"கப்பல் ஸ்க்ரிப்ட்னு முடிவானதும், உலகத்தில் உள்ள பெரிய கப்பல்களைத் தேடினோம். 'எம்.எஸ்.சி' வகையறா கப்பல்களில் ஒரு வகை 'ஸ்பிளெண்டிடா'. 20 மாடி, 1,600 பணியாளர்கள், 50 ஆயிரம் பயணிகள்னு அது ஒரு மிதக்கும் நகரம். கப்பலில் 10 ரெஸ்டாரன்ட்டுகள், கேசினோக்கள், நீச்சல் குளங்கள் இருக்கு. இந்தக் கப்பல் தினம் ஒரு நகரமாக ஐரோப்பாவின் முக்கிய நகரங்களைத் தொட்டுச் செல்கிறது. நாம் விரும்பினால் இறங்கிச் சென்று அந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். புதிய அனுபவம் என்பதால், படப்பிடிப்புக்கு வரும் அனைவரையும் குடும்பத்தோடு வரச் சொன்னோம். கமல் சார், கவுதமி மேடம், கே.எஸ்.ரவிக்குமார் சார் குடும்பம், த்ரிஷா, அவங்க அம்மா, மாதவன், அவர் மனைவி, சங்கீதா, கிரிஷ், நான், கிருத்திகா என்று 70 பேர் போய் இறங்கினோம். நாங்கள் உணர்ந்த அதன் பிரமாண்டத்தை அப்படியே படத்தில் கொண்டுவந்து இருக்கிறோம்."
|