Published:Updated:

த்ரிஷா இந்தியில் ஹிட்டா?

த்ரிஷா இந்தியில் ஹிட்டா?

பிரீமியம் ஸ்டோரி

த்ரிஷா இந்தியில் ஹிட்டா?
த்ரிஷா இந்தியில் ஹிட்டா?
த்ரிஷா இந்தியில் ஹிட்டா?
கி.கார்த்திகேயன்
த்ரிஷா இந்தியில் ஹிட்டா?

சென்னைக் கண்மணி த்ரிஷா இனி மும்பை மோகினி! அம்மணி ஹீரோயினாக

இந்தியில் நடித்த முதல் படம் 'கட்டா மிட்டா' கடந்த வாரம் ரிலீஸ். தென்னிந்திய ஹிட் ஹீரோயின்களை இந்தியில் அறிமுகம் செய்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது ஹேமமாலினி, ஸ்ரீதேவி தொடங்கி தீபிகா படுகோன், அசின் வரையிலான சக்சஸ் சென்டிமென்ட். அந்தப் பட்டியலில் அழுத்த முத்திரை பதிக்கும் த்ரிஷாவின் ஆசையை 'கட்டா மிட்டா' நிறைவேற்றி இருக்கிறதா?

1989ம் ஆண்டு வெளியான 'வெள்ளானகளுடெ நாடு' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் 'கட்டா மிட்டா'. மோகன்லால் ஷோபனா நடித்த அந்தப் படம் அப்போது கேரளாவில் ஹிட். சூதுவாது தெரியாத ஒரு அம்மாஞ்சி கான்ட்ராக்டரைப்பற்றிய கதை. கான்ட்ராக்டராக அக்ஷய் குமாரும், முனிசிபல் கமிஷனராக த்ரிஷாவும் நடித்திருக்கிறார்கள்.

த்ரிஷா இந்தியில் ஹிட்டா?

இந்தியில் கட்டா என்றால் காரம், மிட்டா என்றால் இனிப்பு. த்ரிஷாவுக்கு இந்தப் படம் பாலிவுட்டில் பளிச் அறிமுகமா என்று கேட்டால், 'கட்டா மிட்டா கலவை' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆரவார வரவேற்பும் இல்லை, திட்டித் துளைக்கும் விமர்சனங்களும் இல்லை. படம் துவங்கி முக்கால் மணி நேரம் கழித்துதான் த்ரிஷா தலைகாட்டுகிறார். வழக்கமான இந்திப் பட ஹீரோயின்களின் பகட்டுப் பந்தா அபார அழகு என்ட்ரி இல்லாமல், சாதாரண சுடிதாரில் டாக்ஸியில் இருந்து இறங்கி வருகிறார். இந்திரா காந்தி பாணியில் முழு முதுகு மறைக்கும் முழுக்கை ஜாக்கெட் அணிந்து முனிசிபல் கமிஷனராக சிடுசிடுக்கிறார். படத்துக்குத் தேவையே இல்லாத இரண்டு பாடலில் ஆடிப் பாடுகிறார் (அதில் ஒரு பாடல் முழுக்க மேலாடைகளில் அபார இறக்கம்!)

'த்ரிஷா 'புலியா... பூனையா?' என்றே கணிக்க முடியாத பெர்ஃபார்மன்ஸ். கதையில் அந்த அளவுக்குத்தான் ஸ்கோப்!' என்பது பரவலான விமர்சனம். 20 வருடங்களுக்கு முந்தைய கேரளப் பின்னணிகொண்ட கதையின் ஹீரோயினிடம் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?! படமும் 'அவசியம் பார்த்தே ஆக வேண்டிய படமல்ல... பார்த்தாலும் பாதகம் இல்லை' வகையறா!

த்ரிஷா இந்தியில் ஹிட்டா?

பாலிவுட்டில் முதல் வரிசை ஹீரோயின் அந்தஸ்தை எட்டிப் பிடித்து அதில் நிலைத்திருக்க, நடிக்கும் ஒவ்வொரு படமும் ஹிட் அடிக்க வேண்டும். 'கஜினி' ஹிட். ஆனால், 'லண்டன் ட்ரீம்ஸ்' பப்படம் ஆனதில் மீண்டும் விஜய்யுடன் டூயட் பாட வந்துவிட்டார் அசின். ஆனால், த்ரிஷாவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த படத்தில் கிளாமர் கிராமர் படித்து முன் வரிசைக்கு முன்னேறலாம். ஆனால், அவர் அடுத்து இந்தியில் நடிக்கும் படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா?' ரீமேக் என்பதுதான் கொஞ்சம் உதறல். எது எப்படியோ... ஆல் த பெஸ்ட் த்ரிஷ்!

த்ரிஷா இந்தியில் ஹிட்டா?
த்ரிஷா இந்தியில் ஹிட்டா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு