Published:Updated:

அசின் வாழ்த்திய சின்ன அசின்!

அசின் வாழ்த்திய சின்ன அசின்!

பிரீமியம் ஸ்டோரி

அசின் வாழ்த்திய சின்ன அசின்!
அசின் வாழ்த்திய சின்ன அசின்!
அசின் வாழ்த்திய சின்ன அசின்!
நா.கதிர்வேலன்
அசின் வாழ்த்திய சின்ன அசின்!

ச்சரிசிப் பற்கள் காட்டி பூர்ணா சிரித்தால், இதயம் இனிக்கவே செய்கிறது. "10

நிமிஷ பிரேக்ல பேசிரலாம் சார்... ப்ளீஸ்... ப்ளீஸ்!" 10 நிமிடங்களில் கொஞ்சம் பேசினாரா, கொஞ்சிப் பேசினாரா... ஹ்ம்ம்! எதுவாக இருந்தாலும் பூர்ண சந்தோஷம்தான்!

"உங்களை 'சின்ன அசின்'னு சொல்றாங்களே?"

"அட, ஆமாங்க! எங்கே போனா லும் 'நீங்க அசின்தானே'ன்னு விசாரிக் கிறாங்க. கை கொடுக்குறாங்க. ஒரு திறமையான நடிகையின் சாயலில் இருக்கிறது நல்ல விஷயம்தானே? விஜய் சார்கூட, 'அப்படியே அசின் மாதிரி இருக்காங்க'ன்னு ஒரு விழா வில் என்னைப்பார்த்துச் சொன்னார். அப்படியே றெக்கை கட்டிப் பறக்குற மாதிரி இருந்துச்சு. அசினே ஒரு தடவை என்னை நேர்ல பார்த்தப்போ, 'என்னை மாதிரியே இருக்கீங்க'ன்னு சொல்லிச் சிரிச்சாங்க. அசின் இப்போ இருக்கிற இடத்துக்குப் பக்கத்துல வந்தா... அதுவே சாதனை சந்தோஷம் தான்!"

அசின் வாழ்த்திய சின்ன அசின்!

"இந்தப் பக்கம் ஆளே காணோமே?"

"அதான் வந்துட்டேன்ல... இப்போ நடிச்சுட்டு இருக்குற 'நரன்' படம் எனக்கு நிச்சயம் நல்ல பேர் வாங்கித் தரும். இப்போ படங்களில் ஹீரோயி னுக்கு இரண்டு பாட்டு, நாலு ஸீன் கிடைச்சாலே பெரிய விஷயம். ஆனா, 'நரன்' படத்தில் என் கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கார் இயக்குநர் ஆதி. எந்த ஹீரோயினும் நடிக்க ஆசைப்படும் கதை. அடுத்தடுத்து 'வித்தகன்', 'துரோகி', 'அர்ஜுனன் காதலி', 'நரன்'னு வரிசையா நல்ல படங்கள் அமைஞ்சிருக்கு. ரொம்ப ரொம்ப ஹேப்பி!"

"கிளாமரா நடிப்பீங்களா?"

"நிச்சயம் நடிப்பேன். ஆனா, லிமிட் தாண்ட மாட்டேன். அது போக, என்உடம் புக்கு கிளாமர் செட் ஆகாது. ரசிகர்களுக்கு நடிகையோட முகத்தைப் பார்க்கணும்னு நினைப்பு வரலாம். உடம்பைப்பார்க்க ணும்னு நினைப்பு வரக் கூடாது. என்கிட்ட பக்கத்து வீட்டுப் பெண் மாதிரியான அழகையும் மேனரிஸத்தையும்தான் எதிர்பார்க்குறாங்க. நான் முன்னணி நடிகை ஆகணும்னு ஆசைப்படலை. ஒரு கௌரவமான நடிகைன்னு பேர் வாங் கணும். அவ்வளவுதான்!"

அசின் வாழ்த்திய சின்ன அசின்!

"தொடர்ந்து அறிமுக இயக்குநர்கள் படங்களிலேயே நடிக்கிறீங்களே?"

"இப்பெல்லாம் அவங்கதான் மிரட்டுறாங்க. சாதிச்ச இயக்குநர்களையே மிரளவைக்கிற மாதிரி படங்கள் பண்றாங்க. உயிரைக் கொடுத்து புது இயக்குநர்கள் உழைக்கும்போது

அசின் வாழ்த்திய சின்ன அசின்!

நிச்சயம் அது வெற்றிப் படமாத்தான் அமையும். நீங்களே ஒரு லிஸ்ட் எடுத்துப் பாருங்க. ஹிட் கொடுத்தவங்களில் பாதிப் பேர் புது இயக்குநர்கள்தான்!"

"சினிமா தவிர என்ன பிடிக்கும்?"

"டான்ஸ்... டான்ஸ்... டான்ஸ் மட்டும்தான்! 'சங்கராபரணம்' மாதிரி ஒரு படம் கிடைச்சா, ஒரு பைசாகூடச் சம்பளம் வாங்க மாட் டேன். ஒரு வருஷம் ஆனாலும் ஆசை ஆசையா நடிச்சுக் கொடுப்பேன். நான் ஆடி நீங்க பார்த்தது இல்லையே? ஒருநாள் வீட்டுக்கு வாங்க.. அப்புறம் நீங்க என் ரசிகர் தான்!"

அசின் வாழ்த்திய சின்ன அசின்!
அசின் வாழ்த்திய சின்ன அசின்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு