'தலைநகரம்' பண்ணும்போது, 'இதுதான் நாம ஹீரோவா நடிக்கிற முதல் படம்.
இதேதான் கடைசிப் படமும்!'னு நினைச்சேன். காரணம், மக்கள் என்னை ஹீரோவா ஏத்துப்பாங்களாங்கிற சந்தேகம். ஆசைக்கு ஹீரோவா ஒரு படம் பண்ணிட்டு, டைரக்ஷன் பக்கம் போயிரலாம்னுதான் ஐடியா. ஆனால், 'தலைநகரம்' ஹிட் என் தலையெழுத்தை மாத்திடுச்சு. இப்போ ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, டைரக்ஷனைக் கையில் எடுத்து இருக்கேன். நின்னு நிதானமா யோசிச்சுப் பிடிச்ச நல்ல ஸ்க்ரிப்ட்... 'நகரம்'!"-சிலாகித்துப் பேசுகிறார் சுந்தர்.சி.
"இந்த நகரத்திலும் ரவுடிகள், வடிவேலு எல்லாம் உலவுவாங்களா?"
"அதைத்தானே ஆடியன்ஸ் எதிர்பார்க்கிறாங்க. எந்த சினிமாவின் கதையும் முடியும் இடத்தில், நகரத்தின் கதை தொடங்கும். அப்படி ஆரம்பிக்கிறது எனக்குச் சவாலா இருந்தது. ரவுடியாக இருந்து திருந்தியவனின் வாழ்க்கைதான் கதை. ஆனால், படத்தில் ரவுடியிஸம், அரிவாள் எல்லாம் கிடையாது. இந்தப் படத்தில் வடிவேலு இன்னும் இன்னும் ஸ்பெஷலா... 'ஸ்டைல் பாண்டி'யா வர்றார். 'வின்னர்' கைப்புள்ள, 'கிரி' வீரபாகு, 'தலைநகரம்' நாய் சேகர் மாதிரி, இந்த 'ஸ்டைல் பாண்டி'யும் கலக்குவார்!"
|