Published:Updated:

வெயில் பொண்ணு சனுஷா!

வெயில் பொண்ணு சனுஷா!

பிரீமியம் ஸ்டோரி

வெயில் பொண்ணு சனுஷா!
வெயில் பொண்ணு சனுஷா!
வெயில் பொண்ணு சனுஷா!
நா.கதிர்வேலன்
வெயில் பொண்ணு சனுஷா!

"நந்தியைக் கும்பிட்ட பிறகுதான் சிவனைக் கும்பிடணும்னு சொல் வாங்க. தன்னை

நந்தியா நினைக்கும் ஒருவனுக்கும் அவனை வணங்காமல் இருக்கிற இன்னொருவனுக்கும் இடையிலான பிரச்னைகள்தான் கதைக்களம். இதை அடிநாதமாவெச்சு ஒரு கிராமத்தை, அதன் இயல்பான வாழ்க்கையைச் சொல்லப்போறேன். இன்னும் உறவுகளும் உணர்வுகளும் கிராமத் தில்தான் மிச்சமாத் தேங்கி இருக்கு. அன்பான மனிதர்கள், வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள்னு கிராமத்தோட எல்லா அம்சங் களையும் அள்ளித் தரப் போறேன்!" - சிரித்தபடி, ரசித்த படி பேசுகிறார் இயக்குநர் தமிழ்வாணன். 'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்' தந்தவரின் மூன்றாவது படம் 'நந்தி'!

"யதார்த்த படங்கள் ஹிட் ஆவதால், நீங்களும் கிராமத்துக்குப் பஸ் ஏறிட்டீங்களா?"

வெயில் பொண்ணு சனுஷா!

"இரண்டு நகரம் சார்ந்த படங்களுக்குப் பிறகு, கிராம வாழ்க்கையைச் சொல்லணும்னு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தேன்.கிராமங்கள்பத்தி இன்னும் சொல்ல வேண்டியது நிறையவே இருக்கு. அங்காளி பங்காளி சண்டை போடுவாங்க. அடுத்த நிமிஷமே கூடி நின்னு கெடா வெட்டுவாங்க. கிராமத்தில் அன்பு, கோபம், பாசம் எல்லாமே 100 சதவிகிதம் நிஜம். நந்தியோட கதைக்களம்... ராமநாதபுரம். வெயிலும், புழுதியும், வியர்வையும் நிறைஞ்ச ராமநாதபுரத்தை அப்படியே காட்டியிருக்கோம். சினிமாத்தனம் இல்லாத ஓர் அசல் கிராமத்துக் கதை... நீங்க நம்பி வரலாம்!"

"அகில் எப்படி நடிச்சிருக்கிறார்?"

வெயில் பொண்ணு சனுஷா!

"முதலில் 'இந்த கேரக்டரை என்னால் தாங்க முடியுமா?'ன்னு அகில் பயந்தார். தைரியம் கொடுத்ததும் துணிஞ்சு இறங்கினார். இப்போ கேரக்டராவே மாறிட்டார். யாராலும் கணிக்க முடியாத, புரிபடாத முரட்டுப் பையனா வர்றார் அகில். அவருக்குக் காதல் பூக்குது. அந்தக் காதலுக்கு சாதியோ, மதமோ தடை போடலை. சூழல் குறுக்கே வந்து சுழற்றியடிக்குது. இந்த மொத்த உணர்வுகளையும் நான் நினைச்ச மாதிரி நடிச்சுக் கொடுத்திருக்கிறார் அகில். உண்மை யில் இந்தப் படம் அவருக்கு நல்ல அடையாளமா இருக்கும்."

"'ரேணிகுண்டா' சனுஷாவை மறுபடியும் கூட்டிட்டு வந்திருக்கீங்கபோல?"

"இப்பதான் அந்தப் பொண்ணு பத்தாவது பாஸ் பண்ணிட்டு வந்திருக்கு. 'ரேணிகுண்டா'வில் ஒரு வார்த்தை பேசாமல் முகத்திலேயே அவ்வளவு உணர்ச்சிகளை சனுஷா காட்டிய விதம்... பிரமாதம். நந்தியில் சனுஷாவுக்கு வாயாடி கேரக்டர். எப்பவும் துடுக்குத்தனமா பேசுற பொண்ணு. அதில் பேசாம பிச்சு உதறின பொண்ணு, இதில் பேசிப் பின்னி எடுத்திருக்கு!"

வெயில் பொண்ணு சனுஷா!
வெயில் பொண்ணு சனுஷா!

"இசையைப்பத்திச் சொல்லுங்க?"

"பரத்வாஜுக்கு இது 51-வது படம். பரத்வாஜ் இதுவரைக்கும் கிராமத்துப் பக்கம் போனதே இல்லை. அவரை அப்படியே தூக்கிக் கொண்டுபோய் ராமநாதபுரத்தில் தங்க வெச்சு, மண் மணக்க டியூன் வாங்கினோம். 'வாராயோ தோழி வாராயோ' பாடலுக்கு அடுத்து நாங்க பண்ணியிருக்கிற 'வேத கோஷம் முழங்கவே' என்ற பாட்டுதான் இனிமேல் எல்லாக் கல்யாண வீட்டிலும் ஒலிக்கும். அப்படி ஓர் அழகோடு வந்திருக்கு. இந்தப் பாட்டு மாதிரியே படமும் உங்களுக்குப் பிடிச்சா எங்களுக்குச் சந்தோஷம்!"- வாய் நிறையச் சிரிப்போடு வழியனுப்பிவைக்கிறார் தமிழ்வாணன்!

வெயில் பொண்ணு சனுஷா!
வெயில் பொண்ணு சனுஷா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு