ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்
##~## |
'84 கிலோ இருந்தேன். இப்போ 14 கிலோ காலி. நான் எப்படி இருக்கேன்னு பார்க்க எனக்கே ஆசை. அதான் இந்த போட்டோ ஷூட். 'ஐ’ ஷூட் முடியுற வரை, இன்னும் பத்துப் பத்து கிலோவா குறைக்கணும். அப்பப்ப போட்டோ ஷூட் எடுத்துக்கலாம்!’ - சில வாரங்களுக்கு முன் நடந்த போட்டோ ஷூட்டின்போது புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராமிடம் விக்ரம் சொன்ன வார்த்தைகள் இவை.
சின்னப் பையனாக மாறிக்கொண்டிருக்கும் 'பிதாமகனி’ன் டயட் ரகசியங்கள் இங்கே...

விக்ரம், அரிசி சாப்பாடு சாப்பிட்டுப் பல மாதங்கள் ஆகிறதாம். பெரும்பாலும் பச்சைக் காய்கறிகள் அல்லது பழங்கள்தான் மெயின் கோர்ஸ். அதுபோக புரதங்கள், சூப், எண்ணையில்லாத பெப்பர் சிக்கன் ஆகியவை மட்டுமே. மசாலா உணவுகளுக்கு முற்றிலுமாகத் தடா!

தினமும் ஒரு மணி நேரம் டிரெட் மில் ரன்னிங். இரண்டு மணி நேரம் ஜிம் பயிற்சிகள். வீட்டில் இருக்கும்போது பத்து நிமிடங்கள் சும்மா இருந்தாலும், சைக்கிள் ஓட்டத் தொடங்கிவிடுவார்.


காலை, மதியம், இரவு என உணவு வேளையை மறந்தே பல நாட்கள் ஆகிறது. பசியுடன் சாப்பிட அமர்ந்து பசியுடனே எழுந்திருக்க வேண்டும் என்பதே 'ஐ’ விதி.

டயட்டும் ஜிம் பயிற்சிகளும் உடலை ஏகத்துக்கும் சுருக்கி இறுக்க, சட்டையைக் கழட்டினால் பளிச்சென விம்முகிறது சிக்ஸ் பேக்.


எப்போதும் அகோர பசியுடனே இருப்பதால், சமயங்களில் டயட் கட்டுப்பாட்டை மறந்து கையில் கிடைப்பதை சாப்பிட்டு விடுகிறாராம். அப்படியான தருணங்களில், கஷ்டமாக இருந்தாலும் புஷ்டி உணவுகளிடமிருந்து அவரைப் பிரிப்பது மனைவி ஷைலஜாவின் வேலை.

எடை குறையக் குறைய விக்ரமின் பழைய உடைகள் அனைத்தும் மிகவும் லூஸாகிவிட்டது. அதனால் பத்து நாட்களுக்கொரு முறை புதுப்புது ஆடைகளை ஷாப்பிங் செய்தபடி இருக்கிறார். 'அப்போ ரொம்ப சந்தோஷமா இருப்பேன் பாஸ்!’ என்று சிரிக்கிறார்.

'ஐ’ படத்தில் ஒரு பாதியில் இயல்பான விக்ரம். மறுபாதி முழுக்க இந்த சூப்பர் ஸ்லிம் கெட்டப். அதனால், படப்பிடிப்பு முடியும் நெருக்கத்தில் இன்னும் மெலிவாராம் விக்ரம்.
என்னாது... இன்னுமா?!