Published:Updated:

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

பிரீமியம் ஸ்டோரி

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!
விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!
விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!
சிம்புவின் 'இடியட்' முடிவு
விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

சிம்புவின் வழக்கமான விறுவிறு சுறுசுறு பேட்டி இது. ஆனால், ஒரு நிருபர் எடுத்த

பேட்டி அல்ல. இந்த வருடம் 'விகடன் மாணவப் பத்திரிகையாளரா'க தேர்வான 52 மாணவப் பத்திரிகையாளர்கள் இணைந்து சிம்புவை மிரட்டிய பேட்டி. விடைபெறும்போது, "தட் வாஸ் எ குட் இன்டர்வியூ!" என்று 'முதல்வன்' ரகுவரன்போல சிம்பு சிலாகித்தது, மாணவர்களுக்கான அப்ளாஸ் அங்கீகாரம்.

" 'வானம்' படத்தில் ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்டுல நடிக்க எப்படி ஓ.கே சொன்னீங்க?"

"நான் 'சிங்கிள் ஹீரோ', 'டபுள் ஹீரோ'ன்னு வித்தியாசப்படுத்திப் பார்க்குறது இல்லை. 'கோவா' படத்தில் ஒரே ஒரு ஸீன்தான் வந்தேன். ஏன்னா, அதை நான் மட்டும்தான் பண்ண முடியும். ஒரு கதையில் என் கேரக்டர் எப்படி இருக்குன்னுமட்டும் தான் பார்ப்பேன். வேற எதுவும் கிடையாது!"

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

"நீங்க ரிஜெக்ட் பண்ணிய கதைகள், சமயங்களில் ஹிட் படமாகி இருக்கலாம். அப்படி 'நாம மிஸ் பண்ணிட்டோமே'ன்னு நீங்க நினைச்ச படம் ஏதாவது இருக்கா?"

"அப்படி எதையும் மிஸ் பண்ணதா நான் நினைக்கலை. சில படங்கள், 'நல்லவேளை மிஸ் பண்ணோம்'னுதான் நினைக்க வெச்சிருக்கு!"

"செக்ஸ் கலக்காமல் சினிமா எடுக்கவே முடியாதா?"

"செக்ஸ் என்பதை ஒரு படத்தில் இருந்து ஏன் தனியா பிரிச்சுப் பார்க்குறீங்க? அதுவும் கதைக்குள்தான் இருக்கு. 'நாடோடிகள்' படத்தில் லாரி செட்டில் ஒரு அயிட்டம் ஸாங் வரும். அந்தக் கதைக்கு அது தேவை இல்லைன்னு சொல்லலாம். ஆனால், சினிமா வியாபாரத்துக்குன்னு சில கணக்குகள் இருக்கு. அதையெல்லாம் மனசில் வெச்சுதான் அப்படிச் செய்யறாங்க!"

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

"பலமான சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்துதான் நீங்க சினிமாவுக்கு வந்தீங்க. ஆனாலும், உங்க ஆரம்ப காலப் படங்கள் நிறைய தோல்வியைச் சந்தித்தன. ஏன் அப்படி?"

"பொதுவா அறிமுக ஹீரோக்கள் எல்லோரும் 'மினிமம் கேரன்டியா' காதல் படங்களில்தான் நடிப்பாங்க. ஆனா, நான் அப்பவே கமர்ஷியல் படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன். 'தொட்டி ஜெயா', 'மன்மதன்' மாதிரியான வித்தியாசமான படங்களும் பண்ணேன். கொஞ்சம், கொஞ்சமா தான் எனக்கு ஸ்டார் வேல்யூ வந்துச்சு. தமிழ் சினிமாவில் மற்ற ஹீரோக்களின் கிராஃப் உடன் என்னை நீங்க ஒப்பிட முடியாது. என் கிராஃப் வித்தியாசமானது!"

"காதல் பத்தி இப்ப உங்க கருத்து என்ன?"

"காதல் அழகான மெலடி பாட்டு மாதிரி. காதலர்கள் அதில் வர்ற பாடல் வரிகள். பாடல் வரிகள் தப்பா இருக்கலாம். பாட்டு எப்பவும் தப்பா இருக்காது!"

"காதலில் ஆண்கள் ஏன் தோல்வி அடையுறாங்க?"

"மற்ற எல்லா நேரத்துலயும் ஆண்களின் மூளை கரெக்டா வேலை செய்யும். காதல்னு வந்துட்டா அவ்வளவுதான். உண்மையிலேயே ஆண்களின்மூளை தான் ஸ்ட்ராங். ஆனா, லவ் பண்றப்போ மட்டும் மூளை வேலை செய்யுறது இல்லை. இதயம்தான் வேலை செய்யுது!"

"அதெல்லாம் சரி... இன்னும் வீட்டுல உங்களுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலையா?"

"நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா?" எனச் சிரித்துவிட்டுத் தொடர்கிறார். "கல்யாணம் ஒரு சீரியஸான விஷயம். விளையாட்டு இல்லை. 'அப்பா, அம்மா சொல்றாங்க', 'வயசாகுது'ன்னுலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இது வரை நம்ம பெட்ரூம்ல தனியா தூங்கிட்டு இருக்கோம். திடீர்னு நாளையில இருந்து என் பெட்ரூம்ல இன் னொரு பெண்ணும் வாழ்க்கை முழுக்கத் தூங்கப் போறான்னா, அதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். சட்டுன்னு முடிவு எடுத்துட முடியாது. எனக்குக் கடந்த மூன்றரை வருஷமா கேர்ள் ஃப்ரெண்ட் கிடையாது. தனியாத்தான் இருக்கேன். அந்தப் பொண்ணு யாருன்னு இனிமேதான் தேடணும்!"

"நீங்க ஹீரோவா படம் பண்ணிட்டு இருக்குறப்பவே உங்க அப்பாவும் ஹீரோவா நடிக்கிறார். ஏன் இப்படி?"

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

"ஒவ்வொருத்தருக்கும் ஒரு மார்க்கெட் இருக்குங்க. நான்தான் தமிழ் சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் நானும் ஒருத்தன். அப்பாவுக்கு உள்ள மார்க்கெட்டுக்கு அவர் பண்றார். அவரோட வயசுல என்னால சத்தியமா இவ்வளவு வேலை பார்க்க முடியாது. அவர் இன்னிக்கும் ஆக்டிவ்வா இருக்கார். ஒருவேளை நாளைக்கு என் பையன் நடிக்க வந்தா அவனுக்கும் பாட்டுப் பாடி டான்ஸ் பண்ணுவார்!"

" '3 இடியட்ஸ்' தமிழ் ரீ-மேக்கில் விஜய் கூட நீங்களும் நடிக்கிறீங்களா?"

"விஜய் சார் பெரிய ஹீரோ. அவர்கூட நடிக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, எனக்கு அஜீத் ஃபேன்ஸ் அதிகம். அதையும் யோசிச்சுதான் முடிவு எடுக்கணும். அஜீத்ரசிகர் களை சங்கடப்படுத்திடக் கூடாதுன்னு தயக்கமா இருக்கு. இன்னும் முடிவு பண்ணலை!"

"உங்களுக்குப் பிடிச்ச நடிகைகள் யார்?"

"முன்னாடி குஷ்பு, அப்புறம் ஜோதிகா, இப்போ அனுஷ்கா!"

"உங்க ட்ரீம் புராஜெக்ட் என்ன?"

"பண்ணலாங்க, நிறைய பண்ணலாம். ஆனா, அன்னிக்கு 'இன்செப்ஷன்' படம் பார்க்கப் போயிருந்தேன். நாலு ஸீன் புரியலைன்னதும் முக்கால்வாசிப் பேர் தூங்கிட்டாங்க. இதுதான் நம்மகிட்ட உள்ள பிரச்னை. கொஞ்சம் கவனிச்சுப் புரிஞ்சுக்க முயற்சியே பண்றது இல்லை. அப்புறம் எங்கிருந்து ட்ரீம் புராஜெக்ட் பண்றது?"

"லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் இன்னமும் உங்களுக்குத் தேவையா?"

"நீங்க ஏன் அந்தப் பட்டத்தை இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க. உங்க ஃப்ரெண்டை, கேர்ள் ஃப்ரெண்டை செல்லப் பேர் வெச்சுக் கூப்பிடுவீங்கள்ல. அது மாதிரிதான் இதுவும்!"

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!

"தமிழ் சினிமாவில் இப்போ உங்களுக்கு யார் போட்டி?"

"நான் யாரையும் போட்டியா நினைக்கலை. என் படம் ஓடுதா, கலெக்ஷன் வருதான்னு மட்டும்தான் பார்ப்பேன்!"

"இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் இளைஞர்களைக் குறி வெச்சு மட்டுமே படங்கள் தயாரிக்கப்படுதே. இது சினிமாவுக்கு நல்லதா, கெட்டதா?"

"இது ரொம்ப உண்மைதான். இளைஞர்கள் சப்ஜெக்ட்டுக்குதான் பெரிய ஓபனிங் கிடைக்குது. ஆனா, சென்ஸிபிளா படம் பண்ணா எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர முடியும்!"

விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!
விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு