Published:Updated:

மனுஷன் திருந்த மூணு வழி!

மனுஷன் திருந்த மூணு வழி!


மனுஷன் திருந்த மூணு வழி!
மனுஷன் திருந்த மூணு வழி!
மனுஷன் திருந்த மூணு வழி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நா.கதிர்வேலன்
மனுஷன் திருந்த மூணு வழி!

ன்னை ஆச்சர்யப்படுத்தியது மரணம் தான். இப்பவும் மர ணத்தை நினைச்சா,

உள்ளே வயிறு சுருளும். பலூன்ல இருந்து கண்ணுக்குத் தெரியாத துளை வழியா காத்து மாதிரி வாழ்க்கை கசியுதோன்னு தோணும். மனுஷன் திருந்துகிற இடம் மூணுதான்... மருத்துவமனை, சிறை, அடுத்து சுடுகாடு!

நாம குழந்தைகளைக் கூட்டிட்டு ஷாப்பிங் போவோம். திருவிழா போவோம். ஆனா, அவங்களுக்கு சுடுகாட்டை சுத்திக் காட்டுவோம்னு எப்பவாவது யோசிச்சிருப்போமா? நம்ம தாத்தா - பாட்டி மண்ணுக்குள்ளே தூங்கற சுடுகாட்டை ஒதுக்கிவைக்கிறோம். சுடுகாடு நல்ல இடம்தான். நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிற ஸ்பாட் சார். அதைத்தான் 'ஒதுக்குப்புறம்'னு முழு நீளப் படமா எடுக்கிறேன்!"- அதிரடியாகப் பேசுகிறார் இயக்குநர் பி.எம்.குமரன்.

"படத்துல என்ன விசேஷம்?"

மனுஷன் திருந்த மூணு வழி!

"இரண்டே கால் மணி நேரப் படமும் ஒரே ஒரு ஃப்ரேம்தான். ஆனா, ஓர் இடத்துலகூட சலிப்பு வராது. படத்தில் க்ளோஸப்கூட இல்லை. சுடுகாடு வெட்டியானுக்கு மட்டுமான இடம் இல்லை. அங்கேதான் சமூகத்தின் அத் தனை நாச வேலைகளும் நடக் கும். அதையும் சுற்றுச் சுவர் எழுப்பி, இரும்புக் கதவு போட்டுப் பூட்டி, காவலாளிவைத்துப் பாதுகாக்கலாம். தப்பில்லை!

64 புது நடிகர்கள் நடிக்கிறாங்க. இதில் ஹீரோ, ஹீரோயின்னு யாருமே கிடையாது. அப்படி யாரையாவது, எங்கேயாவது நிஜ வாழ்க்கையில் பார்க்கிறோமா? உங்களுக்கு இந்த சினிமா உறைக் கும். அடடா, நிறையத் தவற விட்டு இருக்கோம்னு பதற வைக்கும்!"

"சுடுகாடு, ஒரே ஃப்ரேம், 64 புதுமுகங்கள், ஒரே லொகேஷன்... ரொம்ப ரிஸ்க்கா தோணுதே?"

மனுஷன் திருந்த மூணு வழி!

"சார், சுவாரஸ்யம் காட்டணும். தெரியாத புது உலகத்துக்குக் கூட்டிப் போகணும். தேங்கிப் போகாமல் படம் நகர்ந்துட்டே இருக்கணும். மரணம் தன் அடி ஆழத்தில் ஒளிச்சுவெச்சிருக்கிற எல்லா மாயைகளையும் அத்தனை வசீகரங்களையும் எடுத்துவைக்கப்போறோம். 'வாழ்க்கை என்பது இரண்டு இசைக் குறிப்புகளுக்கு இடைப்பட்ட மௌனம்'னு சொன்னார் ஓஷோ. அந்த மௌனத்தைப் படத்தில் நீங்க உணர்வீங்க!"

மனுஷன் திருந்த மூணு வழி!
மனுஷன் திருந்த மூணு வழி!