Published:Updated:

புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?

புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?

பிரீமியம் ஸ்டோரி

"புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?"
புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?
புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?
பாரதிதம்பி
புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?

'பொன்மாலைப் பொழுது' தொடங்கி 'உசுரே போகுதே' வரைதிரை இசைத்

தமிழின்திசையைத் தீர்மானிப்பவர் வைரமுத்து. இவர் வகுப்பதே மாறி வரும் திரைப் பாட்டின் வாய்ப்பாடு. 'இந்திரன் தோட்டத்து முந்திரி'யில் தெறித்த இளமையை 'எந்திரன்' வரை கடத்தி வந்திருக்கிறார். பெசன்ட் நகர் வீட்டில் வழக்கமான கம்பீரத்துடன் பேசத் தொடங்குகிறார் கவிஞர்.

"எப்படி வந்திருக்கிறது 'எந்திரன்'?"

" 'எந்திரனில்' நான் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று 'காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?' என்ற பாடல். படத்தில் ரஜினி விஞ்ஞானி. அவரைக் காதலிக்கும் அழகி ஐஸ்வர்யா ராய். அதனால், இந்தப் பாடலின் மொழி வேறாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். இதன் நாயகன் சோதனைச் சாலைக்குள்ளேயே தன் வாழ்வைத் தொலைத்துக்கொண்ட விஞ்ஞானி. அவருடைய காதலில் 'தென்றல்', 'மானே', 'தேனே' என்ற வழக்கமான மொழியைக் கையாள முடியாது. அதற்காக, விஞ்ஞானக் கட்டுரையும் எழுத முடியாது. காதல்தான் மையம். விஞ்ஞானம் அதில் துணைப் பொருள். இப்படித்தான் விஞ்ஞான மொழியில் இந்தப் பாடல் உருவானது. பொதுவாக, ஷங்கருக்கு நான் பத்துப் பதினைந்து பல்லவிகள் எழுதுவது உண்டு. ஆனால், 'உப்புக் கருவாடு' பாடலுக்குப் பிறகு ஒரே ஒரு பல்லவி எழுதியது இதற்கு மட்டும்தான். 'இதுவே நிறைவாக இருக்கிறது' எனச் சொல்லிவிட்டார்.

புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?

இந்தப் பாடலை, 'மனிதக் காலடிகளே படாத இடத்தில் படமாக்க வேண்டும்' என முடிவெடுத்து, ஆப்பிரிக்க தேசம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 'எந்திரன்' படப்பிடிப்பே இந்தப் பாடலில் இருந்துதான் துவங்கியது. பாடல் எடுத்து வந்த பிறகு 'எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. படம் மிகச் சிறப்பாக வரும்' என்று ஷங்கர் சொன்னார். ஷங்கர் 100 முறை யோசிக்கிறார். ஒரு முறை முடிவு எடுக்கிறார். அந்த முடிவை 100 சதவிகிதம், தான் நினைத்ததுபோலக் கொண்டு வர எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் போராடுகிறார். 'எந்திரன்' படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்தபோது 'எனக்கு உடம்பு எல்லாம் வலிக்கிறது!' என்றார். 'கவலைப்படாதீர்கள் ரஜினி. மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளைச் சொன்னேன்!"

புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?

"எப்படி இருக்கிறார் 50 கே.ஜி. தாஜ்மஹால்?"

" 'ஜீன்ஸி'ல் பார்த்த ஐஸ்வர்யா, இப்போதும் அதே இளமையோடு இருக்கிறார் என்பது உண்மை. இப்போது பார்க்கும் ஐஸ்வர்யா, அதைவிட அழகாக இருக்கிறார் என்பதும் உண்மை!"

"செம்மொழி மாநாட்டின் மூலமாக தமிழுக்குக் கிடைத்த நன்மைகள் என்னென்ன?"

"உலகத் தமிழர்களை இணைக்கக்கூடிய ஒரே சங்கிலி, மொழிதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. கட்சி, சாதி, மதம் இவற்றைத் தாண்டி தமிழர்களை இணைக்கக்கூடிய தாம்புக்கயிறு மொழிதான். தமிழைப் பேசு வதும் தமிழில் எழுதுவதும் பெருமை, பெருமிதம் என்ற உணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டு இருக் கிறது. தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கலைஞர் பிறப்பித்த உத்தரவு இதில் முக்கியமானது. தமிழனுக்குக் காதல் உணர்வு, பக்தி உணர்வு, பதவி உணர்வு எல்லாம் நிறையவே இருக்கிறது. மொழி உணர்வுதான் மிகக் குறைவாக இருக்கிறது. அதை உருவாக்க முயற்சித்துஇருப்பதை இந்த மாநாட்டின் தலையாய நன்மையாகக் கருதுகிறேன்!"

"அரசியல் சார்பற்ற பொதுவாழ்க்கைக்கு வர விரும்புவதாக அண்மையில் சொல்லி இருந்தீர்களே?"

"அரசியலால் தமிழ்நாட்டுக்கு நிறைய நன்மைகள் நிகழ்ந்திருக்கின்றன என்றபோதிலும், கட்சி என்ற சங்கிலி மனிதர்களைப் பூரணமாகப் பயணிக்க விடுவது இல்லை. இன்றைய இளைஞர்களின் மிகப் பெரிய கேடாக நான் நினைப்பது மதுவையும் புகையையும். இவற்றில் இருந்து இவர்களை விடு விக்க வேண்டும். அரசாங்கத்தையே நம்பி இல்லாமல் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி கிராமம் உண்டாக்க வேண்டும். அதை மாநிலமே, தேசமே பின்பற்ற வேண்டும். இப்படி நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. இதே போன்ற பொதுச் சிந்தனையில் ஒருமித்த கருத்துடைய நண்பர்கள், அமைப்புகள் தமிழகம் முழுக்க நிறைய இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்தே இந்தப் புதிய சிந்தனை. எங்கள் 'வெற்றித் தமிழர்பேரவை' எதிர்காலத்தில் இதை நோக்கிய பணிகளில் ஈடுபடும்!"

" 'மது, இன்றைய இளைஞர்களைக் கெடுக்கிறது' என்கிறீர்கள். ஆனால், தமிழக அரசுதானே டாஸ்மாக் மூலம் மது விற்கிறது?"

"அரசாங்கம் முழு மனதோடு மது விற்பதாக நான் நினைக்கவில்லை. அரசு, மதுவை ஊக்கப்படுத்துவதற்காக விற்கவில்லை. மதுவினால் கிடைக்கக்கூடிய வருவாயை வேறு வழிகளில் உண்டாக்கிவிட்டால் மதுவுக்கான தேவையே ஏற்படாது!"

"புலவர்கள் என்றாலே 'அரசனை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பாடி பரிசில் பெறுவது' என்ற பண்டைய பழக்கம் இப்போதும் தொடர்கிறதோ?"

புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?

"நல்ல கேள்வி. இதற்கு நான் பதில் சொல்ல விரும்புகிறேன். கவிதை என்பது ஒரு கலை வடிவம். அந்தக் கலை வடிவத்துக்கு என்று சில அழகியல் கூறுகள் உண்டு. விதந்து சொல்வதும், தான் சொல்ல வந்த கருத்தை விசாலமாக விரித்துச் சொல்வதும் ஒரு கவிஞனின் பண்பு. கவிஞர்களின் உரையாடலிலோ, உரையிலோ இப்படி விதந்து சொல்வதைக் காண முடியாது. கவிதை என்பது வேறு. கவிதைக்குப் பொய் அழகு என்றால், கவிதையில் கற்பனை அழகு என்று அர்த்தம். 'ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்கிலாதார்' குறித்து நான் கவலைப்படுவது இல்லை. கவிதையைக் கவிதையாகப் பார்க்காமல் கணிதமாகப் பார்ப்பதால் வருகிற விபத்து இது. ஒரே ஒரு அம்பு, ஒரு மானைத் துளைத்து, மரத்தைத் துளைத்து, பிறகு ஒரு வேங்கையைத் துளைக்கிறது என்று சொன்னால், அதன் பொருள் என்ன? வில் வித்தையில் கெட்டிக்காரன் என்பதைஉறுதிப்படுத்துவதற்கான உத்தி அது. 'கண்ணே, நீ சொன்னால் பூமி வலம் இடமாய்ச் சுற்றும்' என்றால் சுற்றுமா? அது அவள் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. புலவர்களின் புகழ்ச்சியையும் இப்படிக் கவி மனதோடுதான் புரிந்து கொள்ள வேண்டும்!"

புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?
புகழ்வது மட்டும்தான் புலவர்கள் வேலையா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு