Published:Updated:

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

Published:Updated:
மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!
மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!
மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.கலீல்ராஜா
மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

மேஜை முழுக்கப் புத்தகங்கள் இறைந்துகிடக்கின்றன. நீலம் ப்ளஸ் வெள்ளை

காம்பினேஷனில் பெயின்ட் செய்யப்பட்ட அறையில், புதுப் புத்தக வாசனை நாசியை இழுக்கிறது. " 'யுத்தம் செய்' ஷூட்டிங் முடிச்சுட்டு, நியூஸிலாந்துக்கு ஒரு டூர் அடிச்சேன். அங்கே நிறையப் புத்தகங்கள் வாங்கினேன். 'மௌரியா'ன்னு பழங்குடி இன மக்களைச் சந்திச்சேன். அவங்க அணியும் பச்சைக் கல் இது. இந்தக் கல்லையே கத்தி மாதிரி செதுக்கி ஆயுதமாவும் பயன்படுத்துவாங்களாம். ஜப்பான் மொழியில் இதுக்கு 'ஜேட்'னு பேர். நல்லா இருக்கா?" - கழுத்தில் நீளமாகத் தொங்குகிற பச்சைக் கல்லைக் காட்டிச் சிரிக்கிறார் மிஷ்கின்.

" 'யுத்தம் செய்' எப்படி வந்திருக்கு?"

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

"நிஜமாவே ஒரு யுத்தம் செஞ்சிருக்கோம். ஒரு படத்துக்குச் சரியான தலைப்பு கிடைப்பது, ரொம்ப அவசியமான விஷயம். தலைப்பே பாதி கதை சொல்லணும். இந்தப் படத்துக்கு இதுதான் சரியான தலைப்பு. இது 'அஞ்சாதே' படத்தின் பார்ட் டூ மாதிரி. 'நாம ஒரு வன்முறை செய்றோம். அது இன்னொருவனை உடல்ரீதியா, மனரீதியாப் பாதிக்கும்'கிற எண்ணம் துளிகூட வன்முறை செய்றவனுக்கு வர்றது இல்லை. டீ குடிப்பது மாதிரி ஒரு வன்முறையை உறுத்தாமல் செய்றான். அப்படி அவனது மூளையை மழுங்கடிச்சு, வன்முறையை ரசிக்கச் செய்கிற விஷயம் என்ன? அந்த வன்முறைகளால் சாதாரணக் குடும்பங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுதுன்னு சொல்ல வர்றோம்.

கதைக்கு பெரிய ஹீரோ தேவை இல்லை. 36 வயசுக்காரராக் காட்டணும். யதார்த்தமான ஒரு ஆள் போதும். யோசித்தபோதே எனக்கு சேரன்தான் ஞாபகத்துக்கு வந்தார். 20 நாட்கள் ஃபர்ஸ்ட் ஸீனில் இருந்து ஃபைட் ஸீன் வரை அத்தனை ஸீன்களையும் ரிகர்சல் பார்த்தோம். அப்போதே சேரன் இந்தக் கதைக்கு ஃபிட்டா இருப்பார்னு நம்பிக்கை வந்தது. இதில் சேரனை சண்டை போடவெச்சேன். ரியலா, கொஞ்சம் ஃபேன்டஸி கலந்த ஃபைட். எனக்கே இந்த சேரன் புதுசு. உங்களுக்கு ரொம்பப் புதுசா இருப்பார்!"

"இந்தியில் படம் பண்ணப்போறதா ஒரு பேச்சு இருக்கே?"

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யு டி.வி. தயாரிப்பில் சூர்யாவைவெச்சு 'முகமூடி'ன்னு ஒரு படம் பண்றதா இருந்தேன். அந்த ஐடியா டிராப் ஆகிருச்சு. 'இன்னொரு கதை ரெடி பண்ணுங்க'ன்னு கேட்டாங்க. 12 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதை சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஜான் ஆபிரஹாம்தான் ஹீரோ. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம்!"

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

" 'நந்தலாலா' என்னதான் ஆச்சு?"

" 'நந்தலாலா' வந்துரும். வந்தே தீரும். அநேகமா தீபாவளிக்கு அப்புறம் ரிலீஸ் ஆகும். நந்தலாலாவுக்கு அடுத்து நிறைய ஹீரோ வாய்ப்புகள் வந்தன. எல்லாமே போர். நான் உண்மையில் ஹீரோ கிடையாது. என் இடுப்பு சைஸ் 38. வயசும் 39 ஆகிருச்சு. நந்தலாலாவில் தவிர்க்க முடியாத காரணத்தால் நடிச்சேன். ஆனா, நல்லா நடிச்சேன். நான் ஒரு சின்சியர் ஆக்டர். எதிர்காலத்தில் நிச்சயமா நடிப்பேன். அதை நானே இயக்குவேன். அது பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட்டா இருக்கும்!"

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

"தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர்களே இல்லையே?"

"அதுதான் சார் என் கோபம். இப்போ புத்தகம் படிக்கும் பழக்கமே குறைஞ்சுபோச்சு. இன்னிக்கு வர்ற அசிஸ்டென்ட் டைரக்டர்களை நினைச்சா, எனக்குக் கோபம் வருது. 'இப்போ என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்க?'ன்னு கேட்டா, 'பாரதிராஜா, இளையராஜால்லாம் படிச்சுட்டா, சினிமாவுக்கு வந்தாங்க?'ன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலயே திட்டி அனுப்பிட்டேன். அவங்க வாழ்க்கையை, கிராமங்களை,

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!

மனிதர்களைப் படிச்சவங்க. படிக்காம படைப்பாளி ஆக முடியாது. சினிமா எடுக்கணும்னு சென்னைக்கு வர்ற சராசரி 21 வயது இந்திய இளைஞனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? வீட்டுக்குப் பக்கத்தில் யாராச்சும் ஓடிப் போயிருப்பாங்க. அப்பா, அம்மாவைப் போட்டு அடிச்சிருப்பார். இரண்டு மூணு கொலை, தற்கொலைகளைப் பார்த்திருப்பாங்க. ஒரு காதல் பண்ணி இருப்பான். 1,000 தடவை சுய இன்பம் அனுபவிச்சு இருப்பான். இதைத் தாண்டி என்ன வாழ்க்கை அனுபவம் இருக்க முடியும்? ஒரு சினிமா கோடிப் பேர் அண்ணாந்து பார்க்கும் விஷயம். நீங்க எல்லாரையும் பாதிக்கணும். அப்போ எவ்வளவு அனுபவம் வேணும். அதற்குப் புத்தகம் படிக்கணும். கத்துகிற ஆர்வம் இல்லாததால்தான், டி.வி.டி. பார்த்து சினிமா எடுக்க வேண்டியிருக்கு. சினிமான்னு இல்லை... தன்னைப் புதுப்பிக்காத, கற்றுக்கொள்ளாத எந்தத் துறையும் விளங்காது!"

மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!
மனிதர்களைப் படிக்காமல் படைப்பாளி ஆக முடியாது!