Published:Updated:

“சன்னி லியோன் குழந்தை மாதிரி!”

க.நாகப்பன்

“சன்னி லியோன் குழந்தை மாதிரி!”

க.நாகப்பன்

Published:Updated:
##~##

''பரத்..!''

''அட... 'காதல்’, 'பாய்ஸ்’ல நடிச்ச பையனாச்சே. நல்லா டான்ஸ் ஆடுவாப்ல!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இப்படி நினைவு அடுக்குகளைத்  தூசி தட்டி யவர்களை அதிரவைத்தது அந்தச் செய்தி. 'சன்னி லியோனுடன் நடிக்கிறார் பரத்’!

உலகின் டாப்-20 போர்னோ நடிகைகளில் (ட்ரிபிள் எக்ஸ் பட ஹீரோயின்கள்) 12-ம் இடத்தைப் பிடித்தவர் சன்னி லியோன். ஆனால், சமீபமாக அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு, இந்திப் படங்களில் நடித்துவருகிறார் சன்னி. சிக்ஸ் பேக், '555’, நஸ்ருதீன் ஷா, சன்னி லியோன்... ஆஹா! பரத்துடன் பேசுவதற்கு 'A’கப்பட்ட விஷயங்கள்  சேர்ந்துவிட்டதே!

''என்னங்க திடீர்னு 'ஜாக்பாட்’னு இந்திப் படத்தில் நடிக்கிறீங்க... எப்படி வந்தது இந்த வாய்ப்பு?''  

'' '555’ பட புரமோஷன்களில் என் சிக்ஸ்-பேக் உடம்பு பார்த் துட்டுக் கிடைச்ச வாய்ப்பு இது. நஸ்ருதீன் ஷா, சச்சின் ஜோஷி, சன்னி லியோன், நான். எங்க நாலு பேரைச் சுத்திதான் மொத்தப் படமும். ஒருத்தரை ஒருத்தர் எப்படி எல்லாம் ஏமாத்துறோம்னு ரொம்ப சுவாரஸ்யமா போகும் ஸ்க்ரீன்ப்ளே!''

 “சன்னி லியோன் குழந்தை மாதிரி!”

''இந்திய நடிகர்களுக்கு நஸ்ருதீன்ஷாவோட நடிக்கிறது பெரிய கனவா இருக்கும். உங்களுக்கு 'ஜஸ்ட் லைக் தட்’ கிடைச்சிருச்சே!''

''நிஜமாவே எனக்குக் கிடைச்ச 'ஜாக்பாட்’ இது. இத்தனை வருஷ சினிமாப் பயணத்துக்குப் பிறகும் நஸ்ருதீன் ஷா அதிகாலை மூணு மணிக்கே ஷாட்டுக்கு வந்து நிக்கிறார். 'ஒரு நடிகனுக்கு நடிப்பு மட்டும் முக்கியமில்லை; பொறுமை, காத்திருத்தல், அர்ப்பணிப்பு அவசியம்’னு எனக்குப் புரிய வைச்சார்!''

 “சன்னி லியோன் குழந்தை மாதிரி!”

''தமிழ்ல '555’ படம் கிட்டதட்ட உங்க ரீஎன்ட்ரி, அப்படித்தானே?''

''ஆமாங்க... நடுவுல தப்பான சில முடிவுகள் எடுத்துட்டேன். ஆனா, '555’ ஆத்மார்த்தமான கதை. சசி சார் '555’ கதையைச் சொன்னதும், என் சரிவை தூக்கி நிறுத்தும் படம் இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். மூணு வருஷம் காத்தி ருந்து காத்திருந்து இந்தப் படத்தில் நடிச்சிருக் கேன். தாடி, மீசையோட ஒரு கெட்டப். இன்னொரு கெட்டப்புக்காக ஒன்றரை வருஷம் உழைச்சு சிக்ஸ்பேக்

 “சன்னி லியோன் குழந்தை மாதிரி!”

கொண்டுவந்தேன். அஞ்சு ஷாட்டுக்கு மட்டுமே தேவைப்பட்டாலும் மொட்டை அடிச்சேன். நான் நடிக்கிற 23-வது படம். ஆனா, பிசிக்கலா, மென்ட்டலா என்கிட்ட நிறைய வேலை வாங்கிய முதல் படம். சினிமாவில் என்கூட வந்தவங்க, எனக்குப் பின்னாடி வந்தவங்க என்னைத் தாண்டிப் போயிட்டாங்க. ஆனா, நான் மட்டும் இப்படியே இருக்கேன்னு நினைக்கிறப்போ  மனசுக்குள்ள ஒரு பாரம் இறங் கும் பாருங்க... அந்த மன உளைச்சலை வார்த் தைகள்ல சொல்லவே முடியாது. அப்போலாம், 'அடுத்தவங்களைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சா, நாம எதுவுமே பண்ண முடியாது. நீ உன்னைப் பத்தி மட்டுமே யோசி’னு ஷங்கர் சார், என்கிட்ட சொன்னதைத்தான் நினைச்சுக்குவேன். என்னை இன்னொரு தடவை நான் நிரூபிக்க, '555’, 'ஜாக்பாட்’ படங்கள் உதவும்!''

''ரொம்ப சீரியஸ் ஆகிட்டீங்க... ஜாலியா சன்னி லியோன் கூட நடிச்ச அனுபவங்கள் சொல்லுங்களேன்!''

''ஜாலியான பொண்ணு. எல்லாரும் அவங்க ரொம்ப தைரியசாலினு நினைச்சுட்டு இருப்போம்ல. ஆனா, சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட அநியாயத்துக்குப் பயப்படுறாங்க. கடல்ல கப்பல்ல வெச்சு ஷூட்டிங். அதுக்கு முன்னாடிலாம் எங்களைக் கிண்டலடிச்சு கேலி பண்ணிட்டு இருந்தவங்க, அன்னைக்கு முழுக்க அமைதியா இருந்தாங்க. 'ஏன் இப்படி இருக்கீங்க?’னு விசா ரிச்சா, 'கடல்ல கப்பல் ஆடிட்டே இருக்கிறது பயமா இருக்கு’னு

 “சன்னி லியோன் குழந்தை மாதிரி!”

சொல்றாங்க. இன்னொரு நாள் சாப்பாட்டுத் தட்டுல பச்சை மிளகாயைப் பார்த்ததுமே அலறிட்டாங்க. ஒருநாள் சாப்பிடும்போது தெரியாம பச்சை மிளகாயைக் கடிச்சு காரம் தாங்கலையாம். எல்லாரும் அவங்களை கிளாமர் சிம்பலா பார்க்கிறாங்க. ஆனா, நிஜத்துல அவங்க குழந்தை மாதிரி!''

''சரி... இதுக்கு முன்னாடி சன்னி லியோன் நடிச்ச படங்கள் ஏதாவது பார்த்துருக்கீங்களா?''

''தெய்வமே... ப்ளீஸ்... நான் வளரும் கலைஞன். இந்த விளையாட்டுக்கு நான் வரலை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism