Published:Updated:

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

Published:Updated:
##~##

 பேச்சுலராகவே வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கும் சிவா... ட்ரிங்க்ஸ் பார்ட்டி, டேட்டிங் பியூட்டி என்று இருக்கும் வசுந்தரா... இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அதைத் தடுத்து நிறுத்த இருவரும் மெனக்கெடும் தகிடு தத்தங்கள்... 'சொன்னா புரியாது’!

பற்பல ஹாலிவுட் படங்களிலும் சிற்சில தமிழ் சினிமாக்களிலும் 'டும் டும் டும்’ கொட்டப்பட்ட கதைதான். அதை, சிவாவை வைத்து சிரிப்பு மேளா ஆக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். மொக்கை காமெடிக்கு சிவா ஓ.கே-தான். ஆனால், மொத்தப் படமும் மொக்கை காமெடி யாகவே  இருந்தால், என்ன செய்வதாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போதை வாடை அடிக்காமல் இருக்க கொய்யா இலைகளை மெல்வது, கார் பார்க்கிங் காவலரிடம் 'இந்த நாளை டைரில குறிச்சுவெச்சுக்கங்க’ என்று சவால்விட்டு பல்பு வாங்குவது, 'பாஸ்... நான் மாப்பிள்ளை ஃப்ரெண்ட்... கொஞ் சம் வேர்க்கடலை எடுத்துக்குறேன்’, 'ஜிலேபி எடுத்துவைச்சாலாம் லவ் வருமா?’ என்று போங்கடிப்பது... என சிவா பல இடங்களில் ரசிக்கவைத்தா லும்... நடிப்பு நஹி, டான்ஸ் உடான்ஸ், காமெடி செம கடி! இன்னும் எத்தனை படங்களில் இப்படியே நடிப்பீர்கள் சிவா?  

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

'டாம் பாய்’ போல வசுந்தரா, அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். 'பிரேக்-அப்’ சந்தோஷத்தை பார்ட்டி வைத்துக்கொண்டாடும் இளைஞிகள், ஐபேட், ஃபேஸ்புக் என்று புழங்கும் சிவாவின் பாட்டி, சீனப் படங்களுக்கு டப்பிங் கொடுக்கும் சிவா அண்ட் கோ... என ஆங்காங்கே சிற்சில மின்னல்கள். திருமணத் துக்கு சம்மதிக்காத வசுந்தராவை 'சிட்டுக்குச் செல்ல சிட்டுக்கு’, 'ஒரு பெண் புறா’ என்று சோக ஃபீலிங்ஸில் பாட்டுப் பாடி அவருடைய அப்பா சிவாஜி சம்மதிக்க வைக்கும் லீட்... பளிச் மின்னல்!

இடைவேளை வரை பரவாயில்லாமல் பயணித்து திடுக் ட்விஸ்ட் வைப்பவர்கள், அதற்குப் பிறகு எதைப் பற்றியும் கவலைகொள்ளவில்லை போல!

கால்கட்டு.காம் அத்தியாயங்கள் 'காமெடி’ என்று நீங்கள் நினைத்தால், ரொம்ப ஸாரி! வசுந்தராவுக்குத் திடீர் என்று சிவா மீது காதல் வருவதும்; சிவாவுக்கும் வசுந்தரா மீது காதல் வருவதும்.... கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க. நண்பர்கள் எப்போதும் சரக்கடித்துக்கொண்டே இருப்பதும், குழாமில் ஒரு குண்டு நண்பன் அரைத்துக்கொண்டே இருப்பதும்... நிறையவே மாத்தி யோசிங்க ப்ளீஸ்!  

இது படமா... குறும்படமா... லொள்ளு சபா நாடகமா... சினிமாவையும் காதலையும் கலாய்க்கும் சினிமாவா... அல்லது வெறும் ஜாலி லூட்டி சிரிப்புக் கச்சேரியா? - இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆமாவோ.... இல்லையோ... சொல்லாமல் நம்மைக் குழப்பிக் கலங்கடித்து... அட, அதெல்லாம் சொன்னாப் புரியாதுங்க!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism