Published:Updated:

“நான் டார்லிங்னு கூப்பிடுறது அவரை மட்டும்தான்!”

“நான் டார்லிங்னு கூப்பிடுறது அவரை மட்டும்தான்!”
“நான் டார்லிங்னு கூப்பிடுறது அவரை மட்டும்தான்!”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜி.வெங்கட்ராம், ஆ.முத்துக்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

 ''ஒரு தடவை ஷூட்டிங்ல சின்ன விபத்து. வலது கை மணிக்கட்டுல  சின்ன ஃப்ராக்சர்.  அங்கே ஒரு சின்ன ப்ளேட் வைச்சிருக்காங்க. அதனால ஏர்போர்ட்டுக்குப் போகும்போதெல்லாம் மெட்டல் டிடெக்டர் 'பீங் பீங்’னு சத்தம் கொடுத்து என்னை சந்தேக லிஸ்ட்ல வைச்சிரும். அவ்ளோ நேரம் என் பக்கத்துலயே நின்னு சைட் அடிச்சிட்டு இருக்கும் பசங்க, உடனே பதறி விலகி நிப்பாங்க பாருங்க... ஜாலியா இருக்கும்!'' சின்னச் சின்ன  ட்வீட்கள் போல பேசும் பிந்து மாதவியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் 'லைக்’கிடத் தோன்றுகிறது. 'சி சென்டர் சிலுக்கு’ என்று பட்டம் அளிக்கலாம் போல... 'கேடி பில்லா’, 'தேசிங்கு ராஜா’ என தொடர்ந்து ஹிட் நம்பர்கள் கொடுத்து விட்டு அடுத்தடுத்த கால்ஷீட் பக்கங்களுக்குத் தாவுகிறார்...  

''வளரும் ஹீரோ, சின்ன பட்ஜெட், டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்... இதுதான் உங்க சக்சஸ் ஃபார்முலாவா?''

''தமிழ்நாட்டில் சென்னை தவிர எனக்கு வேற எந்த ஊர் பேரும் தெரியாது. ஆனா, சென்னை தாண்டியும் எங்கேயும், ' 'கேடி பில்லா’ படத்துல நிஜமாவே கம்பு சுத்தினீங்களா?’னு கேக்குறாங்க. அந்த அளவுக்கு ரீச்சாகி இருக்கோம்னு சந்தோஷமா இருக்கு. எனக்குத் தேவை நல்ல ஸ்கிரிப்ட். மத்தபடி சின்ன ஹீரோ, மினி பட்ஜெட் பத்தி கவலைப்பட மாட்டேன்!''

“நான் டார்லிங்னு கூப்பிடுறது அவரை மட்டும்தான்!”

''நீங்க ரெண்டு ஹிட் கொடுத்துட்டீங்கதான். ஆனா, நஸ்ரியா ஒரே படத்துல பிக்கப் ஆகி, ஓஹோனு போயிட்டு இருக்காங்களே?''

''நல்ல விஷயம்தானே... இதுல வருத்தப்பட என்ன இருக்கு? அதே சமயம் என்னைவிடத் திறமையான, அழகான பெண்கள் ஏகப்பட்ட பேர் இன்னமும் சினிமா வாய்ப்புக்காகக்  காத்திருக்காங்களே. எல்லாத்துக்கும் அதிர்ஷ்டமும் நேரமும் வேணும். அதனால நஸ்ரியா மேல பொறாமைப்பட எதுவும் இல்லை. அவர் வளர்றது நல்ல விஷயம்!''

''சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள்?''

''அப்படி யாருமே இல்லையே. லக்கி, பூஜா, நந்து, ராஜ், பாபினு சினிமாவில் இல்லாதவங்கதான் இப்பவும் என் நண்பர்களா இருக்காங்க. ஒரு வாரம் லீவ் கிடைச்சாக் கூட, இவங்களைக் கூட்டிக்கிட்டு கடல் இருக்கிற ஏதாவது இடத்துக்கு ட்ரிப் கிளம்பிடுவேன். அப்படி நாங்க அடிக்கடி போற இடம்...  கோவா. சமீபத்தில்கூட கார்லயே  சென்னைல இருந்து கோவா போயிட்டு வந்தோம். அடுத்து நாங்க போகப் போற ஸ்பாட்... பாலி!''

''உங்ககூட நடிச்ச ஹீரோக்கள் பத்திச் சொல்லுங்களேன்?''

''விமல், சிவகார்த்திகேயன் ரெண்டு பேருமே கலாய் பார்ட்டிகள். சின்னதா ஒரு வார்த்தை தப்பாப் பேசிட்டாக்கூட அதை வைச்சு கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க. இவங்க ரெண்டு பேர்கிட்டயும் ரொம்ப ஜாக்கிரதையா  இருக்கணும். பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி பழகுவார் அருள்நிதி. விஷ்ணு, ஸ்பாட்ல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அந்தப் படத்தின் கேரக்டருக்கு சின்சியரா இருப்பார்!''

''ஆனா, இவங்க எல்லாரையும்விட சூரிதான் உங்களுக்கு ரொம்ப செல்லம்னு கேள்விப்பட்டோம்!''

''உண்மைதான்! சூரியை நான் எப்படிக் கூப்பிடுவேன் தெரியுமா? 'டார்லிங்’னு! அவர் என்னை 'மச்சி’னு கூப்பிடுவார். அவரோட மனைவிகிட்டயே இதைச் சொல்லி நான் ஓ.கே வாங்கிட்டேன். நான் இப்படிக் கொஞ்சமாச்சும் தமிழ்ல பேசுறதுக்கு சூரியோட டியூஷன்தான் காரணம். அவர்தான் என் தமிழ் மாஸ்டர்!''

''சூரி உங்களுக்கு டார்லிங்... அப்போ சிவகார்த்திகேயன்?''

''சிவா, என் ஃப்ரெண்ட். சிரிச்சுச் சிரிச்சுப் பேசி அவர் இருக்கிற இடத்தை எப்பவும் கலகலனு வைச்சுப்பார். ரொம்ப நல்ல மனிதர். அவங்க மனைவி ஆர்த்தி என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஷ§ட்டிங் இல்லாத நாட்கள்ல சிவாகிட்ட பேசுறேனோ இல்லையோ, ஆர்த்திகிட்ட 'ஹாய் ஹலோ’வாது சொல்லிடுவேன். போதுமா?!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு