஆடுற ஹீரோக்கள்ல விஜய்தான் நம்பர் ஒன்’னு சொல்வாங்க. எல்லா ஆர்ட்டிஸ்ட் வீடுகளிலும், பெரும்பாலும் தென்னிந்திய மொழி சேனல்கள் ஓடிட்டே இருக்கும். கல்யாண வீட்டுக் கச்சேரிகளில், 'அப்படிப் போடு’வும், 'கொலவெறி’யும் கண்டிப்பா ஒலிக்கும். என் இந்தி நண்பர்கள் சிலர், 'பாலிவுட் இன்டஸ்ட்ரியில கிட்டத்தட்ட எல்லாரும் தமிழ்ப் பேசிடுவாங்க போலிருக்கே’னு சொல்லிச் சிரிப்பாங்க!'' - லகலகவென சிரிக்கிறார் 'நட்டி’ என்கிற நட்ராஜ். பாலிவுட் கொண்டாடும் விறுவிறு ஒளிப்பதிவாளர், துறுதுறுத் தமிழர்!  

மும்பையில் தமிழ் ஃபீவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்க பாலிவுட்ல மெகா பட்ஜெட் படங்களின் ஒளிப்பதிவாளர். ஆனா, 'மிளகா’ மாதிரி வருஷத்துக்கு ஒரு மசாலா தமிழ் படம்  வம்படியா நடிச்சிடுறீங்களே...  ஏன்?''

''நான் சென்னைக்கு வந்தா, இந்தக் கேள் வியை என்கிட்ட கேட்காதவங்களே கிடை யாது. ஆசைப்பட்டதைச் செய்யலைனா எதுக்கு சார் இந்த வாழ்க்கை? இந்தி சினிமாவுக்கு உலக மார்க்கெட். 'பரினீதா’, 'ஜப் வீ மெட்’, 'லவ் ஆஜ் கல்’, 'ஏக் லவ்யா’, 'தேசி பாய்ஸ்’னு நான் வேலை பார்த்த படங்கள் எல்லாம், 100 கோடிக்கும் மேல பட்ஜெட். 'ஓப்பன் பண்ணா சுவிட்சர்லாந்து; முதல் பாதி மும்பை, அடுத்த பாதி நியூயார்க்’னுதான் கதை சொல்லவே ஆரம்பிப்பாங்க. இப்படி தமிழ்நாட்டைத் தாண்டி வெளியிலேயே சுத்திட்டு இருந்தா, நான் எப்ப என் கிராமங்களைப் பார்க்கிறது? ஆசைப்பட்டதை எப்படிச் செய்றது? சின்ன பட்ஜெட், பரிசோதனை முயற்சிகளை இந்தில பண்ணவும் முடியாது. அதான் தமிழ்ல அடிக் கடி நடிக்கிறேன். தோ... 'நெத்திலி’, 'பொறம்போக்கு’, 'நடத்துநர் கருப்பண்ண சாமி போக்குவரத்துக் கழ கம்’னு அடுத்தடுத்து ஜாலியான படங்கள் பண்றேன். இந்த அனுபவம் எனக்கு பாலிவுட்ல கிடைக் காது!''

''உங்க நண்பர் அனுராக் காஷ்யப், தமிழ் சினிமாவை 'ஆஹா... ஓஹோ’னு கொண்டாடுறாரே!''

''அனுராக், என் நண்பன். தமிழ் சினிமா மேல நம்மளைவிட பத்து மடங்கு அதிகக் காதல்கொண்டவன். வழக்கமான இந்தி சினிமாவை வேற பாதைக்கு இழுத்துட்டுப்போக முயற்சி பண்றவன். பிரமாதமான ரைட்டர். 'கோடு போட்டா ரோடு போடுவாங்க’னு சொல்வோம்ல... ஆனா, அவன் கோடு போட்டா, ஒரு கிராமமே போடுவான். பாலிவுட்டில் தமிழ் சினிமாவின் பி.ஆர்.ஓ-னு அவனைச் சொல்லலாம். அவன்கூட மூணு படங்கள் வேலை பார்த்திருக்கேன். அப்பெல்லாம் நான் நம்பிக்கையா கேமராவில் சில ஃபிரேம்கள் வைக்கும்போது, 'என்ன ரெஃபரென்ஸ்ல இந்த ஃப்ரேம் வைக்கிற’னு கேட்பான். 'என்னைப் பாதிச்ச தமிழ்ப் படங்கள்’னு ஆரம்பிச்சு 'புதிய பறவை’, 'நெஞ்சம் மறப்பதில்லை’, மணி சார் படங்கள்னு பல தமிழ் படங்களைப் பத்தி நான் சொன்னதும், 'இதெல்லாம் முன்னாடியே பண்ணிட்டாங்களா’னு பிரமிச்சுட்டான். அப்போதிருந்து தமிழ் சினிமாவை ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்ணிட்டே இருக்கான்!''

மும்பையில் தமிழ் ஃபீவர்!
மும்பையில் தமிழ் ஃபீவர்!

''ஆனா, பாலிவுட்ல ஹீரோக்களை விட ஹீரோயின்ஸ்தான் உங்களுக்கு நெருக்கம்னு சொல்றாங்களே?''

''ஆமாங்க... 'நட்டி’ன்னா ஹீரோயின்களுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தான். வித்யாபாலன் நம்ம ஊர் பொண்ணு, லேடி சல்மான் கான். மொத்தப் படத்தையும் ஒத்தை ஆளா தோள்ல தூக்கிச் சுமப்பாங்க. என் உயிர் தோழி. 'எங்க ஊர்லயும் பிரமாதமான படங்கள் பண்றோம். கண்டுக்குங்க’னு சொல்லி கலாய்ப்பேன். 'ஆரம்பத்தில் அங்கே என்னைவர வேற்றாங்க, ஆனா, தனிப்பட்ட சில மனிதர்க ளால் பிரச்னை. 'எனக்கு நடிக்கத் தெரியலை’னு கிளப்பிவிட்டுட்டாங்க.

மும்பையில் தமிழ் ஃபீவர்!

ஆனா, உனக்காக உன் கூட சேர்ந்து நடிக்க ரெடி. எப்பனு சொல்லு’ம் பாங்க. தீபிகா படுகோன்... செம அழகி.  

தீபிகாவுடன் மூணு படம் பண்ணிருக்கேன். ஒரு படத்தில் அவங்களுக்குப் பார்வை இல்லாத பெண் வேடம். டைமிங்ல மிரட்டியிருப்பாங்க. பரபர பப்ளி கேர்ள் சோனம் கபூர். 'இந்த சீன்ல இந்தப் பொண்ணு சொதப்பிரும்’னு நினைக்கும்போது, வேற மாதிரி மிரட்டிரும்.  

சோனாக்ஷி சின்ஹா, காவிய அழகி. செம தைரியசாலி. இவங்க எல்லாரோட 'குட்புக்’லயும் நான் இருக்கேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism