ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

“சம்பளம் கொடுக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும்!”

க.ராஜீவ்காந்தி

##~##

 'அட... ஆமால்ல..!’ என்ற இரண்டு வார்த்தைகளையே பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலாக்கிவிட்டு அடுத்த கேள்விக்குத் தாவிவிடுவது பிரபுதேவா ஸ்டைல்.  

''பேட்டி கொடுக்கப் பயந்துக்கிட்டே தமிழ் நாட்டுப் பக்கம் வர மாட்டேங்கிறீங்களானு கூட கேக்கிறாங்க பாஸ். ஆனா உண்மையைச் சொன்னா, தமிழ்நாட்டை நான் ரொம்ப மிஸ் பண்றேன். அஜய் தேவ்கன், சல்மான் கான் ரெண்டு பேர் படமும் புக் ஆகியிருக்கு. முதல்ல அஜய் படம்... அப்புறம் சல்மான் படம். ரெண்டையும் முடிச்சுட்டுத்தான் தமிழ்நாடு பக்கம் வர முடியும். ஆனா, அங்கேதான் நம்மளை மறக்கடிக்கிற அளவுக்கு புதுப்புது பசங்க வந்து பட்டையைக் கிளப்புறாங்களே! சினிமா ஒரு பொழுதுபோக்குங்கிறதைத் தாண்டி என்னென்னமோ யோசிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மத்தபடி நம்மளை தமிழ் சினிமாப் பக்கம் எப்ப கூப்பிடுறாங்களோ, அப்ப வருவேன். ஆனா, யாராச்சும் முதல்ல என்னைக் கூப்பிடட்டும்!''

''நல்லா டான்ஸ் ஆடும் ஹீரோக்களை நீங்க பட்டியலிட்டதில், விஜய் பேரை விட்டுட்டீங்கனு பரபரப்பாச்சே..!''  

''எப்படி விட்டுப்போச்சுனு தெரியலைங்க. ஆனா, நான் சர்ட்டிஃபிகேட் கொடுத்துதான் விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும்னு ஊரு உலகத்துக்குத் தெரியணுமா என்ன? இதெல்லாம் ஒரு பிரச்னையா? இப்ப என்ன... அந்த லிஸ்ட்ல விஜய் பேரை டாப்ல சேர்த்துக்கங்க!''\

“சம்பளம் கொடுக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும்!”

''முழுக்கவே டான்ஸ் படமா 'எனிபடி கேன் டான்ஸ்’னு ஒரு படத்துல நடிச்சீங்க... பெரிய பட்ஜெட், பெரிய விளம்பரங்கள்னு பண்ணியும் அந்தளவுக்கு வரவேற்பு இல்லையே!''

''அந்தப் படம் தமிழ்நாட்டில் எப்படி ரிசீவ் ஆச்சுனு தெரியலை. ஆனா, வட இந்தியாவில் ரொம்ப நல்லாப் போச்சு. 'இந்திய சினிமாவில் புது முயற்சி’னு கொண்டாடிட்டாங்க. பாலிவுட்ல அந்த வருஷத்தோட பெரிய ஹிட்களில் அதுவும் ஒண்ணு!''

''நீங்க இயக்கிய இந்திப் படங்கள் வசூல் அள்ளினாலும், விமர்சகர்களிடம் நல்ல பேர் வாங்கலையே!''

''இப்ப ஒரு நிஜம் சொல்லவா..? நான் இது வரை என் படங்களுக்கான எந்த விமர்சனத்தையும் படிச்சதுகூட இல்லை. படிக்கவும் மாட்டேன். இத்தனை வருஷத்துல எவ்வளவோ பார்த்தாச்சு. 'ரவுடி ரத்தோர்’ படத்துக்கு ஒரே ஒரு ஸ்டார் கொடுத்தாங்களே. அதை எல்லாம் நான் கண்டுக்கவே இல்லை. நான் என் தயாரிப்பாளருக்கு மட்டும்தானே உண்மையா இருப்பேன். எனக்கு சம்பளம் கொடுக்கிறவங்களைத்தானே சந்தோஷப்படுத்த முடியும்? எல்லாரையும் திருப்திப்படுத்துறது முடியாத காரியம். அது, அவங்கவங்க கருத்துனு நினைச்சுட்டுப் போக வேண்டியதுதான்!''

''ரஜினி, கமலைவெச்சு படம் இயக்கும் 'கனவுத் திட்டம்’ எதுவும் இல்லையா?''

''ஒரு படத்துக்கு முதல்ல கதைதான் மாஸா அமையணும். அப்புறம் கதை என்ன கேட்குதோ, அவங்கதான் என் சாய்ஸ். ஆனா, ஒருவேளை கதை டிமாண்ட் பண்ணாலும் அவங்களோட படம் பண்ண பயமாத்தான் இருக்கு. நீங்க கேட் கவும்தான் நம்ம 'ட்ரீம் புராஜெக்ட்’ என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன். 'லார்டு ஆஃப் த ரிங்ஸ்’ மாதிரி பிரமாண்டமா ஒரு படம் பண்ண ணும்னு ஆசை. அந்தக் கதையைவிட சுவாரஸ் யமான கதைகள் ராமாயணம், மகாபாரதத்தில் இருக்கு. அப்படி ஒரு கதையைத் தேடிப் பிடிச்சு படமாக்கணும்!''

''ரமலத்கூட பேசறது உண்டா?''

''இல்லைங்க... இப்ப எதுக்கு அவங்களைப்பத்தி பேசிக்கிட்டு? வேணாமே!''

''இன்னும் எத்தனை நாள் தனியா இருப்பீங்க?''

''என் மேல அக்கறை எடுத்துக் கேட்டதுக்கு நன்றி. அப்படி எதுவும் சந்தோஷமான செய்தி சொல்ற நேரம் வந்தா, நிச்சயம் உங்களுக் குத்தான் முதல்ல சொல்வேன்!''