Published:Updated:

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

Published:Updated:
விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி
விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி
விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமீர் அதிரடி
இரா.சரவணன்
விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

"இதுதான் என் அடுத்த படத்துக்கான கெட்டப்... நல்லா இருக்கா?" - அடர்ந்த

தாடியுடன் சிரிக்கிறார் அமீர். மண் குடத்தை உடைத்ததுபோல் மனதைத் திறக்கும் படைப்பாளி. 'ஆதிபகவன்' படத்துக்காக ஜெயம் ரவி -
நீத்து சந்த்ராவை பரேடு எடுக்கப் போய் இருக்கிறார் பாங்காக்கில்!

"கத்திக் குத்துகளின் காயம் ஆறலை. ஆனாலும், இப்ப நான் ரொம்பத் தெளிவாகிட்டேன். கட்டிப் பிடிச்சு வாழ்த்தியவங்க கத்தியைச் சொருகவும் தயங்க மாட்டாங்கன்னு எனக்கு 'யோகி' கத்துக்கொடுத்தது. அதுக்காகக் கவலைப்படலை. ரொம்பப் பக்குவப்பட்டு இருக்கேன். நம்மளோட கால் சறுக்குமாங்கிறதைக் கவனிக்க, இங்கே நிறையப் பேர் காத்திருக்காங்க. அடுத்தவங்களோட தோல்விதான், இங்கே நிறையப் பேருக்கு வெறியாவும் வெற்றியாவும் இருக்கு. இந்த அளவு குரூரத்தை நான் எதிர் பார்க்கலை. ஆனால், அதைவிட அதிகமான குரூரத்தைத் தாங்கவும் இப்போ என்கிட்ட சக்தி இருக்கு!"

" 'யோகி'யின் விமர்சனங்கள் உங்களை அந்த அளவுக்கு பாதிச்சதா'

"விமர்சனங்களுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ பயந்தா... படம் எடுக்கவே வந்து இருக்க மாட்டேன். நெருப்போடு நெருப்பா அடுப்புல வெந்து ஆக்கிப் போடுற சமையல்காரன் மேலகூட சரமாரியா விமர்சனம்வைக்கிற உலகம் இது. ஆனா, 'யோகி'க்கு எதிரான விமர்சனங்கள் அந்தப் படைப்பின் மேல் எழுப்பப்பட்டதாக நான் நினைக்கலை. தனிப்பட்ட அமீர் மேல வந்து விழுந்த அம்புகளாகத்தான் பார்க்கிறேன். 'அமீர்'ங்கிறவன் இத்தனை பேரோட கண்களை உறுத்திய ஆளாங்கிறது இப்பதான் எனக்கே தெரியுது. ஏன், இத்தனை பேர் சேர்ந்து என்னை அடிச்சாங்கன்னு தெரியாம நான் துடிச்சுப்போனது உண்மை! நிதானமா யோசிச்சப்பதான் பலர் சேர்ந்து அடிக்கிற அளவுக்கு நான் பலசாலியா இருக்கேன்னு தெரிஞ்சது. நோஞ்சானை அடிக்க 100 பேர் ஒண்ணு சேர மாட்டாங்க இல்லையா?"

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

" 'ஏன்டா 'யோகி' எடுத்தோம்'னு வருத்தப்படுறீங்களா?"

"கிடையவே கிடையாது. 'ஏன்டா எடுத்தோம்'னு நான் நினைக்கிற ஒரே படம் 'பருத்தி வீரன்'தான். அந்த ரணத்தில் இருந்து முழுசா வெளியே வந்துட்டேன். 'யோகி' மக்களைப் போய்ச் சேரலையே தவிர, மக்களுக்குப் பிடிக்கலைன்னு சொல்ல முடியாது. எந்தப் படத்தை எடுக்கணும்கிறதை நான்தான் தீர்மானிக்கணும். எல்லோருடைய இஷ்டத்துக்கும் ஏத்த மாதிரி மாற நான் ஒண்ணும் களி இல்லை... உளி! மனசுக்குப் பிடிச்சதை அணுஅணுவா செதுக்கிக் கொடுக்கிற கூரான உளி. 'இவர் இப்படித்தான்'கிற வளையத்தைப் படைப்பாளிகள் கழுத்தில் ஏன் மாட்டிவிடுறாங்கன்னு தெரியலை.

'கிராமத்துப் படம்னா அது பாரதிராஜாதான்'னு நாம் சொல்றது அவரைக் காயப்படுத்தத்தான் செய்யும். அந்தக் கோபத்தில்தான், அவர் 'சிகப்பு ரோஜாக்கள்' கொடுத்தார். வெற்றியோ, தோல்வியோ... விருப்பப்பட்டதைச் செய்கிறவன் நான். 'யோகி'யை இப்பவும் நான் விரும்புகிறேன்!"

" 'ஆதிபகவன்' எப்படிப்பட்ட ஆள்?"

"பில்ட்-அப் கொடுக்க விரும்பலை. 75 வருஷங்களா தமிழ் சினிமாவில் சக்கரமா சுத்திச் சுத்தி வர்ற வழக்கமான கதைதான். 'ஜெயம்' ரவியை ஆசையும் மீசையுமா அடியோடு மாற்றி இருக்கேன். 'கதை பழசு... களம் புதுசு...'ங்கிற பக்கா கமர்ஷியல் படம் 'ஆதிபகவன்'. இறங்கி அடிக்கணும்னு தோணுச்சு. இறங்கிட்டேன்!"

"தமிழ் சினிமாவோட சமீப கால நிகழ்வுகளை எப்படிப் பாக்குறீங்க?"

"சத்தியமா... பயமா இருக்கு. ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து, கற்பனைகளை மட்டுமே மனசு முழுக்க நிரப்பிட்டு, கோடம்பாக்கத்தில் அலையுறவங்களை நினைச்சுப் பரிதாபமாவும் பயமாவும் இருக்கு. திறமை இருந்தால், யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம்கிற நிலைமை தமிழ் சினிமாவில் இனி சாத்தியம் இல்லையோன்னு தோணுது. இன்னிக்கு தமிழ் சினிமாவைச் சுத்தி இரும்பு வேலி முளைச்சிடுச்சு. அதை உடைச்சு உள்ளே நுழையக்கூடிய சக்தி... பசியும் பட்டினியுமா அலையும் உதவி இயக்குநர்களுக்கு இருக்குமான்னு தெரியலை. இது நல்லதுக்கு இல்லை. அத்தனைப் படைப்பாளிகளும் அவசரமா யோசிக்க வேண்டிய வேதனை இது!"

"பாலா தந்தையாகி இருக்கிறார்... சசிகுமார் நேஷனல் அவார்டு வாங்கி இருக்கிறார்..."

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

"சொன்னா நம்ப மாட்டீங்க... நான் இன்னும் பாலாவுக்கு வாழ்த்துகூடச் சொல்லலை. அவனும் ஷூட்டிங்ல இருக்கான். நானும் ஷூட்டிங்ல இருக்கேன். 'போனிலாவது வாழ்த்து சொல்லி இருக்கலாமே'ன்னு நீங்க கேட்கலாம். 'கங்கிராட்ஸ்'ங்கிற ஒற்றை வார்த்தையால என் உள்ளத்தில் பொங்குற சந்தோஷத்தை மொத்தமா கொட்டிட முடியாது. பாலாவோட மகள் எப்படி இருக்கா... எப்படிச் சிரிக்கிறா?னு பக்கத்தில் இருந்து பார்க்க மனசு துடிக்குது. எங்க வீட்டு மகராசிதானே அவங்க... இந்த சித்தப்பனைக் கொஞ்சம் லேட்டாவே பார்க்கட்டும்.

சசி, நேஷனல் அவார்டு வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். சினிமாவை ஆத்மார்த்தமா, அறிவுபூர்வமா அணுகுறவன் அவன். ஆனா, அவனைப் பாராட்டி நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. 'நம்ம வளர்ச்சி அண்ணனைப் பொறாமைப்படவெச்சிடுச்சு'ன்னுகூட அவன் நினைக்கலாம். ஆனா, என் மனசுல பொறாமை இல்லை. சீக்கிரமே ஆறக்கூடிய சின்ன புண் மட்டும்தான் இருக்கு. கல்லூரியில படிக்கிறப்ப என்னதான் ஆசாபாசமாத் திரிஞ்சாலும், வேலை வெட்டின்னு வர்றப்ப எப்படிப் பிரிஞ்சிடுறோமோ... சினிமா வாழ்க்கையும் அதே மாதிரிதான் ஆகிடுச்சு. பழைய ஆசாபாசங்களை நினைச்சுப் பார்க்க யாருக்குமே இங்கே நேரம் இல்லை. 'அண்ணே... எனக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு'ன்னு ஆசையோடு அவன் என்கிட்ட சொல்வான்னு எதிர்பார்த்தேன். நியூஸ்ல பார்த்துட்டு நான் அவனை வாழ்த்துவேன்னு நினைச்சானோ என்னவோ... அமைதியா இருந்துட்டான். நானும் அமைதியா இருந்துட்டேன். வளர்ந்துட்டானேங்கிறதுக்காக அவனைத் தேடிப் போய் வாழ்த்தச் சொல்றீங்களா? அப்படி எல்லாம் அனுசரிச்சு வாழக் கத்திருந்தா... இன்னிக்கு அமீர் இருக்க வேண்டிய இடமே வேற!"

"மனசுல உள்ளதை இப்படி பளிச்சுனு போட்டு உடைக்கிறதாலதானே பல பேரோட பொல்லாப்புக்கும் ஆளாகுறீங்க?"

" 'நல்லவர்', 'வல்லவர்'னு ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக்கிற எத்தனையோ பேட்டிகளைப் படிக்கிறேன். வெளி நாகரிகத்துக்காக அவர்கள் அப்படிப் பேசினாலும், உண்மை என்னங்கிறது அவங்கவங்க மனசாட்சிக்குத் தெரியும். பந்தி வைக்கிற இடத்தில், எதையும் பதுக்கிவைக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்.

கௌதம் மேனனோட 'விண்ணைத் தாண்டி வருவாயா' முதல் பாதி பார்த்து ஸ்தம்பிச்சுட்டேன். 'ஒரு காதலை இவ்வளவு அழகியலா இதுவரை யாருமே சொன்னதில்லையே'ன்னு பூரிச்சேன். ஆனா, அதே நேரம் செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கும் பொறுப்பை அவர்கிட்ட கொடுத்ததை என்னால் ஏத்துக்க முடியலை. உடனே, அவரை மொழி வட்டத்துக்குள் நான் கொண்டுவர்றதா நினைச்சுடாதீங்க. கருவேல மரம், கம்பங்கூழ், பத்தாயம், குதிர், பானைச்சட்டி, சும்மாடு, மஞ்சள் தண்ணி, சாமி நடவு, பூப்பு நீராட்டு, பச்சை மட்டை, படையல் சோறுன்னு செம்மொழிப் பாட்டில் தமிழ் மக்களோட அத்தனை அடையாளங்களை யும் சேர்க்காமல்விட்ட ஆதங்கம் அத்தனை தமிழ் இயக்குநர்கள்கிட்டயும் இருக்கு. ஆனா, எதுக்கு பொல்லாப்புனு எல்லாருமே அமைதியாகிடுறாங்க. மனசுல பட்டதைப் பட்டுனு சொல்லக்கூட முடியலைன்னா... அப்புறம் என்ன நான் வெங்காயப் படைப்பாளி?"

"உங்க படத்தில் குத்துப்பாட்டே வைக்காத நீங்கள், 'யுத்தம் செய்' படத்தில் நீத்து சந்த்ராவோடு கெட்ட ஆட்டம் போட்டு இருக்கீங்களே?"

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

"அது நட்புக்காக நான் செய்த தப்பு. சேரனும் மிஷ்கினும் வற்புறுத்தினாங்க. அவங்களோட பாசத்தைத் தட்ட முடியலை. அந்தப் பொண்ணுகூட போட்டி போட்டு ஆடுற அளவுக்கு நான் சரியான ஆள்னு எப்படி நம்பினாங்கன்னு தெரியலை... ஆடிட்டேன்! அந்த டான்ஸ் ஸீன் எப்படி வந்து இருக்குன்னுகூட இப்போ வரைக்கும் நான் பார்க்கலை. இனி, அப்படி ஒரு தப்பைப் பண்ண மாட்டேன்!"

" 'ஆதிபகவன்' படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணிவெச்சிருந்த நாயகியை மாற்றிவிட்டு, நீத்து சந்த்ராவையே ரவிக்கு ஜோடி ஆக்கிட்டீங்களே... அந்த அளவுக்கு நீத்துவைப் பிடிச்சுப்போச்சா?"

"உண்மைதான்... எனக்கு நீத்துவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான், டான்ஸ் ஆடப் போன இடத்துல இருந்து பாங்காக் வரைக்கும் நீத்துவைத் தூக்கிட்டு வந்துட்டேன். 'பிடிச்சிருக்கு'ன்னு எந்தப் பெண்ணைப்பற்றியும் நான் சொன்னது இல்லை. அந்த வார்த்தையை நீத்துவோட திறமை சொல்லவெச்சது. நண்பன் மிஷ்கினுக்கு நன்றி!"

"அடுத்த படத்தில் விஜய்யோடு கூட்டணிபோல..."

"சில விஷயங்கள் தள்ளிப் போறதுகூட நல்லதுக்குன்னு தோணும். என் 'கண்ணபிரான்' கதையும் அப்படித்தான். ரெண்டு பேரும் பேசி இருக்கோம். விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாதான் பார்க்குறாங்க. அவார்டுகளை அள்ளிக் குவிக்கிற அளவுக்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா 'கண்ணபிரான்' அவரோட உயரத்தை ஏற்றிவைக்கும். 'அண்ணா... என்னை எடுத்துக்குங்க... எப்படி வேணும்னாலும் செதுக்கிக்கங்க'ன்னு நிக்கிறார். எதுக்கும் தயாரா இருக்கிற இந்த இயல் பான குணமே அவரை எங்கேயோ கொண்டு போயிடும் பாருங்க!"

"தமிழக அரசியல் அரங்கைக் கவனிக்கிறீர்களா? வரும் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் இருப்பாரா?"

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி

"தமிழக அரசியலில் இப்போ விஜயகாந்த்தைத் தவிர்த்துட்டு எதையும் யோசிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தனி மனிதனாக எதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு அவர் விஸ்வரூபம் எடுத்திருப்பது எல்லோரையும் மிரளவெச்சிருக்கு. அவருடைய திருமண மண்டபம் இடிபட்டபோதுகூட பின்வாங்காத அவரோட தைரியம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனா, வரப்போகிற தேர்தலில் விஜயகாந்த்தை சரிகட்ட பெரிய அளவில் பேரம் நடக்கப்போறதா பேச்சு இருக்கு. இத்தனை வருடப் போராட்டங்களை செம தில்லாக் கடந்த விஜயகாந்த், இந்த மாதிரியான பேரத்துக்கு விலை போகக் கூடாது. நிச்சயமா அவர் அப்படிப் போக மாட்டார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. கடந்த தேர்தலில் அவர் களம் இறங்கினப்ப, சினிமாக்காரங்க ஒருத்தர்கூட அவர் பின்னால நிற்கலை. ஆனா, அதையெல்லாம் சட்டை பண்ணாமல் பா.ம.க-வோட கோட்டையிலேயே இறங்கி ஜெயிச்சுக் காட்டினார் விஜயகாந்த். அந்த தில்லும் தைரியமும் இந்தத் தேர்தலிலும் இருக்கும்... இருக்கணும்!"

விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி
விஜயகாந்த் விலை போகக் கூடாது! அமீர் அதிரடி