ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

சந்தானம், சிங்கம்புலி, சூரி... தொகுர்கிறார் தேன்ன்ன்னடை!

க.ராஜீவ் காந்தி, படங்கள்: கே.ராஜசேகரன்

##~##

''ஏய்... இன்னா என்கிட்டியே தொகுர்றியா? இன்னா நென்ச்சுனுக்கீற... என்னான்டயே எடக்குமடக்குப் பேட் டியா?    நின்னு வெளாடுவா இந்த மது... படா பேஜாராயிடுவ... பரால்லயா?'' - பக்கா சென்னைத் தமிழில் எகிறுகிறார் 'தேன்ன்ன்ன்னடை’ மதுமிதா.

''பார்க்க ஷோக்கா இருக்கிற நீங்க ஏன் ஹீரோயினா நடிக்கக் கூடாது?''

''ஹே ஹேய்... ஓப்பினிங்கே ஷோக்கா கீதுப்பா! ஆனா, ஹீரோயின்லாம் எம்மா வருஷம் நிக்க முடியும் சொல்லுங்க... அஞ்சு வருஷம் சுகுர்றா நிக்க முடியுமா? ஆனா, மனோரமா ஆச்சி, கோவை சரளாலாம் பாருங்க, எத்தினி வருஷம் சும்மா நச்னு ஆணியடிச்ச மாதிரி இருக்காங்க. அதான் காமெடி ரூட்டுக்கு வந்தேன். மத்தபடி ஹீரோயின் ரோலும் வந்துச்சு. நான்தான் ஓ.கே. ஓ.கே. சொல்லலை. அட, இன்னா லுக்கு? உண்மை நைனா... நம்பு!''

''ஒரு படத்துக்குப் பிறகு சந்தானம் உங்ககூட ஜோடி சேரலையே. 'ஓ.கே. ஓ.கே’-ல நீங்க அவரைவிட நிறைய ஸ்கோர் பண்ணிட்டீங்கனு நினைச்சிருப்பாரோ?''

''அடங்... ரெண்டாவது கொஸ்டீன்லயே டமால் அடிக்கிறியே கண்ணு! ஏதோ பொழப்பு கொஞ்சம் நல்லபடியா ஓடிட்டு இருக்கு. அதுல ஏன் உங்களுக்கு இவ்ளோ காண்டு? அந்தப் படத்துல எனக்கு நிறைய டயலாக். நல்லா ஸ்கோர் பண்ற கேரக்டர். அதனால அதுக்கு ஈக்வலா ஒரு ரோல் கிடைச்சா கொடுப்போம்னு சந்தானம் சார் நினைச்சிருக்கலாம். அப்படி பாசிட்டிவா யோசிச்சிப் பயகு நைனா!''

சந்தானம், சிங்கம்புலி, சூரி... தொகுர்கிறார் தேன்ன்ன்னடை!

''சமந்தா, காஜல், அனுஷ்கா, ஹன்சிகா, டாப்ஸி... இவங்களுக்கு மார்க் போடுங்களேன்!''

''ஹன்சிகா, டாப்ஸி, காஜல்கூட நடிச்சிருக்கேன். சமந்தாவை நேர்ல பார்த்தது இல்லை. இவங்களுக்கெல் லாம் நான் மார்க் போடலாம். ஆனா, பதிலுக்கு அவங்க எனக்கு மார்க் போட்டா? கல்லா கலீஜ் ஆயிடும். அதனால எல்லாருக்கும் பாஸ் மார்க்னு போட்டுக்கங்க!''

''அப்ப... ஹீரோக்களுக்கு?''

''டாஸ்மாக் போகாத எல்லாருக்குமே பாஸ் மார்க்!''

''தேன்ன்ன்ன்ன்னடை சாப்பிட்டு இருக்கீங்களா?''

''திருப்பதிக்கே லட்டா? பழநிக்கே பஞ்சாமிர்தமா? திருநெல்வேலிக்கே அல்வாவா? மைண்ட் இட்!''

''உதயநிதியை சினிமாவுல திட்டினா மாதிரி, நிஜத்துல யாரையாவது திட்டிருக்கீங்களா?''

''அந்த அளவுக்கு தரை டிக்கெட்டா இறங்கி திட்டினது இல்லை. ஆனா, ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையன் நான் பார்க்கணும்னு பஸ் ஸ்டாண்ட்ல ஓவரா சீன் போட்டான். பக்கத்துல போய் 'அடுத்த தடவை இத்தவிட பெட்டரா ட்ரை பண்ணு... மொக்கையாக் கீது’னு சொல்லிட்டு வந்துட்டேன்!''

''பவர் ஸ்டார் ஜெயில்ல இருந்து ரிலீஸான பிறகு நடிக்கிற படத்துல, உங்களுக்கு ஹீரோயின் வாய்ப்புக் கிடைச்சா நடிப்பீங்களா?''

''யாரா இருந்தா இன்னா? பேமன்ட் பேலன்ஸ் இல்லாமக் கொடுத்தா, நமக்கு ஓ.கே-தான்!''

''கவுண்டமணி, செந்திலை உதைச்சது ஹிட்... கோவை சரளா, வடிவேலுவை உதைச்சது ஹிட்... அப்படி நீங்களும் யாரையாவது உதைக்கணும்னா... சந்தானம், சிங்கம்புலி, 'பரோட்டா’ சூரி... யார் உங்க சாய்ஸ்?''

''மூணு பேருமே கிடைச்சாக்கூட உதைக்க நான் ரெடி... ஆனா, அது சப்ஜெக்டைப் பொறுத்தது சாமியோவ்!''

''ஆர்த்தி மார்க்கெட்டை அநியாயமாக் காலி பண்ணிட்டீங்கனு சொல்லலாமா?''

''அப்படிலாம் கிடையாது. நான் வந்த பிறகு,  எங்க எல்லார் மார்கெட்டுமே அதிகமாயிடுச்சுனுதான் சொல்லணும். அவங்க தெலுங்குல கலக்கிட்டு இருக்காங்க. அதனால இங்கே அவ்வளவாப் பார்க்க முடியலை. அவ்வளவுதான்!''

''உண்மையைச் சொல்லுங்க...  'ஓ.கே. ஓ.கே.’ படத்துல மேக்-அப் இல்லாமத்தானே நடிச்சீங்க?''

  ''ஹலோ... இன்னா நம்மகிட்டயே போட்டு வாங்கிறயா? அதுல என் பேமன்டைவிட எனக்கு ஆன மேக்-அப் செலவுதான் ஜாஸ்தி. அக்காங்!''