சினிமா
Published:Updated:

“என்னைப் பார்த்து ஏன் அந்தக் கேள்வி கேட்டீங்க?”

க.ராஜீவ் காந்தி, படங்கள்: கே.கார்த்திகேயன்

##~##

யார் சிக்கினாலும் 'கய்வி கய்வி’ ஊத்தும் பிக் எஃப்.எம். ஆர்.ஜே. பாலாஜியை, நாம் 'கய்வி கய்வி’ ஊத்தினால் என்ன?  

''தமிழ்நாட்டுல தமிழ் சினிமாக்களுக்கு பிரச்னை வராம இருக்க மூணு ஐடியா சொல்லுங்க?''

''முதல் ஐடியா... எந்தப் படத்தையும் தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணக் கூடாது. ரெண்டாவது ஐடியா... ஹீரோவுக்கு 18 வயசுக்குள்ள இருக்கிற மாதிரி படம் எடுங்க. ஏன்னா, 18 வயசுக்குள்ள ஓட்டு போடுற உரிமை கிடையாதுல்ல. மூணாவது முக்கியமான ஐடியா... பட ரிலீஸுக்கு முன்னாடி உணர்ச்சிவசப்பட்டு எமோஷனலாகி குரல் கொடுக்கிறதை நிப்பாட்டணும்!''

''சினிமால யாரு உங்களுக்குப் போட்டி?''

'' 'சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன்தான். அவரோட அழகுக்கு ஈடுகொடுத்து நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு பவுடரும் லிப்ஸ்டிக்கும் போடுறேன். ம்ஹும்... தலைவன் பக்கத்துலயே போக முடியலை!''

''சிம்பு-ஹன்சிகா, ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா... ஒப்பிடுக!''

''ஏன் சித்தார்த்-சமந்தாவை விட்டுட்டீங்க? தியாகராஜ பாகவதர்- டி.ஆர்.ராஜகுமாரில இருந்து ஆரம்பிங்க பாஸ். அது ஏங்க என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேக்கத் தோணுச்சு!''

“என்னைப் பார்த்து ஏன் அந்தக் கேள்வி கேட்டீங்க?”

''ரிலையன்ஸ் நிறுவனம்தானே உங்க எஃப்.எம்-மை நடத்துது. ரிலையன்ஸ்ல ஏன் இப்பல்லாம் 500 ரூபாய்க்கு ரெண்டு மொபைல் கொடுக்கிறதில்லை?''

''ஏன்னா எங்களை மாதிரி வெட்டி ஆபீஸர்களுக்கு சம்பளம் கொடுக்கணும்ல! நானே ரிலையன்ஸுக்கு 33 ஆயிரம் ரூபாய் பில் பாக்கி வெச்சிருந்தேன். அதையெல்லாம் தாண்டியும் எனக்கு இந்த வேலை கொடுத்த பெரிய மனசுக்காரங்க பாஸ் அவங்க!''

'' 'தீயா வேலை செய்யணும் குமாரு’ ஷூட்டிங் சமயம் ஹன்சிகா, சிம்பு பத்தி உங்ககிட்ட சொன்ன ரகசியம் ஒண்ணு சொல்லுங்களேன்!''

''ஹன்சிகா, சிம்பு பத்தி என்கிட்டயா..? ஷூட்டிங் டைம்ல அவங்க என்னை கிராஸ் பண்றப்பலாம், 'யார்றா இந்தக் கண்ணாடிக்காரன்?’கிற மாதிரி பார்த்துட்டுப் போய்டுவாங்க. அதுவும் போக, அவங்க நல்லா இங்கிலீஷ் வேற பேசுவாங்க. ஸோ, நோ தகவல் தொடர்பு பெட்வீன் அஸ். நான் சித்தார்த்கிட்டதான் அதிகம் பேசுவேன்!''

''மாட்டினீங்க... அப்போ, சமந்தா பத்தி சித்தார்த் என்ன சொன்னாரு?''

''இந்தப் பேட்டி வந்த பிறகு கண்டிப்பா, 'என்கிட்டப் பேசாதே!’னு சொல்லிடுவார். சமந்தா பத்தி நான்தான் அவர்கிட்ட, 'செம க்யூட் பொண்ணு. சூப்பரா இருக்கு. விடாம கன்டினியூ பண்ணுங்க’னு நாலைஞ்சு பிட்டு போட்டேன்!''

'' 'பவர் ஸ்டார்’ ஜெயில்ல இருந்து வெளிய வந்தப் பிறகு திரும்ப, 'பவர் கட்’ ஆரம்பிச்சிருச்சு. இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''என்னங்க 'தசாவதாரம்’ ஓப்பனிங் சீன் மாதிரி கேக்கிறீங்க? பவர் ஸ்டாரோட அஞ்சு கோடி ரசிகர்கள்ல நானும் ஒருத்தன். இட்ஸ் த பவர் ஆஃப் த மேன். ரியல் பவர். கோலிவுட்டின் அர்னால்டு அவர். அவரோட ஸ்கின், ஜூலியா ராபர்ட்ஸ் கன்னத்தைவிட அவ்ளோ க்ளோவா இருக்கும். ஹி இஸ் மை தலைவன். அவருக்கு பீகார்லகூட ரசிகர் மன்றம் இருக்கு. அவரை டச் பண்ணா, ஆல் இந்தியாவே அலறும்!''

“என்னைப் பார்த்து ஏன் அந்தக் கேள்வி கேட்டீங்க?”

''ஒரு படத்துல நீங்கதான் ஹீரோ. ஆனா, படம் முழுக்க உங்களுக்கு வசனமே கிடையாது. நமீதாதான் ஹீரோயின். ஓ.கே-வா?''

''படத்தை பலான பலான சைட்டுல மட்டும் ரிலீஸ் பண்ற ஐடியாவா? நான் குடும்பப்பாங்கான பையன். என்னை தென்னகத்தின் சன்னி லியோனோட நடிக்கச் சொல்றீங்களே!''

''நித்தியானந்தா இப்போ பண்ற டி.வி. ஷோவுக்குப் போட்டியா நீங்க ஒரு நிகழ்ச்சி பண்ணா என்ன?''

''நித்தியானந்தா பண்ற நிகழ்ச்சிக்குப் போட்டியா பண்ணணும்கிறதைவிட, அந்த நிகழ்ச்சியை ரசிச்சுப் பார்க்கத்தான் எனக்கு ஆசை. அவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு என் வாழ்க்கையைப் புனிதமாக்கினவன் நான். இப்ப அவருக்குத் தெரிஞ்சே ஒரு நிகழ்ச்சி வருதுன்னா, அது எவ்ளோ பெரிய விஷயம்!?''

''அ.தி.மு.க. அமைச்சரவை இதுவரை எத்தனை முறை மாற்றப்பட்டிருக்கு?''

''டூ இன் மைண்ட், ஃபோர் இன் ஹேண்ட்னு வைச்சுக்கிட்டாக்கூட, பிக் எஃப்.எம். லைசென்ஸ் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், இந்தக் கேள்வியை வன்மையாகப் புறக்கணிக்கிறேன்!''

''ரேடியோல பேசறவங்களை ஏன் ஜாக்கினு சொல்றோம்?''

''ஜாக்கினா எல்லாருக்கும் உள்ளாடைதான் ஞாபகத்துக்கு வரும். பொதுவா உள்ளாடைங்கிறது வெளியே தெரியக் கூடாது. அதுதான் பாரம்பரியம். அதே மாதிரி ஆர்.ஜே-வும் வெளியில தெரியக் கூடாது!''