Published:Updated:

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

Published:Updated:

சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்
சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்
விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

விடிவதற்குள் ஒரு குவார்ட்டர் கட்டிங் குடிக்க தலையால் 'தண்ணி' குடித்து, நாயகன்

மேற்கொள்ளும் நீண்ட நெடிய பயணமே... 'வ'!

'தேர்தல் நேர நெருக்கடியில் டாஸ்மாக் கடைகள் மூடிக்கிடக்கும் ஓர் இரவில், குவார்ட்டர் வேட்டை' என்ற 'கட்டிங்' கதையில், காமெடி கபடி ஆட முயற்சித்து இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி. சவுதிக்குக் கிளம்பும் முன் குவார்ட்டருக்கு அலையும் சிவா, அவருக்குத் துணையாக அலையும் மாட்டு டாக்டர் மச்சான் எஸ்.பி.பி.சரண் என்ற காம்பினேஷன் சுவாரஸ்யம். 'பேன்ட், பெல்ட், சட்டையைப் பாருங்க... மூணும் மூணு மொட்டை மாடியில் இருந்து திருடுன மாதிரி இருக்கு!', 'ஏன் கொசுவை அடிக்க வேண்டாம்னு சொல்றீங்க... அது உங்க பேஷன்ட்டா?' 'இல்லை... பேஷன்ட் ஆயிடக் கூடாதுன்னு சொல்றேன்!' என்று கடந்து செல்லும் வசனங்கள் (மட்டுமே!) படத்தின் பலம். அதுவும் சமயங்களில், காமெடி வொர்க் -அவுட் ஆகாமல், சளபுளவெனச் சொதப்புவது பலவீனம்!

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கும் சிவாவின் காமெடிதான் படத்தின் ஒரே ஆறுதல். (அது மட்டும்தான் வருமா பிரதர்?) தற்கொலைக்கு முயற்சிக்கும் லேகாவைக் காப்பாற்றி தூக்கும்போது, 'சாகுறதுக்கு முன்னாடியே பொண கனம் கனக்குறாளே!' என்று முனகுவதும், 'நமக்கு மொக்க கார்டு... அவனுங்களுக்கு நம்மளைவிட மொக்கையான கார்டு!' என்று சூதாட்ட வில்லன்களை வீழ்த்தும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறார். லேகா திருமணப் பேச்சை எடுக்க, 'அபசகுனமாப் பேசாதே!' என்று அடக்கி, காதலைக் கண்டுகொள்ளா மல் சிவா கிளம்பும் க்ளைமாக்ஸ்... கொஞ்சம் புதுசு!

தன் ஸ்கூட்டரை எரித்த வில்லனின் ஃப்ளாஷ்பேக் கதை கேட்ட பிறகு, அவனையே ஆதரிக்கும் இடத்தில் சரண் சிரிக்கவைக்கிறார். மக்குப் பெண்ணாக வரும் லேகா வாஷிங்டன் அழகு. சிவாவோடும் சரணோடும் சுற்றுவதைத் தவிர, வேறு எந்த வேலையும் பெரிதாக இல்லை. கிங், பிரின்ஸ் என 'டபுள் ஆக்ட் வில்லன்' அவதாரம் கொடுக்கும் ஜான் விஜய்யின் உடல் மொழியில் இருந்து குரல் மொழி வரை பலே வித்தியாசம்!

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்

முழுக்க முழுக்க சென்னையின் இரவு வாழ்வைப் படம் பிடிக்கும் கதை. ஆனால் கதாபாத்திரங்கள், அவர்களுடைய லைஃப் ஸ்டைல், சுற்றுச்சூழல், வசன உச்சரிப்பு என எதிலுமே நேட்டிவிட்டி இல்லையே! அதிலும் பல இடங்களில் 'ஒரே' அர்த்த வசனங்கள் வேறு!

அத்தனை சிக்கல்களில் சிக்கித் தவித்த பிறகும், சிவா தொடர்ந்து கட்டிங்குக்கு அல்லாடித் திரிவது லாஜிக்கும் இல்லாமல் மேஜிக்கும் இல்லாமல் சவசவக்கிறது!

சிவப்பு - பச்சை காம்பினேஷனில் நீரவ் ஷா கேமரா, சில்லெனப் பீர் அடித்த கண்களுடன் பார்க்கிறது. 'உன்னைக் கண் தேடுதே' ரீ-மிக்ஸிலும், 'தேடியே... தேடியே' மெலடியிலும் 'சிங்கிள் சிப்' அடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

காமெடி, நேட்டிவிட்டி இரண்டும் கரெக்டாக மிக்ஸிங் போட்டு இருந்தால், 'வாரே... 'வ'!' சொல்லி இருக்கலாம்!

சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்
சினிமா விமர்சனம் : வ குவாட்டர் கட்டிங்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism