Published:Updated:

சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி

சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி

பிரீமியம் ஸ்டோரி

சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி
சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி
சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி
- விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி

'கிக்'குக்காக வாழ்க்கையில் எதைச் செய்யவும், எதை இழக்கவும் தயாராக இருக்கும்

இளைஞனின் தில்தான் 'தில்லாலங்கடி'!

தெலுங்கில் ஹிட் அடித்த 'கிக்' படத்தின் உடும்புப் பிடி உட்டாலக்கடி இந்தத் தில்லாலங்கடி. 'ஜெயம்' ரவிக்கு காபியோ, காதலோ எதிலும் கிக் இருக்க வேண்டும். அதற்காகவே தன் மீது வெறுப்புடன் இருக் கும் தமன்னாவை காதலிக்கிறார். தவிர்க் கவே முடியாமல் ரவியின் மேல்காதல் கொள்ளும் தமன்னா, ஒரு கட்டத்தில் அவரது கிக் வேட்டையில் சலிப்படைந்து காதலைக் கை கழுவுகிறார். இன்னொரு பக்கம் காவல் துறை அதிகாரி ஷாம் தீவிர மாகத் தேடும் திருடன்... 'ஜெயம்' ரவி. ஷாம் திருடன் ரவியைப் பிடித்தாரா, ரவி தமன் னாவைக் கைப்பிடித்தாரா என்பதை சற்றே நீ...ளமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி

'தாய்' காவியத்தில் லாஜிக் இல்லை என்பதால், அதன் ரீ-மேக்கிலும் இருக்கக் கூடாது என்று சட்டமா என்ன? ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை லாஜிக் பொத்தல்கள், திரைக்கதை சொதப்பல்கள்.

துள்ளத் துடிக்க நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால், அந்த அபார உயரத்துக்கு நளினமாக நடப்பதும், கண்களை உருட்டி சேட்டை செய்வதும் எடுபடவில்லையே?! எப்போதும் ஓடுவதும், ஆடுவதும், ஏமாற்றுவதுமாக ஸ்க்ரீனில் பரபரப்பாகவே இருக்கிறார். ஆனால், இறுதியில் 'சமூகப் பொறுப்பு உணர்வு உள்ளவர்' என்று திருட் டுக்குக் காரணம் சொல்வதை... எந்தக் கணக்கில் சேர்ப்பது? தங்கம் விலைக்குப் போட்டியாக தமன்னாவின் அழகும் எகிறிக்கொண்டே செல்கிறது. ரவியின் கலாட்டாக்களுக்கு எரிச்சல் அடைவதும், வடிவேலுவுக்குக் காதல் தூபம் போட்டு ஏற்றிவிடுவதுமாகத் துறுதுறுக்கிறார். 'எல்லோரும் சேரும்போது சொல்லுவாங்க. ஆனா, நான் பிரியும்போது சொல்றேன்... ஐ லவ் யூ... ஐ ஹேட் யூ!' என்று சோகத்தில் கலங்கவும் வைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் நெடுக வருகிறார் வடிவேலு. அதிலும் மகனுடன் சேர்ந்து தூக்குக் கயிற்றில் அவர் ஊஞ்சலாடும் காட்சியில் தியேட்டரில் இடி! சில காட்சிகளே வந்தாலும் அத்தனையிலும் கிச்சுகிச்சு மூட்டுகிறார் சந்தானம். மூளையின் எக்ஸ்-ரேயைப் பார்த்து, 'என்ன இது வட்டம் வட்டமா இருக்கு, வஞ்சிர மீனா?' என்று கேட்பதும், டுபாக்கூர் டாக்டராக கோக்குமாக்கு முகபாவனைகள் கொடுப்பதுமாகக் கலகலப்பூட்டுகிறார். ஷாம் போலீஸ் அதிகாரி வேடத்துக்குப் பொருத்தம். ஆனால், அவ்வளவு ஆவேசமாக அலைந்துகொண்டுஇருந்தவரை கடைசியில் 'கைபுள்ள' ஆக்கிக் காலி செய்கிறார்கள்.

நண்பன் வீட்டுக்குள் புகுந்து புத்தகம் எடுப்பதுபோல, ரவி கோடிகளைக் கொள்ளை அடிப்பதில் நமக்கு கிக் ஏறவில்லை. ரவியுடன் அவ்வளவு தூரம் போனில் பேசியிருக்கும் ஷாமுக்கு நேரில் அவரது குரல் அடையாளம் தெரியாமல் போவது... 'என்ன கொடுமை சார் இது?' மெகா கொள்ளைக்காரன் ரவி போலீஸ் அதிகாரி ஆவது ஒரு காமெடி என்றால், அவரிடமே அவருடைய வழக்கை விசாரிக்கச் சொல்வது... முடியலீங்கண்ணா!

சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி

யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'சொல் பேச்சுகேட்காத சுந்தரி' பாடல் மட்டும் வசீகரிக்கிறது. அந்தப் பாடல் முழுக்க ரவிக்களும் தமன்னாக்களும் சேட்டைகள் செய்துகொண்டு இருப் பது கொள்ளை அழகு. அந்த ஒற்றைப்பாடலுக் கான மெனக்கெடலை திரைக்கதையைச் செதுக்குவதிலும் காட்டியிருக்கலாம்!

சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி
சினிமா விமர்சனம் - தில்லாலங்கடி
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு