Published:Updated:

“சிங்கிளா இருப்பது சிரமமா இருக்கு!”

க.ராஜீவ் காந்தி

##~##

 டாப்ஸி ரொம்ப ஓப்பன் டைப்... ஒருசில கேள்விகளுக்குச் சட்டென உஷ்ணம் அடைந்தாலும், உடனே ஜீரோ டிகிரிக்குக் குளிர்ந்துவிடுவது டாப்(ஸி) சீக்ரெட்!

''எல்லாப் படத்துலயும் கிளாமர் டாலாகவே வந்துட்டுப் போயிடலாம்னு ஐடியாவா?''

''நான் நடிச்ச எல்லாப் படங்களையும் பார்த்துட்டீங்களா? 'ஆடுகளம்’, 'வந்தான் வென்றான்’, அப்புறம் சின்னப் படமா இருந்தாலும் நடிக்க ஸ்கோப் இருந்த 'மறந்தேன் மன்னித்தேன்’னு எல்லாப் படத்திலும் நான் டான்ஸ் மட்டும் ஆடிட்டுப் போயிருக்க மாட்டேன். அடுத்து 'ஆரம்பம்’, 'கங்கா-முனி3’ படங்கள்லயும் செம ஸ்கோப் உள்ள கேரக்டர்ஸ். ஆடியோ ரிலீஸ் விழாக்களுக்கு வரும்போது மினி ஸ்கர்ட், மிடி, டைட் ஜீன்ஸ்னு வர்றது அந்தந்தப் படங்களுக்கான புரொமோஷனுக்காக. அதில் என்ன தப்பு? நான் என்ன 60 வயசுப் பாட்டியா? இப்போதான் நான் ஸ்கர்ட் போட்டுக்க முடியும். இந்த வயசுல இப்படி டிரெஸ் பண்ணாம, என் 60 வயசுல அப்படி டிரெஸ் பண்ணா, நீங்க இந்தக்கேள்வியை அப்போ வந்து கேக்கலாம்!''

“சிங்கிளா இருப்பது சிரமமா இருக்கு!”

''ஓ.கே... உங்க கூட நடிச்ச ஆர்டிஸ்ட்கள் பத்திச் சொல்லுங்க. முதல்ல... அஜித்?''

''அஜித் சார் எப்பவுமே குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர்ற ஆள். சினிமா இமேஜ், பாப்புலாரிட்டி பத்திலாம் கவலைப்படாம,  தன் குடும்பத்துக்கு நிறைய நேரம் செலவழிக்கிற பெர்சன். 'ஆரம்பம்’ படத்துல நான் ஜர்னலிஸ்ட்டா நடிக்கிறேன். அஜித் சார் கூட படம் முழுக்க வருவேன். ஒரு தடவை 'ஆரம்பம்’ படம் பத்தி நான் சொல்லாததை எல்லாம் தப்பு தப்பா ட்வீட்டர்ல எழுதிட்டாங்க. இதனால ரெண்டு நாள் வருத்தத்துல இருந்தேன். அப்ப ஆறுதல் சொல்லி என்னைத் தேத்துனது அவர்தான். 'சைல்ட்.. டோன்ட் வொர்ரி. இன்னும் கொஞ்ச நாள்ல பிரமாதமா டீஸர் போடப்போறோம். அப்புறம் யாரும் இதைப் பத்தி பேச மாட்டாங்க... இதெல்லாம் இங்கே சகஜம்’னு அவ்வளவு உற்சாகப்படுத்தினார்!''

''நயன்தாரா?''

'' 'ஆரம்பம்’ ஷூட்டிங்ல நயன்தாராகூட ஸ்பாட்டுக்கு வெளியே அதிகம் பேசினது கிடையாது. நான் உண்டு, என் வேலை உண்டுனு எப்பவுமே இருப்பேன். அவங்க என்னைவிட சிரீயஸா இருந்தாங்க!''

''தனுஷ்?''

''அவரோட ரீச் ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'ராஞ்சனா’ பார்த்துட்டு அவர்கிட்ட பேசினேன். எதுவுமே கஷ்டம் கிடையாதுனு நினைப்பார். அதுதான் அவரோட பலம்!''

''ஆர்யா?''

(சிரிக்கிறார்...) ''எல்லாருக்குமே தெரியும்... ஆர்யா மாதிரி ஜாலியான, துறுதுறு ஆளை என் வாழ்க்கைல பார்த்ததே கிடையாது. ரொம்ப எனர்ஜடிக் ப்ளஸ் சேட்டைக்காரர். அவர் இருக்குற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும்!''  

''சமந்தா, ஹன்சிகானு ஹீரோயின்கள் எல்லாம் காதலில் விழம் சீஸனாச்சே இது!''

(சின்ன வெட்கத்துடன்) ''யெஸ்... ரொம்ப சந்தோஷமா இருக்கு. முன்னாடிலாம் சினிமா ஹீரோயின்ஸ் காதலை மறைப்பாங்க. ஆனா, இப்ப அப்படி இல்லை. இது ரொம்ப நல்ல விஷயம். இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப நாளா சிங்கிளாவே இருக்கோமேனு எனக்கே ஃபீலிங்ஸா இருக்கு. தனிமையை விரட்ட சிரமமா இருக்கு. ஆனா, தமிழ், தெலுங்கு, இந்தினு பறந்துட்டே இருக்கிறதால எந்த ஊர்லயும் அதிக பட்சம் ஒரு வாரம்கூட இருக்க முடியலை. அப்புறம் எப்படி எனக்கான பையனைக் கண்டுபிடிக்க முடியும்!''

“சிங்கிளா இருப்பது சிரமமா இருக்கு!”

''மறக்க முடியாத பரிசு?''

  ''காலேஜ் ஃபைனல் இயர்ல கொண்டாடின பிறந்த நாளுக்குக் கிடைச்ச பரிசை மறக்க முடியாது. என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பத்திக் குட்டிக் குட்டி கவிதையா எழுதிக் கொடுத்து வாழ்த்தினாங்க. அந்தக் கவிதைகளை இன்னமும் வெச்சிருக்கேன்!''

''எதிர்காலத் திட்டம் என்ன?''

  ''அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஆனா, என் கேரியர் முடிஞ்சதும் என்னைப் பத்தி எதுவுமே தெரியாத ஒரு நாட்டுல போய் செட்டில் ஆகணும். மிச்ச வாழ்க்கையை ஒரு சராசரி பொண்ணா வாழணும்!''