##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''சிம்பு, பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் இத்தனை பேரை ஒண்ணா வேலை வாங்கறது கஷ்டமாச்சே?''

''ஏற்கெனவே எடுத்து எக்கச்சக்க வெற்றி பெற்ற படத்தைத்தானே மீண்டும் செய்றோம். யாருக்கு எந்த அளவு கேரக்டர்னு கண் முன்னாடி சினிமாவாகவே இருக்கே. அதனால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, ஆந்திராவை விட்டுக் கிளம்பியபோதே, எல்லோரும் பயமுறுத்தினாங்க. சிம்புவும்

நானும் ரெண்டே நாளில் செட்டாகி, இப்போ பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். எல்லோரும் அவ்வளவு டேலன்டட் ஆர்ட்டிஸ்ட். எந்த ஈகோவும் இல்லாம, ரொம்ப ஹோம்லியா படம் பண்ணிட்டு இருக்கோம்.
ஆனா, படத்தில் எந்த கேரக்டரும் நல்ல வங்க இல்லை. முதலாளியிடம் வசூலிச்ச காசை, தானே செலவழிக்கும் கேபிள் ராஜா, பாலியல் தொழிலாளியா இருந்துட்டே, இன் னும் பெருசாத் தன் தொழிலை விரிவாக்க நினைக்கும் சரோஜா, சுயநல இளைஞனா பரத்னு பல நோக்கம் உள்ளவங்க ஒரு முனையில் சந்திக்கிறாங்க. அப்போ என்ன நடந்தது, இக்கட்டான தருணங்களில் மனித மனம் பக்குவம் அடைய வாய்ப்பு இருக்கான்னு ஆராய்கிற படம்!''
''தெலுங்கு வெர்ஷனில் அனுஷ்கா ரொம்ப போல்டா நடிச்சு இருந்தாங்க. அதே டோன் தமிழிலும் இருக்குமா? இல்லை, அடக்கி வாசிப்பாங்களா?''
''எனக்குத் தெரிஞ்சு அனுஷ்கா இவ்வளவு தைரியமா வேறு எந்தப் படத்திலும் நடிச்சதா நினைவில் இல்லை. தமிழிலும் அவங்க நடிச்சாதான், அந்தக் கேரக்டருக்கு லைஃப் இருக்கும். ஒரு பார்வை பிசகினாலும், ஒரு வார்த்தை தடு மாறினாலும், விரசத்தைத் தொட்டுவிடும் இடங் களை அவ்வளவு இயல்பாக் கடந்து வந்து இருக்காங்க அனுஷ்கா. அவர் ஹீரோ, ஹீரோயின் எல்லாம் கலந்த ஒரு கலவை. அவர் நினைச்சா, பெரிய நதி மாதிரி ஓடி பிரமாண்டப்படுத்திடுவார். அந்த வேகத்தை அணை கட்டி மின்சாரம் எடுக்கும் வித்தை தெரிஞ்ச இயக்குநர்கள் அமையணும்!''
''தமிழ் சினிமா எப்படி இருக்கு?''
''சூப்பர்.தெலுங்கில் நாங்கள் பிரமாண்டமா எடுக்கிறோம். செலவு பண்றோம். உண்மை. ஆனா, பொழுதுபோக்கோட சேர்த்து நல்ல விஷயமும் சொல்லும் சினிமாக்களுக்கு தமிழ்தான் பெஸ்ட்!

'பருத்தி வீரன்’, 'சுப்ரமணியபுரம்’, 'விண்ணைத் தாண்டி வருவாயா?’, 'மைனா’ன்னு எத்தனை ரசனையான சினிமாக்கள். 'கற்றது தமிழ்’ ராமை எப்போ சந்திப்போம்னு ஆவலா இருக்கு. தமிழ் இயக்குநர்களை மிஞ்ச தென்னிந்தியாவில் யாரும் இல்லைன்னு தோணுது!''
''சரி, இப்ப பேசலாமே... உங்களுக்கும் அனுஷ் காவுக்குமான அண்டர்ஸ்டாண்டிங் பத்தி...''
''உயிரைக் காப்பாத்துற டாக்டர்கள் இருக்கிற இடத்துல, சில போலிகளும் இருக்கிற மாதிரி, சில பத்திரிகையாளர்கள் இருக்காங்க. நானும் அனுஷ்காவும் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். எங்க நட்பு... நாகரிகத்தின் அடையாளம். என்னால் அவங்க பேர் ரொம்பவே டேமேஜ் ஆனதைப்பத்தி எனக்கே ரொம்ப சங்கடமா இருக்கு. ஆனா, அவங்க அதைப்பத்தி கவலையே படலை. மற்ற

துறைகளைப்போல ஏன், சினிமாவில் மட்டும் ஆண்-பெண் இடையிலான நட்பு கௌரவ அடையா ளம் பெறுவது இல்லை? பொது வாழ்க்கையில் இருந்தால், இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்னு சொல்லி, தட்டிக் கழிக்க முடியாது!''
''அப்போ உங்களுக்கும் அனுஷ்காவுக்கும் இடையில் ஒன் அண்ட் ஒன்லி நட்பு தானா?''
''எனக்கு அனுஷ்கா... அம்மா மாதிரி. அம்மாங்கிறது எவ்வளவு உயர்ந்த ஸ்தானம். அந்த இடத்தைத்தான் நான் அவங்களுக்குக் கொடுத்திருக்கேன். எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகப்போகுது. என் கல்யாண வாழ்க்கை நிம்மதியாக இருக்க வாழ்த் துங்கள். அது போதும் எனக்கு!''