Published:Updated:

காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?

காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?

பிரீமியம் ஸ்டோரி

"காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?"
காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?
காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?
நா.கதிர்வேலன்
காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?

திரும்பி அவகிட்டே இருந்து பதில் கடிதம் வராவிட்டால், தவித்துப்போகிற வயதுதான்

16. டெலிவரிக்கு தபால்காரர் வரும் நேரத்தில், அவர் வந்து தாண்டிப் போகும் வரை படபடத்து அடங்கும். காய்ச்சலே வரும். மழை பெய்கிற நாளைவிட மழைக்குப் பிந்திய நாள்தானே அருமையானது. அது மாதிரி காதலுக்குப் பிறகு வாழ்க்கையைச் சொல்லியிருக்கேன். 16 வயதில் இருந்து 25 வயதுக்குள் வர்ற காதலில் எவ்வளவு ஜெயிக்குது? எந்த இடத்தில் இளைஞர்கள் தப்பு பண்றாங்க? காதலில் ஜெயிக்க அவங்க செய்ய மறந்தது என்ன? இதுதான் படம். இதோ இந்த ரோட்டுல பாருங்க... பைக் பில்லியனில் அமர்ந்து போகிற மனைவிகள் எல்லாம் காதலிச்சுக் கட்டிக்கிட்டு வந்த வங்களா? வாங்க... காதலின் நல்ல பக்கத்தைப் பேசலாம்!" என்று அழைக்கிறார் இயக்குநர் சபாபதி தெட்சிணாமூர்த்தி.

காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?

"திடீர்னு என்ன காதல் மேல அக்கறை?"

"என் டேஸ்ட் நல்ல அர்த்தமுள்ள சினிமா பண்ணணும், அவ்வளவுதான். சினிமாவில் நுழைவதற்கு ஆரம்பத்தில் சில சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கு. நம்ம ஆரம்பத் தேவைகள் பூர்த்தியான பிறகு, என்னை மீட்டெடுக்கிற படமாக 'வானம் நமதே' இருக்கும். இளைஞர்களுக்கு அறிவுரைன்னு நேரடியாகச் சொல்லலை. ஆனால், நிச்சயம் அவங்களுக்கு அதைப் புரியவைக்க முடியும்னு ஒரு நம்பிக்கை. காதலில் ஜெயிக்க என்ன செய்யணும், செய்யக் கூடாதுன்னு எல்லாமே இருக்கும். வயது வந்தவர்களுக்கு இன்றைய இளைஞர் களின் மனப்போக்கையும் காட்டிஇருக்கேன்!"

" 'தமிழ் படம்' மிர்ச்சி சிவா, மதுஷாலினி எப்படிப் பொருந்தி இருக்காங்க?"

காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?

" 'தமிழ் படத்'துக்கு முன்னாலேயே அவரை நான் தேர்ந்தெடுத்திருந்தேன். சிவாதான் இன்றைய இளைஞனுக்குச் சரியான தேர்வு. அவரது இயல்பும், பேச்சும், சிரிப்பும் அவ்வளவு கச்சிதம். மதுஷாலினி நான் டைரக்ட் செய்த தெலுங்குப் படத்தில் நடித்தார். இதில் அவரது கேரக்டர் சரியாக இருந்தது. டைரக்டர் பாலாவே 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவின் ஜோடியா மது ஷாலினியைத் தேர்ந்தெடுத்து இருக் கிறார். மதுஷாலினியின் நடிப்புத் திறமைக்கு இதுக்கு மேல் என்ன அங்கீகாரம் வேணும்!"

காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?

"எந்தப் பிரமாண்டமும் இல்லாத படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை என்பது ஆச்சர்யமா இருக்கு?"

"யுவன் என் நண்பன். கதையைச் சொல்லிட்டு, 'நீ இசையமைத்தால் நல்லா இருக்கும். ஆனா, உன் பட்ஜெட் என் படத்துக்குச் சரி வராது'ன்னு சொன்னேன். 'நான் பண்றேன். இதுல என் இசை இடம்பெற்றால் மரியாதை கிடைக்கும்'னு சிரிச்சுட்டு, ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளாமல் இசை அமைத்தார். இது மாதிரி சினிமா மேல் காதல் வைத்திருக்கிற நண்பன் கிடைப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். யுவனுக்கு நன்றி!"

காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?
காதலில் ஜெயிக்க என்ன செய்யக் கூடாது?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு