Published:Updated:

சினிமா விமர்சனம் : மைனா

சினிமா விமர்சனம் : மைனா

சினிமா விமர்சனம் : மைனா

சினிமா விமர்சனம் : மைனா

Published:Updated:

சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் : மைனா
சினிமா விமர்சனம் : மைனா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம் : மைனா
விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் : மைனா

லைக் கிராமத்தில், பரிசுத்தமான பிரியத்துடன் படபடக்கும் காதல் மைனாக்கள்,

வாழ்வில்... வழி மாறினால்?!

முரடனாகத் தினவெடுத்துத் திரியும் விதார்த்துக்கு (சுருளி) சிறு வயதில் இருந்தே, தன் அக்காவாக ஆதரித்து வருபவரின் மகள் அமலா மீது அன்பு. உள்ளங்கை அணில் குஞ்சாக அமலாவைப் பொத்திப் பாதுகாக்கிறான். மாமாவின் பாசம் அமலாவுக்கும் மயிலிறகு வருடல். ஆனால், அமலாவின் அம்மா பூவிதா இவர்களின் காதலுக்குக் குறுக்கே நிற்கிறார். கோபத்தில் பூவிதாவை விதார்த் அடித்துத் துவைக்க, கொலை முயற்சி வழக்கில் சிறை செல்கிறார். அந்த இடைவெளியில் பூவிதா, அமலாவுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடுகளை முடுக்கிவிடுகிறார். இது தெரிந்ததும் தீபாவளிக்கு முந்தைய இரவு, சிறையில் இருந்து தப்பிக்கிறார் விதார்த். விடுமுறை குதூகலத்தில் இருந்த ஜெயில் சீஃப் ஹெட் வார்டர் சேதுவுக்கும், துணை வார்டர் தம்பி ராமையாவுக்கும் தலையில் இடி. அதிலும் தலை தீபாவளிக்குக்கூட வீட்டுக்கு வர முடியாத மாப்பிள்ளையை செல்போனி லேயே கரித்துக் கொட்டுகிறார்கள் சேதுவின் மாமனார் வீட்டினர். அந்தக் கடுப்புடன் மலைக் காட்டுப் பயண எரிச்ச லும் சேர்ந்துகொள்ள, விதார்த் மீது மூர்க்க வெறிகொள்கிறார்கள் சேதுவும் தம்பி ராமையாவும். விதார்த்தைக் கண்டுபிடித்துக் கைது செய்து, சிறைக்கு அழைத்து வருகிறார்கள். இவர்களுடன் அமலாவும் சேர்ந்துகொள்கிறார். திரும்பும் பயணத்தில் அந்த ஜோடிகளுக்கு இடையிலான பாச நேசத்தையும் வெள்ளந்தி மனதையும் புரிந்துகொள்கிறார்கள் சேதுவும் தம்பி ராமையாவும். ஆனால், அதிரடிக்கும் க்ளைமாக்ஸ்!

சினிமா விமர்சனம் : மைனா

மனிதக் காலடிகள் படாத இயற்கை கொஞ்சும் பச்சைப் பசேல் பிரதேசங்களைத் தேர்ந்தெடுத்து கதைக் களம் அமைத்திருக்கும் இயக்குநர் பிரபு சாலமனை வசந்தங்கள் வாழ்த்தட்டும்!

எளிமையான காதல் கதையைத் திறமையான திரைக்கதையின் வழியே புதிய பின்னணியில் படைத்திருப்பது இயக்குநரின் திறமை.

முகம் மறைக்கும் முடி வளர்த்துக்கொண்டு, எப்போதும் மைனா பின்னால் சுற்றும் சுருளி பாத்திரத்தை அத்தனை அழகாகச் செய்திருக்கிறார் விதார்த். அப்பாவை மிரட்டுவது, அமலாவை உப்புமூட்டை சுமந்து ஓடுவது, அக்காவை இழுத்துப்போட்டு அடிப்பது, 'லவ் பண்ணுங்க சார், லைஃப் நல்லா இருக்கும்' என்று உற்சாகப் பன்னீர் தெளிப்பது என விதார்த்துக்கு இது மைல் கல் மைனா. காதலைக் கண்களில் தேக்கிவைத்துஇருக்கும் வனப்பேச்சியாக அமலா... பேரழகு! பேசும் கண்களால், மனதில் இடம்பிடிக்கும் அப்பாவி மைனா!

சினிமா விமர்சனம் : மைனா

நட்ட நடுவழியில் பேருந்தில் தொற்றிக்கொள்ளும் பயணிகளாக படத்தில் அறிமுகமாகும் சேதுவும் தம்பி ராமையாவையும் பிற்பாதியில் படத்தையே தூக்கிச் சுமக்கும் நாயகர்களாக பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். 'தலை தீபாவளிக்கு வீட்டுக்கு வருவீங்களா, மாட்டீங்களா?' என மனைவி துரத்த, 'தப்பிச்சுப் போன சுருளியைப் பிடிச்சாச்சா இல்லையா?' என அதிகாரி விரட்ட... எப்போதும் இறுக்கம் உறைந்த முகத்துடன் ஒரு சின்சியர் அதிகாரியைக் கச்சிதமாகக் கண் முன் நிறுத்துகிறார் சேது. படத்தின் காமெடி மகிழ்வுக்கும் சென்ட்டிமென்ட் நெகிழ்வுக்கும் முழுப் பொறுப்பு, தம்பி ராமையா. வழுக்கைத் தலையும் தொப்பை வயிறுமாகக் கலகலக்கவைக்கிறார். விதார்த் 'அம்மா' என அழைத்ததும் அழும் தன் மனைவியைச் சமாதானப்படுத்தும் இடத்தில் தழுதழுக்கவும் வைக்கிறார்.

மகனை அடித்ததற்காக 'வாத்தியாரின் காதைப் பிடித்துத் திருகும்' அப்பா செவ்வாழை நச் கேரக்டர். விதார்த்துக்கு ஆதரவாகப் பேசுபவர், அடி வாங்கியதும் தடாலடியாக ரூட் மாறி, 'நீ டேஷன்ல புகார் குடும்மா... நான் சாட்சி சொல்றேன்!' என்று எதிரணிக்குத் தாவும் இடத்தில் குலுங்கிச் சிரிக்கவைக்கிறார். ஆக்ரோஷ கோபம் பொங்க அமலாவை அரிவாளுடன் துரத்தும் பூவிதா, முகபாவனைகளிலேயே இன்ஸ்பெக்டர் கணவனை மிரட்டும் சூஸன், 'வெத்துவேட்டு' மாப்பிள்ளை என்று குமையும்குடும்பத் தினர் என்று சின்னச் சின்ன பாத்திரங்களிலும் யதார்த்த வர்ணம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். பேருந்து விபத்துக்குப் பிறகு, அதன் பயணிகளைவைத்தே சூழ்நிலையின் இறுக்கம் குறைப்பது சினிமாவுக்குள் ஒரு மினிமா!

மலைக் காடு முழுக்க நம்மையும் கைபிடித்து பத்திரமாக அழைத்துச் செல்கிறது சுகுமாரின் கேமரா. ஒரு 'டிராவலிங் ஸ்க்ரிப்ட்'டுக்குத் தேவையான அலை பாயும் ஒளிப்பதிவு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கச்சிதம். அத்தனை உயர மலைக் காடுகளில் ஜிம்மி ஜிப்பை சுமந்து அலைந்து படம் பிடித்திருக்கும் கேமராதான் படத்தின் 'ஆஃப் த ஸ்க்ரீன்' ஹீரோ!

சினிமா விமர்சனம் : மைனா

இசையமைப்பாளர் இமானுக்கு இது உற்சாக நல்வரவு. 'மைனா... மைனா', 'நீயும் நானும்' 'கையப் புடி, கண்ணைப் பாரு' என மெலடியில் மனம் மயக்குபவர், 'ஜிங்கு ஜிக்கா' பாடலில் ரசனையாகத் தாளமிடவைக்கிறார். 'நீயும் நானும்' பாடலில் ஏக்நாத்தும், முரட்டு முட்டாளின் காதல் வரிகளாக விரியும் மற்ற பாடல்களில் யுகபாரதியும் மண் மணக்கச் செய்து இருக்கிறார்கள்.

அழுக்கு ஹீரோ, 'மாமா... மாமா' என்று கண்மூடித்தனமாக அன்பு காட்டும் ஹீரோயின், சின்ன வயசுக் காதல், பக் பகீர் துக்க க்ளைமாக்ஸ் என முத்திரை தமிழ் சினிமாக்களின் பாதையிலேயே 'மைனா'வும் பறப்பதுதான் சற்று அலுப்பு.

கமர்ஷியல் படங்களில் யாரும் லாஜிக் பார்ப்பது இல்லை. ஆனால், யதார்த்தமான படங்களில் சின்னக் கீறல் விழுந்தாலும்கேள்வி மேல் கேள்வி எழும். தம்பி ராமையா வீடு இருக்க, ஆள் இல்லாத தன் வீட்டுக்கு சேது நடுநிசியில் அமலாவை அழைத்துச் செல்வது உட்பட, ஏன்... ஏன்... கேள்விகள் எழுகின்றனதான். இருந்தாலும், தமிழின் நல்ல திரைப் படங்கள் பட்டியலில் மைனா இடம் பிடிக்கிறது!

சினிமா விமர்சனம் : மைனா
சினிமா விமர்சனம் : மைனா
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism