பிரீமியம் ஸ்டோரி

குட்டிப் பிசாசு!
குட்டிப் பிசாசு!
குட்டிப் பிசாசு!
நா.கதிர்வேலன்
குட்டிப் பிசாசு!

பாலாஜி சக்திவேலின் 'வழக்கு எண் 18/09' திரைப்படத்தின் வொர்க்கிங் ஸ்டில்களைப்

பார்க்க நேர்ந்தபோது இங்கே என்னதான் நடக்கிறது எனக் கேள்வி எழுந்தது. அது போட்டோ ஷூட் அல்ல; திரைப்படத்துக்கான முழுமையான ஷூட்டிங் எனத் தெரிந்த தும்... ஆச்சர்யம்.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் பேசினால், மனிதர் இன்னும் ஆச்சர்யப்படுத்தும்படி பேசுகிறார்... "ஆமாங்க, இது ஸ்டில் கேமராதான். மூவி ரிக்கார்டிங்குக்கான ஒரு ஆப்ஷனை இந்த கேமராவில் சேர்த்தபோது, அது இப்படிப் பிரபலமாகும் என கேனான் கம்பெனிக்காரர்களே எதிர்பார்க்கவில்லை. உலகம் எங்கும் இந்த கேமரா குறும்பட ஃபிலிம் சர்க்கிளில் புது வெள்ளத்தைப் பாய்ச்சி இருக்கிறது. ஆங்காங்கே வெவ்வேறு பயனீட்டு அளவில் இதை உபயோகப்படுத்தி இருந்தாலும், முழு அளவில் திரைப்படத்தில் இதை உபயோகப்படுத்துவது இதுதான் முதல்முறை. 'வழக்கு எண் 18/09'ன் கதை அமைப்புக்கு, பயன்பாட்டுக்கு இது பொருத்தமானதாக இருந்தது. படத்தின் பட்ஜெட்டை மிச்சம் செய்வதற்காகவே, டிஜிட்டல் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தப் படத்தின் கதைக்கு, மூடுக்குப் பொருத்தமாக இருப்பதால்தான் டிஜிட்டலில் படம் பிடிக்கிறேன். மேலும், இந்தச் சின்ன கேமராவில் படம் பிடிப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அதில் உள்ள சவால் எனக்குப் பிடித்திருக்கிறது. மீண்டும் புதிதாகத் தொழில் கற்று முதல் படம் செய்பவரைப்போல் இதில் உணர்கிறேன். புது முயற்சி களை உற்சாகப்படுத்துவதில் பாலாஜி சக்திவேல் ஆர்வம் உள்ளவர். 'காதல்' படத்தில் முதலில் இதன் விஷ§வல் ஸ்டைல் இப்படித்தான் இருக்கும் என சில டெஸ்ட் ஷூட்களைப் படம் பிடித்து, லேப்பில் பிரின்ட் பார்த்தபோது, எனக்கே கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பாலாஜிதான் உற்சாகப்படுத்தினார். 'காதல்' வெற்றி ஊர் அறிந்தது. அதுபோல் இந்தப் படத்தையும் இந்த சின்ன கேமராவில் ஷூட் செய்யப்போகிறேன் என்றதும், முதலில் ஓ.கே. சிக்னல் காட்டியது அவர்தான்.

குட்டிப் பிசாசு!

தர்மபுரியில் ஒரு வாரம் ஷூட்டிங். அவுட்டோர் என்பதால் ஏதாவது தப்பு செய்தால் மறுபடியும் போக முடியாது. அதனால், பாதுகாப்புக்கு வழக்கமான கேமராவும் எடுத்துப் போகலாம் என சிலர் சொன்னார்கள். தயாரிப்பாளர் லிங்குசாமிதான், 'புதிய முயற்சி புதிதாகவே இருக்கட்டும். தயங்காதீர்கள். தப்பு வந்தால் மறுபடி போய்க்கொள்ளலாம்' என உற்சாகப்படுத்தினார். ஒரு வாரம் ஷூட்டிங் முடிந்து வந்து பார்த்தோம். படம் அவ்வளவு அருமையாக வந்திருந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி!"

குட்டிப் பிசாசு!
குட்டிப் பிசாசு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு