"மனித உறவுகளை அவரைவிட யாரும் அறிந்தவர் இல்லை. எந்தச் சம்பவத்தையும் எல்லாக் கோணங்களிலும் பார்க்கக்கூடிய திறன் அவரிடம் உண்டு. திரைக்கதையில் அவர் பெரிய மேதை. அவரது திரைக்கதையை நல்லபடியாக எடுத்து, அவரது பெயரையும் காப்பாற்றி, என்னையும் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறேன். மேலும், லோகி என் நண்பர். அவரோடு வேலை செய்வது எனக்குச் சுலபமாக இருந்தது. என்ன செய்வது? காலம் எல்லாவற்றையும் மறக்க அடிக்கிறது. மனித மனங்களின்உளைச் சல்கள், வேதனைகள், உறவுகளின் சிக்கல் என அவர்போல் சொன்னவர் வேறு எவரும் இல்லை. குடும்பம், உறவு, நட்பு என இவற்றின் முகமூடிகள் கிழிபடுவதை லோகியின் திரைக்கதையில் காண முடியும்."
"மலையாள சினிமா எப்படி இருக்கிறது?"
"நன்றாக இல்லை. எங்களுக்கு இருந்த பெயரை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளத் தவறிவிட்டோம். மசாலாப் படங்களும், கோமாளித்தனமானபடங்களும் அதிகமாக வருகின்றன. மோசமான படங்களின் பாட்டுக்களையும், ஆட்டத்தையும் கண்டு ரசிக்கும் ஒரு புதிய தலைமுறை வந்துவிட்டது. அவர்களுக்குக் குடும்பம், உறவுகள், ஊர், கேரள வாழ்க்கையோடு உள்ள தொடர்புகள் குறைந்துவருகின்றன. வெறும் ஆங்கிலக் கல்வி, மலையாள இலக்கியத்தோடு தொடர்பு இல்லாமல் செய்துவிட்டது. வேர்கள் இல்லாமல்இருக் கிறார்கள். வியாபார சினிமாவில் இன்றைய சூழலில் நல்ல படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நான் என் பங் குக்கு இதைச் சீர்செய்ய முயன்று வருகி றேன். இது என்னால் மட்டும் முடிகிற காரியம் அல்ல என்பதையும் நீங்கள் உணர வேண்டும்."
|