Published:Updated:

சினிமா விமர்சனம் : மிளகா

சினிமா விமர்சனம் : மிளகா

சினிமா விமர்சனம் : மிளகா

சினிமா விமர்சனம் : மிளகா

Published:Updated:

சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் : மிளகா
சினிமா விமர்சனம் : மிளகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

.
சினிமா விமர்சனம் : மிளகா
விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் : மிளகா

ரௌடிகளின் பாடியில் கபடி ஆடும் மிளகா மண்டி ஹீரோவின் கதை!

ஒரு திருவிழாக் கூட்டத்தில் பூங்கொடியின் இடுப்பைக் கிள்ளிவிடுகிறார் நட்ராஜ். ஆனால், கிள்ளியது ரௌடி ரவிமரியா என்று நினைத்து, அவரை அறைந்துவிடுகிறார் பூங்கொடி. ஆத்திரம்கொள்ளும் ரவிமரியா, பூங்கொடியைக் கட்டாயத் திருமணம்(!) செய்ய முயற்சிக்கிறார். ஒரு விபத்தில் ரவிமரியா, மனநோயாளி ஆகிவிடுகிறார். அவர் குணமாகும் வரை பூங்கொடியைக் கடத்தித் தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள், அவரது சகோதர வில்லன்கள். நட்ராஜிடம் உதவி கேட்கிறார் பூங்கொடி. வில்லனின் ஆட்களிடம் இருந்து அவரை நட்ராஜ் காப்பாற்றுவது மீதி மிளகா!

கண்களில் காதல், இதயத்தில் காதல் எல்லாம் பழசு. இடுப்பு மடிப்பில் இருந்து புதிதாகக் காதல் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் ரவிமரியா.

சினிமா விமர்சனம் : மிளகா

'கத்தியா இருந்தாலும் பென்சிலா இருந்தாலும் கூர் முக்கியமில்லடி, குத்துறவன் கூர்மையா இருக்கானாங்கிறதுதான் முக்கியம்' என்று களம் இறங்கி இருக்கிறார் நட்ராஜ். பாடி லாங்குவேஜ், அலட்சியமான வசன உச்சரிப்பு என மதுரை இளைஞன் கேரக்டருக்குக் கச்சிதமாகவும் இருக்கிறார். இளவரசுவின் விரலை வெட்டிப் பணம் வசூலிக்கும் காட்சியில் கொஞ்சமும் லாஜிக் இல்லை. ஆனாலும், ரசிக்கவைக்கிறது நட்ராஜின் நடிப்பு. வில்லன் பிரதர்ஸ§க்குச் சவடால் சவால்விடுகிறார். ஏதோ சாதிக்கப்போகிறார் என்று பார்த்தால், வாசலில் 'டு லெட்' போர்டு மாட்டி தலைமறைவாகத் தண்ணியடிக்கிறார்.

கதாநாயகி பூங்கொடி... படம் முழுக்க கல்லூரிக்குப் போவதைவிட, பெட்ரோல் பங்க்கில்தான் அதிகம் சுற்றி வருகிறார். அடுத்த படத்திலாவது பூங்கொடி யைச் சிரிக்கவைங்கப்பா!

குத்துவிளக்குபோல ஒரு நாயகி, குத்துப்பாட்டுக்கு ஒரு நாயகி என்ற தமிழ் சினிமாவின் இலக்கணப்படி குத்துக்கு சுஜா. 'என் இடுப்பு எப்படி இருக்கு?' என்று கேட்கிற கலைப் பணி அவருக்கு. 'கஜேந்திரன் பிரதர்ஸ்' என்று டெரராக அறிமுகமாகும் வில்லன்கள் கடைசி வரை அதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நேரம் கிடைத்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக் கக் கிளம்பிவிடுகிறார்கள்.

படத்தின் கலகலப்புக்கு கேரன்ட்டி கொடுத்து நகர்த்திச் செல்வது சிங்கம்புலி, ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள். 'நிறையக் கொலை பண்ணி புதைக்கிறதுக்காகத்தான் வில்லன்கள் ஊருக்கு அவுட்டோர்ல வீடு பிடிச்சு இருக்குறாங்களோ!' என்று ஆரம்பித்து, படம் நெடுக சிங்கம்புலி நொடிக்கு ஒரு முறை வெடி கொளுத்துகிறார். வாய் பேச முடியாத ஒருவரைவைத்துக் கிண்டல் அடித்திருப்பது மட்டும் உறுத்தல் ரகம்!

சினிமா விமர்சனம் : மிளகா

கடவுள் கருப்பசாமியை ஒரு கேரக்டராகக் காட்டி இருப்பது புதிய முயற்சிதான். ஆனால், அது கச்சிதமாக இல்லாததால் வழக்கம்போல ஊருக்கு வெளியிலேயே நிற்கிறார் கருப்பசாமி.

'பெண்களை மதிப்பவர்', 'நட்புக்காக உசுரையும் கொடுப்பவர்', 'தவறுகளைத் தட்டிக் கேட்பவர்' என்று நட்ராஜைப்பற்றி ஆரம்பத்தில் எக்கச்சக்க பில்டப் கொடுக்கிறார்கள். கடைசியில், அவர்தான் சில்லறைத்தனமாக பூங்கொடியின் இடுப்பில் கிள்ளியிருக்கிறார். ஆனால், அவரோ எந்தத் தப்பும் செய்யாத 'வில்லன்' ரவிமரியாவைப் போட்டுப் பொளக்கிறார். எந்த ஊர் நியாயம் பாஸ்?

சினிமா விமர்சனம் : மிளகா
சினிமா விமர்சனம் : மிளகா