பிரீமியம் ஸ்டோரி

1985 to 2010
1985 to 2010
1985 to 2010
நா.கதிர்வேலன்
1985 to 2010

'நாங்க' என் 25-வது படம். கல்லூரி வாழ்க்கை எப்படி நம் மொத்த வாழ்க்கையையும்

தீர்மானிக்குது, அதில் ஒவ்வொ ருத்தர் பங்கும் எப்படி இருக்கணும்னு முதல் படம் 'தலைவாசல்' எடுத்தேன். அப்புறம் கமர்ஷியல், ஆக்ஷன்னு வேற ஏரியா போயிட்டு, இப்போ மறுபடியும் கல்லூரி வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கேன். வெறுமனே காலேஜ் கேம்பஸ், பசங்களோட குறும்புன்னு மட்டும் இல்லாமல், கல்லூரி வாழ்க்கை தரும் அனுபவங்களைத்தான் அதிகம் பேசி இருக்கேன். எனக்கு இது முக்கியமான படம். எல்லோரும் அப்படியே உணரணும் என்பதுதான் என் விருப்பம்!" - நிதானமாகப் பேசுகிறார் டைரக்டர் செல்வா.

"ஐந்து தனிப்பட்ட காதல் கதைகள். எல்லாக் கதைகளையும் ஒரே கோட்டில் கொண்டுவந்து அழகாப் பொருத்தி இருக்கோம். இந்த டைப்பில் கதை சொல்வது தமிழுக்கு ரொம்பவும் புதுசு. 13 புதுமுகங்களை அறிமுகம் செய்றேன். இந்த நடிகர்கள் எல்லோருமே திரை உலகம் சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களின் வாரிசுகள். பொழுதுபோக்குக்காக நடிக்க வந்தவங்க இல்லை. எல்லோருமே இதை ரொம்ப மனம் விரும்பிச் செய்றாங்க!"

1985 to 2010

"எந்தக் காலகட்டத்தில் அமைந்திருக்கிறது கதை?"

"1985-ல் நடக்கிற கதை. இளையராஜாவின் இசை ஒரு கதாபாத்திரமாகவே படத்தில் வருகிறது. கல்லூரி வட்டாரத்திலும், மாணவர்கள் மத்தியிலும் அவரின் பாதிப்பு அப்போது அதிகம். 85 வருஷப் பாடல்கள் போல்தான் இருக்கும். என் முதல் படமான தலைவாசலுக்கு இசையமைத்த பாலபாரதிதான் இதற்கும் இசை. நீங்கள் நிச்சயம் 85-ம் வருடத்துக்குப் பயணம் போக, உத்தரவாதம் தர முடியும். 2010-ன் நினைவுகளும் இதில் கொஞ்சம் உண்டு. இப்போது ஒன்று கூடுகிற மாணவர்கள் நினைத்துப் பார்க்கிற மீள்பதிவுதான் இந்தக் கதை!"

"எல்லோரும் புதுமுகங்கள் என்றால் இயக்குவது கஷ்டமாக இல்லையா?"

1985 to 2010

"எல்லோரும் புதுமுகங்களாக இருந்து வந்தவங்கதானே! இப்போ புதுசா வர்றவங்ககிட்ட கேமரா பயம் இல்லை. சின்னதா ஒரு பதற்றம், அதுவும் முதல் நாள் ஷூட்டிங்கிலேயே காணாமப்போயிடுது. படம் முழுக்க பாஸிட்டிவ் காட்சிகள்தான். 'எல்லாமே தப்பா இருக்கு, இவங்க வந்துதான் திருத்துறாங்க'ன்னு ஊருக்கு புத்திமதி சொல்லலை. ஆபாசம் கிடையாது. பிள்ளைகளோட இந்தப் படத்துக்கு வர முடியும். புதுமுகங்களைக் குறைச்சு மதிப்பிட முடியாது. நான் 'அமராவதி'யில் அறிமுகப்படுத்தியவர்தான் அஜீத்!"

1985 to 2010

"புதுமுகங்கள் முற்றிலுமாக நடித்து, படம் வெளிவருவது போராட்டமாக இருக்காதா?"

"வியாபாரத்தில் நிச்சயம் ரிஸ்க் இருக்கு. ஆனால், மக்களிடம் நல்ல படைப்பைக் கொண்டுபோய் சேர்க்கிற கடமையும் இருக்கு. கதையை முழுக்க நம்பி இருக்கேன். நடிகர்களை நல்லபடியாக் கையாண்டு இருக்கேன். கதை சொல்லும் பாணியிலும் புதுமையைக் கொண்டுவந்திருக்கேன். நல்ல கதைக்கு மரியாதை இருக்கிற காலம் இது!"

1985 to 2010
1985 to 2010
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு