Published:Updated:

'காவல்காரன்' விக்ரம்

'காவல்காரன்' விக்ரம்


'காவல்காரன்' விக்ரம்!
'காவல்காரன்' விக்ரம்
'காவல்காரன்' விக்ரம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நா.கதிர்வேலன்
'காவல்காரன்' விக்ரம்

"காதல்ல மட்டும் கரெக்ட்டான முடிவை எடுக்கணும். அதை உடனே சொல்லிடணும்.

இல்லாட்டி, நமக்கு முன்னாடி ஒருத்தன் முந்திட்டுப் போயிடுவான். ஓட்டு போட ஆர்வமா வாக்குச்சாவடிக்குப் போனா, நம்ம ஓட்டை இன்னொருத்தன் போட்டுடறது இல்லையா... அதுதாங்க இது. அப்படி ஒருகாதல் கதையைச் சொல்லி இருக்கேன். முதன்முதலா சினிமான்னு வந்து ஆசை ஆசையா நினைச்சு வாழ்ந்த கதை. இப்பதான் திரையைக் காணுது" - காதலாகப் பேசுகிறார் 'காதல் சொல்ல வந்தேன்' இயக்குநர் பூபதிபாண்டியன்.

"விஷாலை வைத்து 'மலைக்கோட்டை'ன்னு ஆக்ஷன் பண்ணிட்டு, என்ன திடீர்னு காதல் பயணம்?"

"கடவுள் படைச்ச உணர்வுகளில் காதலைத் தவிர மேலானது எது? எப்பவும் எல்லோர் மனசிலும் சுரந்துகிட்டே இருக்கிற உணர்வு காதல்தான். முழுக்க முழுக்கக் கல்லூரிக் கதை. இளமைக்குப் பஞ்சமே இல்லை. எல்லோருடைய காதலும் ஒரு கட்டத்தில் முடியும் இல்லையா? அந்தப் புள்ளியில்தான் கதையே ஆரம்பிக்குது. 16 வயசுக்குள் வர்ற காதல் படுத்துற பாடு எப்படி எல்லாம் இருக்கும்னு ஒரு பார்வை பார்த் திருக்கேன். என்னுடைய ஸ்பெஷலான நகைச்சுவையும் கலந்திருக்கேன். நல்ல காதல் கதைக்கு எப்பவுமே மதிப்பு இருக்கும். 16 வயது காதலைச் சொல்லும்போது அதில் கவர்ச்சி மீறிடக் கூடாதுன்னு ரொம்பக் கவனமா இருந்திருக்கேன்!"

'காவல்காரன்' விக்ரம்

"காதல்னா புதுமுகம்தானா?"

'காவல்காரன்' விக்ரம்

"ஆமா, பாலாஜின்னு புதுப் பையன். மேக்னான்னு நடிகர் சுந்தரோட பொண்ணு. கதை சிம்பிளானது. உணர்விலும் நடிப்பிலும் கதை சொல்லும் விதத்தி லும் சுவை சேர்த்தேன். பாலாஜி சொன்ன காதலை ஏற்க முனையும்போது மேக்னாவுக்கு வரும்பிரச்னை கள், காதலைச் சொல்ல வந்தார்களே என்ன ஆச்சு என்ற சுவையான முடிச்சுகளோடு பிணைந்திருக்கிறது கதை. நிச்சயமாப் படம் பார்த்துட்டு வரும்போது இத்தனை இளமையாக இருக்கிற பாலாஜி, மேக் னாவை அன்னிக்கு ராத்திரி வரைக்குமாவது உங்க ளால் மறக்க முடியாது!"

"இப்போ காதல் கதை நம்பத் தகுந்ததா? ஆளாளுக்கு ஆக்ஷன்னு பரபரக்கிறாங்களே?"

"எப்பவும் காதலுக்கு இடம் இருக்கும். ஸ்ரீதர் காலத்தில் ஆரம்பித்து இப்ப வரைக்கும் எவ்வளவு காதல் படங்கள்? மணிரத்னத்தின் 'அலைபாயுதே' மறக்கக்கூடியதா? எவ்வளவு வகைப்பட்ட காதலைக் கடந்து வந்திருக்கோம். எல்லாத் துக்கும் சீஸன் உண்டு. காதல் எப்போதும் செல்லு படியாகும்!"

'காவல்காரன்' விக்ரம்

"யுவன் பாடல்களைப்பத்திச் சொல்லுங்க?"

"இந்தப் படத்துக்கு யுவன் அருமையான சாய்ஸ். காதல் படங்களுக்கு, காதல் பாடல்களுக்கு அவரைவிட்டால் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய இசையின் அடையாளம் யுவன்தான். இந்தப் பாடல்களைக் கேட்டால், இது எவ்வளவு உண்மை என்பது தெரியும். நா.முத்துக்குமாரின் பாடல்களும் யுவனின் இசையும் சேர்ந்து இசைப்புரட்சி எனச் சொன்னால்தான் சரியாக இருக்கும். 'கல்லூரிக் காலம் மூன்று

'காவல்காரன்' விக்ரம்

ஆண்டு; உன்னோடு வாழ வேண்டும் நீண்டு'ன்னு யுவன் ஒரு பாட்டு போட்டு இருக்கார். கல்லூரிகளில் இதுதான் ஹிட் பாட்டு!"

"அடுத்து விக்ரமின் படம்... எப்படித் தயாரிப்பில் இருக் கிறீர்கள்?"

"ஒரு போலீஸ்காரனின் கதை. இப்போதைக்கு இந்த ஒற்றை வார்த்தைதான் உங்களுக்குச் சொல்ல இருக்கிறது. மிகவும் கவனமா, யதார்த்தமா கதை தயாராகிட்டு இருக்கு. என்ன பெயர், என்ன படம், யார் ஜோடி, எப்படி இருக்கும்னு எல்லாத்தையும் அடுத்த மீட்டிங்கில் பேசுவோம்"-மலர்ந்து சிரிக்கிறார் பூபதி பாண்டியன்!

'காவல்காரன்' விக்ரம்
'காவல்காரன்' விக்ரம்