Published:Updated:

''என்னைப் பார்த்து எல்லோருக்கும் பயம்!''

ம.கா.செந்தில்குமார்படங்கள் : உசேன்

''என்னைப் பார்த்து எல்லோருக்கும் பயம்!''

ம.கா.செந்தில்குமார்படங்கள் : உசேன்

Published:Updated:
##~##
முன் குறிப்பு:
இது நமீதாவின் அனல் பேட்டி. படங்களை ரசித்துவிட்டு, பேட்டியின் கடைசி வரி வரை மிகவும் சீரியஸாகப் படிக்கவும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாப்பா டிரவுசர், மோகினிச் சிரிப்பு, அதட்டும் கண்கள்... நமீதா இஸ் பேக்!  

''ஆளையே காணோமே நமீ... தமிழ் சினிமா உங்களை மறந்திருச்சா?''

''ஹேய்... அப்டிலாம் சொல்லாத. நான்தான் நிறைய சான்ஸ் டெலீட் பண்ணுது மச்சான். சினிமாவும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணு. ஒரே படத்துல விர்ர்ருனு ஹைட் வருவாங்க. பட், அடுத்தடுத்த ஃபிலிம்

''என்னைப் பார்த்து எல்லோருக்கும் பயம்!''

ஃப்ளாப் ஆகுது. எனக்கும் அது நடக்குது. பட், நான் ரொம்ப பிராக்டிக்கல். அது பத்திலாம் வொர்ரி பண்றது இல்ல. தமிழ்ல மட்டும் மாசத்துக்கு பத்து ஸ்க்ரிப்ட்ஸ் கேட்குது. அதுல 99 பெர்சன்ட் கச்சடா. இப்போ வரை ஒரே ஒரு படம்தான் கமிட் பண்ணியிருக்கு. இவ்வளவு எக்ஸ்பீரியன்ஸுக்கு அப்புறமும் ஆரம்பத்துல பண்ண தப்பு நான் செய்யிறதா இல்லை. நல்ல ஸ்க்ரிப்ட், நல்ல பேனர்ல மட்டும்தான் கமிட்டாகுது. ஆனா, யு நோ ஒன் திங்... ரசிகர்களிடம் 'நமீதா கிரேஸ்’ இன்னும் அப்படியேதான் இருக்குது. இப்போ நான் சொல்லுது மச்சான்... நீ எழுதி வெச்சுக்குது... இனிமே 'நமீ... நமீ’ன்னுதான் எல்லாரும் சொல்லுது. ஐ வில் ராக் எகெய்ன்!''

''எல்லாம் ஓ.கே. ஆனா, நமீதான்னா கிளாமர்னு மட்டும் இங்கே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களே. ஏன் உங்களுக்கு இந்த டைரக்டர்ஸ் நல்ல கேரக்டரே தர மாட்றாங்கப்பா?''

''காம்ப்ளெக்ஸ்தான் காரணம். நான் ஸ்க்ரீன்ல வெரி டாமினேட்டிங் பெர்சனாலிட்டி. நடிக்க ஸ்கோப் இருக்குற நல்ல கேரக்டர், படம் முழுக்க டிராவல் பண்ற பவர்ஃபுல் ரோல் கொடுத்தா, நமீதா மத்தவங்களைக் காலி பண்ணிருவானு பயம். இன்ட்ரொடியூஸான டைம்ல பல தப்பான படங்களை செலெக்ட் பண்ணது நான் பண்ண தப்பு. மூணு வருஷமா நான் செலெக்ட் பண்ண எந்த கேரக்டரும் சரி இல்லை. சரி... முடிஞ்சுபோன விஷயம் பேசி நோ யூஸ். செகண்ட் ரவுண்ட்ல நமீ பவர் பெர்ஃபார்மர்னு பேர் வாங்குவா மச்சான்!''

''தப்புப் பண்ண படங்கள்னு எதைச் சொல்வீங்க?''

''ம்ம்ம்... வம்புல மாட்டிவிடப் பாக்குதா? நான் அதெல்லாம் சொல்லாது. அது என்னென்ன படங்கள்னு உனக்கே தெரியுது. 'இந்தப் படத்துல நமீதாவா நடிச்சிருக்காங்க?’ன்னு உங்களுக்கே ஷாக்கிங்கா இருந்த படங்கள்ல என்னை ஆக்ட் பண்ணவெச்சது சில டைரக்டர்ஸ்!''

''அப்ப இயக்குநர்கள் மீது ரொம்பக் கோபத்தில் இருக்கீங்கபோல?''

''டெஃபனட்டா! எவ்ளோ வருத்தம் இருந்தா, நான் இவ்ளோ கோபமாப் பேசுது! இங்க 'ஹ்ம்ம்... ஹீரோயின்ஸ்தானே’ன்னுதான் எங்களை ரிசீவ் பண்றாங்க. ஒரு ரெஸ்பெக்ட்டே இல்லை. ஸ்க்ரிப்ட்டை ஹீரோக்களுக்குக் கொடுக்குது. பட், ஹீரோயின்ஸுக்குக் கொடுக்க மாட்டேங்குது. அப்ப, ஹீரோஸ்தான் முக்கியம்னா, அவங்களை மட்டுமேவெச்சு ஃபுல் ஃபிலிம் எடுக்கலாமே? இது நமீதா மட்டும் ஃபேஸ் பண்ற பிராப்ளம் கிடையாது. இங்கே எல்லா ஹீரோயின்ஸும் இதைச் சமாளிக்கணும்!

பாலிவுட்லயும் இதே பிராப்ளம்தான். கேத்ரீனா கைஃபைவிட ஓர் அழகி இருக்குதா இண்டஸ்ட்ரியில். வெரி கிளாமரஸ் கேர்ள். ஆனா, அதுக்கு பெர்ஃபார்ம் பண்ற மாதிரி யாரும் ஒரு கேரக்டர் கொடுக்க மாட்டேங்குது. என் கேரியர்ல இதுவரை 'பச்சக் குதிரை’ அப்புறம் 'இளைஞன்’... ரெண்டு ஃபிலிம்லதான் எனக்கு குட் கேரக்டர் குடுத்துச்சு!''

''தமிழ் சினிமாவில் மட்டும்தான் இந்தப் பிரச்னையா? மலையாளம், கன்னட சினிமாக்களில் திருப்தியாக நடிக்கிறீங்களா?''

''தமிழ் சினிமாவைவிட அது பெட்டர். கன்னடத்தில் இதுவரை நான் நடிச்ச மூணு படங் களிலும் குட் கேரக்டர்ஸ். இப்போ 'நமீதா ஐ லவ் யூ’னு ஒரு கன்னடப் படத்தில் நடிக்குது. அதுல யோகா டீச்சர் கேரக்டர். ஒரு யுனிவர்சிட்டியில் படிக்கும் நாட்டி பாய்ஸை, நான் யோகா மூலம் திருத்துது. சோஷியல் மெசேஜ் ஃபிலிம்!''

''ரொம்ப உயரமா இருக்கிறதும் உங்களுக்கான வாய்ப்புகளைத் தடுக்குதா?''

''முகம் சரியில்லை, மூக்கு சரியில்லைன்னா, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம். வெயிட் போடாம உடம்பைக் கன்ட்ரோல்ல வெச்சுக்கலாம். ஆனா, உயரமா வளர்றதை எப்படி கன்ட்ரோல் பண்ண முடியும்? பாலிவுட்ல தீபிகா படுகோன், சுஷ்மிதா சென், கேத்ரீனா கைஃப்னு எல்லாமே உயரம்தான். அவங்கள்லாம் உயரம் கம்மி யான ஷாரூக் கான், அமீர் கான் கூட ஆக்ட் குடுக்குதே. உயரம் கம்மி ஹீரோஸ், உயரம் ஜாஸ்தி ஹீரோயின்ஸோட ஆக்ட் பண்றப்போ, ஸ்டூல் போட்டு அது மேல ஏறி நின்னு ஆக்ட் பண் ணட்டுமே? இதெல்லாம் சுத்த ஹம்பக்!''

''என்னைப் பார்த்து எல்லோருக்கும் பயம்!''

''நீங்கதான் மார்க் போடுறதுல ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே... இப்ப உள்ள தமிழ் சினிமா ஹீரோயின்ஸுக்கு மார்க் போடுங்களேன்?''

''எப்பவும் எனக்கு என்னை மட்டும்தான் பிடிக்கும்! டென் மார்க்ஸும் எனக் குத்தான்!''

''கலைஞர் டி.வி-யின் 'மானாட மயிலாட’ நிகழ்ச்சி பண்ணீங்க. அடுத்து, ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்’ நிகழ்ச்சி பண்ணப்போறதா சொன்னாங்க. ஆனா, சத்தமே காணோம்?''

''ஹேய்... நோ கமென்ட்ஸ்!''

''சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய எந்தக் கட்சியில் இருந்து அழைப்பு வந்தது?''

''நோ கமென்ட்ஸ். ஸ்ட்ரிக்ட்லி... நோ கமென்ட்ஸ் அபௌட் பாலிடிக்ஸ் மச்சான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism