Published:Updated:

வடிவேலுவின் காதலி தமன்னா!

வடிவேலுவின் காதலி தமன்னா!

வடிவேலுவின் காதலி தமன்னா!

வடிவேலுவின் காதலி தமன்னா!

Published:Updated:

வடிவேலுவின் காதலி தமன்னா!
வடிவேலுவின் காதலி தமன்னா!
வடிவேலுவின் காதலி தமன்னா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ம.கா.செந்தில்குமார்
வடிவேலுவின் காதலி தமன்னா!

"டபுள் சந்தோஷம். 'தில்லாலங்கடி' ரொம்ப நல்லா வந்திருக்கு. படத்தை சன் பிக்சர்ஸ்

வெளியிடுறாங்க!" -அன்லிமிடெட் சிரிப்புடன் பேசத் தொடங்குகிறார் இயக் குநர் ராஜா. எடிட்டிங் டேபிள் காட்சிகளில் 'ஜெயம்' ரவி - தமன்னா இடையே பாஸ்பரஸ் பட்டாம்பூச்சி!

"கிட்டத்தட்ட ஐந்தாவது ரீ-மேக் படம் முடிச்சுட்டீங்க. 'ரீ-மேக் இயக்குநர்' முத்திரையை மாற்றும் எண்ணம் எழவே இல்லையா?"

"ஒரு ஹிட் படத்தை ரீ-மேக் பண்றது கொலைக் குற்றமா என்ன? சொல்லப் போனா, இங்கே நிறைய பேர் வெவ்வேறு கதைகளைச் சுட்டு, திருட்டுத்தனமா ரீ-மேக் பண்றாங்க. நான் பிற மொழிகளில் வெற்றி அடைந்த படங்களின் கதையைக் காசு கொடுத்து வாங்கி ரீ-மேக் பண்றேன். எனக் கும் அவர்களுக்குமான வித்தியாசம் இதுதான். இங்கே வருடத்துக்கு ஐந்து சத விகிதப் படங்கள்தான் வெற்றி அடையுதுன்னு சொல்றாங்க. ஒவ்வொரு வருடமும் அந்த ஐந்து சதவிகிதத்தில் என் படமும் இருக்கு என்பதில் நிச்சயம் எனக்குப் பெருமை!"

வடிவேலுவின் காதலி தமன்னா!

" 'தில்லாலங்கடி' படத்தில் வடிவேலுவை தமன்னா வான்டடா காதலிக்கிறாங்களாமே?"

"வடிவேலு ஒரு ஜீனியஸ். டைமிங் காமெடியில் பின்னி எடுக்கிறார் மனுஷன். படத்தில் காமெடியோடு, தமன்னாவைக் காதலிக்கவும் செய்றார். அவங்க ரெண்டு பேருக்குமான லவ் டிராக்ல ஒரு ஆரம்பம், பிரச்னை, முடிவுன்னு எல்லாமே பக்காவா வரும். 'அந்தக் கறுப்பனையா காதலிக்கிறே?'ன்னு தமன்னா கிட்ட கேக்கிறவங்ககிட்ட, 'கறுப்பு என் தலை முடியில் இருக்கு. கருவிழியில் இருக்கு. கறுப்பு நெருப்பு'ன்னு உருகுவாங்க தமன்னா. நிச்சயம்

வடிவேலுவின் காதலி தமன்னா!

இந்த கெமிஸ்ட்ரியும் பின்னி எடுக்கும். எந்த ஒரு ஹீரோவும் செய்யத் துணியாத பைக் சாகசம் ஒண்ணும் வடிவேலு சார் பண்ணி இருக்கார்!"

" 'ஜெயம்' ரவியும் கூடிய சீக்கிரமே படம் இயக்கப்போறார்னு ஒரு பேச்சு இருக்கு. நீங்கதான் அவருக்குக் குருவா?"

"நீங்க அவரைத்தான் கேக்கணும். ஆனா, அதற்கான தகுதிகளை

வடிவேலுவின் காதலி தமன்னா!

எல்லாம் அவன் வளர்த்துட்டே வர்றான். எங்க ஒட்டுமொத்தக் குடும்பமே சந்தோஷமா இருந்த தருணங்களில் 'பேராண்மை' பார்த்த நாளும் ஒன்று. 'துருவன்' என்ற அந்த கேரக்டரை அவன் அத்தனை அழகா தாங்கிப் பிடிச்சிருந்தான். இப்பகூட 'தில்லாலங்கடி' படத்தின் க்ளைமாக்ஸ§க்கு முந்தைய ஃபாஸ்ட் பீட் பாடலை சிம்பு பாடினா நல்லா இருக்கும்னு நினைச்சு, அவனே சிம்புகிட்ட பேசி ஓ.கே. வாங்கிப் பாடவெச்சுட்டான். எந்தப் படத்தில் வேலை பார்த்தாலும், ஒரு நடிகன் என்பதைத் தாண்டி அந்தப் படத்துக்குத் தன்னால என்னலாம் அலங்காரம் பண்ண முடியும்னு மெனக்கெட ஆரம்பிச்சுட்டான். 'நான் சொல்றதைக் கேளுடா'ன்னு சொன்ன நிலைமை மாறி இப்போ, 'நீ சொல்றதையும் கேட்டுக்குறேன்'னு வந்து நிக்கிறான்!"

வடிவேலுவின் காதலி தமன்னா!
வடிவேலுவின் காதலி தமன்னா!

"ஒரு சோதனையான காலகட்டத்தில் விஜய்க்கு நீங்க 'வேலாயுதம்' படம் பண்றீங்க. ரீ-மேக் இல்லாம உங்க சொந்தக் கதை. எப்படிச் சமாளிக்கப்போறீங்க?"

"அவர் 48-வது படம் நடித்துக்கொண்டு இருக்கும்போதே, '51-வது படம் சேர்ந்து பண்ணுவோம்' என்றார். அது கொஞ்சம் மாறி 52-வது படமா அமைஞ்சிருச்சு. விஜய்யோட அஸ்திவாரம் ரொம்பப் பலமானது. இதுக்கு முன்னரும் இதுபோன்ற ஒரு சோதனையான காலகட்டத்தைக் கடந்து தன்னை யார்னு நிரூபிச்சவர் அவர். 'வேலாயுதம்' நிச்சயம் அவரோட வெற்றிப் பட்டியலில் இடம் பிடிக்கும். மக்கள் பிரச்னைதான் கதை. அரசியல் படமா இல்லையா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்!'

வடிவேலுவின் காதலி தமன்னா!
வடிவேலுவின் காதலி தமன்னா!