Published:Updated:

நான் இலியானாவுக்கு அப்பாவா?

நான் இலியானாவுக்கு அப்பாவா?

நான் இலியானாவுக்கு அப்பாவா?

நான் இலியானாவுக்கு அப்பாவா?

Published:Updated:
நான் இலியானாவுக்கு அப்பாவா?
நான் இலியானாவுக்கு அப்பாவா?
நான் இலியானாவுக்கு அப்பாவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரீ.சிவக்குமார்
படம்:கே.ராஜசேகரன்
நான் இலியானாவுக்கு அப்பாவா?

'என்னம்மா கண்ணு... சௌக்கியமா?' என்று ஜொள்ளு லொள்ளு கலந்து

கலாய்ப்பதாகட்டும், தந்தை பெரியாராக மாறித் தத்ரூபம் காட்டுவதாகட்டும்... சத்யராஜின் கேரக்டரைப் புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை. 'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷங்கர் அழைத்தும் மறுத்தவர், இப்போது அதே ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

"ஆமாம்... ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' ரீ-மேக்கில் நடிக்கிறேன். 'இலியானாவுக்கு அப்பாவா நடிக்கிறீங்களா'ன்னு ஆச்சர்யமா கேக்குறாங்க. கதைப்படி ஹீரோயினுக்கு அப்பாவா நடிக்கிறேன். அது இலியானாவான்னு இன்னமும் எனக்குத்தெரியாது!"

" 'சிவாஜி' பட வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டு, இப்போது அதே ஷங்கர் படத்தில் ஹீரோயின் அப்பாவாக நடிக்கிறீர்களே... எப்படி?"

" 'சிவாஜி' பட வில்லன் கேரக்டர் எனக்கு செட் ஆகாது. அதான் மறுத்தேன். நானும் ரஜினியும் கடைசியா சேர்ந்து நடிச்ச படம் 'மிஸ்டர் பாரத்'. அதுலயும் நான் வில்லன்தான். ஆனா, ரஜினிக்கு இருக்கிற அதே முக்கியத்துவம் என் கேரக்டருக்கும் இருக்கும். ஒரு தடவை ரஜினி ஜெயிச்சா, அடுத்த முறை நான் ஜெயிப்பேன். சரிசம சவால் கொடுக்குற கேரக்டர். அந்த மாதிரி பவர்ஃபுல் வில்லனா இருந்தா, நிச்சயம் 'சிவாஜி'யில் நடிச்சிருப்பேன். ஆனா, '3 இடியட்ஸ்' படத்தில், வெறுமனே ஹீரோயின் அப்பா கேரக்டர்னு சொல்லிட முடியாது. பொம்மன் இரானி இந்தியில் நடிச்ச அந்த கேரக்டர்தான் கதையில் பல திருப்பங்களை ஏற்படுத்தும். அந்த கேரக்டருக்குன்னு வித்தியாசமான உடல்மொழிகள் தேவைப்படும். ரொம்ப நாள் கழிச்சு சவாலான கேரக்டர். அதான் சம்மதிச்சேன். 'இலியானாவுக்கு அப்பாவா?'ன்னு எல்லாரும் விசாரிக்கிறதைப் பார்த்தால், ' 'மிஸ்டர் பாரத்'தில் நீங்க அம்பிகாவுக்கு மாமனாரா?'ன்னு கேட்கிற மாதிரி இருக்கு. '3 இடியட்ஸ்' படத்தில் மூன்று இடியட்களுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் என் கேரக்டருக்கும் இருக்கும். 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்க நான் மறுத்ததைப் பொருட்படுத்தாமல், இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததுதான் ஷங்கரின் பெருந்தன்மை!"

நான் இலியானாவுக்கு அப்பாவா?

"உங்க மகன் சிபி எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் முத்திரை பதிக்க முடியலைங்கிற வருத்தம் இருக்கா உங்களுக்கு?"

நான் இலியானாவுக்கு அப்பாவா?

"அட! சிபி சினிமாவுக்கு வந்து நாலு வருஷம்தானே ஆகுது. முதல் ஆறு வருஷம் வரை சினிமாவுல நான் பேசின ஒரே வசனம் 'யெஸ் பாஸ்'தான்! எங்களை மாதிரி ஆளுங்களுக்கு நிறைய உதாரணம் இருக்கே. நான் இருக்கேன், விக்ரம் இருக்கார். சரியான வாய்ப்பு வரும்போது சிபி என்னைவிட அதிகமா சாதிப்பான். 'நூறாவது நாள்' படம் முடிச்ச ஒரே வருஷத்துல நான் 27 படங்கள் நடிச்சேன். ஆனா, இப்பவும் உங்க மனசுல பளிச்சுனு நிக்கிறது ஏழு படங்களாத்தானே இருக் கும். அது மாதிரி, சரியான கதையும் களமும் அமைஞ்சா, சிபியும் அதிக உயரம் தொடுவான்!"

"தொடர்ந்து உங்களோடு நிறையப் படங்களில் நடித்தவர் ரஞ்சிதா. அவர் சர்ச்சையில் மாட்டியது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததா... எதுவும் ஆறுதல் சொன்னீங்களா?"

"அது எனக்கு ஒரு செய்தி அவ்வளவுதான். 'அமைதிப் படை', 'தோழர் பாண்டியன்', 'பகைவன்'னு மூணு படங்களில் என்னோடு நடிச்சாங்க. புத்தகம்லாம் வாசிக்கும் பழக்கம் இருக்கும் பெண். ஆனா, எப்படி இப்படி மாட்டினாங்கன்னு தெரியலை. கடைசியா 15 வருஷத்துக்கு முன்னாடி அவங்களோடு நடிச்சேன். அவங்க எப்ப எப்படி ஆன்மிகம் பக்கம் போனாங்கன்னு தெரியலை. பொதுவா, வாழ்க்கையில் எல்லோருக்கும் நெருக்கடி வரும்... பிரச்னைகள் வரும்தான். இயற்கையின் இயற்கைத்தன்மையைப் புரிஞ்சுக்கிட்டா, உங்களால் படைக்கப்பட்ட கடவுளை நம்ப மாட்டீர்கள். குழப்புதா? யோசிச்சுப் பாருங்க... புரியும்!"

நான் இலியானாவுக்கு அப்பாவா?

"ஈழப் பிரச்னையில் தீவிரமாக இயங்கியவர்களில் நீங்களும் ஒருவர். தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகமே ஈழ மக்களுக்கு ஆதரவாக இருந்ததைப்போல ஒரு தோற்றம் இருந்தது. ஆனால், கடைசியாக சீமான் மட்டும்தான் சிறைக்குப் போனார். மற்றவர் கள் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொண்டார்களே?"

"அப்படிச் சொல்ல முடியாது. நான் கூடுமான வரை ஈழ ஆதரவுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் வெளியிட்டேன். தாமரை, புலமைப்பித்தன், தங்கர்பச்சான், புகழேந்தி தங்கராஜ் என்று திரைத் துறையைச் சேர்ந்த பலரும் ஈழப் பிரச்னைபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் சீமானை ஆதரிக்கிறேன். தனிப்பட்ட முறையில்தான் சீமானுக்கு ஆதரவாகப் பேச முடியும். ஒட்டுமொத்தத் திரையுலகமும் திரண்டு அப்படிப் பேச முடியுமா என்று எனக் குத் தெரியவில்லை!"

நான் இலியானாவுக்கு அப்பாவா?
நான் இலியானாவுக்கு அப்பாவா?