Published:Updated:

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

Published:Updated:

"ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!"
ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!
ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நா.கதிர்வேலன்
ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

"ஏழு வருஷத்தில் 10 படங்கள் தான் செய்திருக்கேன். கதையை நம்பும் நடிகன் நான்.

கதைகளை நம்பியே போவதால், மனசுக்குப் பிடிச்ச விஷயம் அமைய, கொஞ்சம் டைம் ஆகும். இப்போ தமிழ்ல திரும்பவும் '180' படத்தில் நடிக்கிறேன். எம்.பி.ஏ முடிச்சு, கிடைச்ச வேலையை உதறிட்டு சினிமாவுக்கு வந்தவன் நான். ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராமைப் பார்த்து வளர்ந்த வன். யாரைப் பார்த்து வளர்ந்தீங்களோ... அவங்களிடமே பணிபுரிய உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். சினிமாவில்தான் காசும் கொடுத்து, கத்தும்கொடுக்கிறாங்க!"- தெளிவாகப் பேசுகிறார் சித்தார்த். 'பாய்ஸ்', 'ஆய்த எழுத்து' முடித்துப் போனவர் இந்தி, தெலுங்கு சினிமாவில் இப்போ ரொமான்டிக் ஹீரோ.

"ஏன், தமிழில் இவ்வளவு பெரிய இடைவெளி?"

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

"நாம நிறைய ஆசைப்படுவோம். ஆனா, அது நடக்கணுமே! ஷங்கர், மணி சார்னு பெரிய டைரக்டர்கள்கிட்ட நடிச்ச பிறகும், எனக்கு நல்ல வாய்ப் புகள் வரலை. 'தமிழ் வேண்டாம்'னு சொல்லிட்டு, நான் தெலுங்குக்குப் போகலை. ரொம்ப இடை வெளிக்குப் பிறகு '180' எனக்கே எனக்குன்னு அமைஞ்ச கதை. சென்னை, மலேசியா, அமெரிக்கான்னு பயணிக்கும் படம். ஏழு வருஷத்தில் புல்லுகூட வளரும். நான் நிறையவே வளர்ந்திருக்கேன். இப்போ தமிழ் சினிமா நிச்சயம் எனக்கா கக் கதவு திறக் கும். திறக்கும் வரை தட்டுவேன். கமல் சார் எப்படி, தமிழ், தெலுங்கு, இந்தின்னு பாரபட்சம் இல்லாமல் நடிச்சார். இன்னிக்கு வரை அவர் பெரிசா நிக்கிறதுக்கு அதுவும்தானே காரணம். பல மொழிகளில் நடிக்கும்போது, வேறு யாரும் என் மூஞ்சி மேலே டப்பிங் பேச நான் அனுமதிக்க மாட்டேன். மொழி, என்னோட பெரிய பலம். மும்பைக்குப் போனால், ஒரிஜினல் இந்திக்காரன் மாதிரி பேசுவேன். ஹைதராபாத்ல சுத்தமான தெலுங்கு பேசுவேன். சினிமா மேல இருக்கும் காதல்தான் இதை எல்லாம் சாத்தியப்படுத்துது. எனக்கு எப்பவும் நல்ல சினிமா பண்ணணும். 25 வருஷம் கழிச்சு என் பேரன் பார்த்துட்டு, 'என்ன இப்படி குப்பைப் படம் பண்ணிட்டே'னு பேசிடக் கூடாது. அவ்வளவுதான்!"

" 'பாய்ஸ்' செட் பசங்க உங்ககூட டச்ல இருக்காங்களா?"

"இசையமைப்பாளரா மாறிட்ட தமன் அடிக்கடி ஹைதராபாத் பக்கம் வருவான். சார் மியூஸிக்ல பெரிய கில்லி ஆகிட்டார். நகுல்கூட எப்போதாவது பேசுறது உண்டு. பரத், மணிகண்டன்கூட தொடர்பே இல்லை. எங்கேயாவது ஏர்போர்ட்ல பார்த்தா, 'ஹாய்' சொல்லிக்குவோம். அப்பா - அம்மாவைப் பார்க்கவும், தமிழ் சினிமாவைப் பார்க்கவும்தான் சென்னைக்கே வர்றேன். கடந்த ஏழெட்டு வருஷமா நாலஞ்சு நாள்தான் வீட்ல இருந்திருப்பேன்!"

"அமீர் கான் கூட ரெண்டு படங்கள் நடிச்சிருக்கீங்க. என்ன சொல்வார்?"

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

"ஒவ்வொரு தடவையும் அமீர்ஜியைப் பார்க்கும்போதும் என்னை ஆச்சர்யப்படுத்திட்டே இருப்பார். 'நீங்க எவ்வளவு பெரிய ஸ்டார். என்னை மாதிரி சின்னப் பசங்ககூட எதுக்கு நடிக்கிறீங்க'ன்னு வாய்விட்டே கேட்டேன். 'ரொம்ப அரிதாத்தான் நல்ல படங்கள் அமையும். அந்தப் படம் நிச்சயம் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும். நமக்கு ரொம்ப நல்ல பேர் வரும். மத்த படங்களில் நாம காசு சம்பாதிச் சுட்டுப் போயிடலாம். ஆனா, பேர் சம்பாதிக்கும் படங்களை எப்பவும் விட்டுரக் கூடாது, கப்னு பிடிச்சுக்கணும். அந்த விஷயத்தில், ஈகோவே பார்க்கக் கூடாது. நாமே நல்ல சினிமாபத்தி பேசிட்டு... அதை உதாசீனப்படுத்தலாமா?'னு சொல்வார். என்ன மனசு பாருங்க? ஏன்... இங்கே கமல் சாரே உதாரணமா இருக்காரே. நல்ல சினிமா பண்ணும்போது சுயநலம் கூடாது!"

"ஆனா, இப்போ ஹீரோக்கள் தங்கள் இமேஜை பில்ட்-அப் பண்ணிக் காட்டும் அறிமுக டைரக்டர்களுக்குத்தான் கால்ஷீட் தர்றாங்கன்னு ஒரு பேச்சு இருக்கே?"

"ஷங்கர், மணி சார்னு அறிமுகம் ஆன பிறகு, என்னை வளர்த்து எடுத்தது எல்லாமே அறிமுக டைரக் டர்கள்தான். எனக்குப் பெரிய டைரக்டர் களைவிட, ஸ்க்ரிப்ட் மேல்தான் நம்பிக்கை ஜாஸ்தி. இங்கே யாரும், யாருக்கும் ஃபேவர் பண்றதுக்காக வர்றதில்லை. பெரிய ஹீரோக்கள் புது டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதை ஏதோ அவங்களுக்கு லைஃப் கொடுக்கிறதாப் பேசிக்கிறாங்க. அது தப்பு. அவர் இவரைப் பயன்படுத்துகிறார். இவர் அவரைப் பயன்படுத்துகிறார். இதில் லைஃப் கொடுக்கிறது எங்கே வந்தது? சினிமாவில் எல்லாமே 50-50தான். ஒவ்வொரு நாளும் கத்துக்கிட்டே இருக்க வேண்டிய இடம். எல்லாம் தெரியும்னு யாராவது சொன்னால், அவனுக்கு ஒண்ணுமே தெரியா துன்னு அர்த்தம். ஒவ்வொரு நாளும் நான் கண் முழிக்கும்போது எனக்கு ஷூட்டிங் இருந்தால்... சந்தோஷம். அசல் சினிமாக்காரன் இப்படித்தான் இருப்பான்!"

"உங்க அளவுக்கு எந்த ஹீரோவைப்பத்தியும் கிசுகிசு கிளம்பி இருக்காதுன்னு தோணுது?"

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

"நான் ரொமான்டிக் ஹீரோங்க. என்னைப்பத்தி கிசுகிசு வரலைன்னா, நான் ரொமான்டிக் ஹீரோவா இருக்கிறதே வேஸ்ட். எங்க அம்மாவே, 'என்னடா... உன்கூட யார் நடிச் சாலும் கிசுகிசு வருது'ன்னு கவலைப்படுவாங்க. நான் இதுவரை என் பெர்சனல் வாழ்க்கையை யாரிடமும் பகிர்ந்துகொள்வது இல்லை. உங்க வீட்டில் 'நீங்க எப்படி?'ன்னு கேட்க ஆசைப் படாமல் இருக்கிற நான், எப்படி என்னைப்பத்தி சொல்ல?"

"ஆனாலும், கிசுகிசு அந்தஸ்து தாண்டியும் ஸ்ருதி கமலுடனான உங்க தொடர்பு பரபரக்கப்பட்டதே?"

"வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் ஒரு தெலுங்குப் படத்தில் ஸ்ருதியோடு நடிக்கிறேன். ஒன்றரை வருஷமா ஷூட்டிங் நடக்குது. பெரிய படம். அந்தப் படம் மூணு மாசத்துக்குள் முடிஞ்சு இருந்தா, கிசுகிசுவும் மூணு மாசத்தில் முடிஞ்சு இருக்கும். அந்தப் படம் ஜனவரியில் ரிலீஸ் ஆயிடும். அதுவரைக்கும் அந்தக் கிசுகிசு உயிரோடு இருக்கும்!"

"தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களைக் கவனிக்கிறீங்களா... உங்களுக்குப் பிடிச்சவர் யார்?"

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!

"ஆர்யா!

படங்களை நல்லா செலெக்ட் பண்றார். சும்மா சிரிக்கவெச்சு 'பாஸ்கரன்'னு நடிக்கிறார். டேஸ்ட் இருக்கிற மாதிரி 'மதராசபட்டினம்' பண்றார். ஆத்மார்த்தமா 'நான் கடவுள்' அகோரி சாமியா வர்றார். அவர் கேரியர் இப்ப பெஸ்ட். ஆர்யா சூப்பர்!"

"தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் உங்கள் ஃபேவரைட் யார்?"

"சசிகுமார் பிடிக்கும். 'சுப்பிரமணியபுரம்' பெஸ்ட் சினிமா. வாங்கின டி.வி.டி. தேய்ஞ்சு, மூணாவது டி.வி.டி. வாங்கி இருக்கேன். 'கற்றது தமிழ்' ராம் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில், 'களவாணி' பார்த்தேன். அசல் கிராமம் இப்படித்தான் இருக்கும். சற்குணம் சின்சியர் உழைப்பாளி!"

ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!
ரொமான்டிக் ஹீரோன்னா கிசுகிசு வரணும்!