கிராமத்துக் கதையோ, சிட்டி சப்ஜெக்ட்டோ, தேவதை போல ஒரு ஹீரோயின்
வேணும்னு டைரக்டர்ஸ் நினைப்பாங்க. ஆனா, தேவதைகள் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் இருப்பாங்கன்னு அவங்க நம்புறதுதான் வேடிக்கை!" - தைரியமாக, நிதானமாகப் பேசுகிறார் விஜயலட்சுமி.
ஜி.வெங்கட்ராமின் புதிய போட்டோ ஷூட் படங்கள் வசீகரிக்கின்றன. 'கொஞ்சம் கிளாமரா இருக்கோ?' என்று வெட்கப்பட்டுச் சிரிக்கிறார் 'சுல்தான்' நாயகி!
"எப்போதான் கண்ணுல காட்டுவீங்க 'சுல்தான் தி வாரியர்' படத்தை. ரஜினி ஹீரோயின்னதும், அப்படியே அமைதியாகிட்டீங்களே?"
"சிம்ப்ளி சூப்பர்ப். 70 சதவிகிதம் படம் முடிஞ்சிடுச்சு. சுல்தான் ஒரு அனிமேஷன் படம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ரஜினி சார் 'எந்திரன்' முடிச்சு, ரிலாக்ஸ் ஆயிட்டதால், இப்போ அவரோட லைவ் போர்ஷனும் படத்தில் இருக்குன்னு சொல்றாங்க. மீதி போர்ஷனை
கே.எஸ்.ரவிக்குமார் சார் டைரக்ட் பண்ணப்போறதா ஒரு பேச்சு இருக்கு. பார்க்கலாம்!"
|