் கத்தியை வெச்சுக் கிட்டே அலைவேன். பொறுக்கி மாதிரியே இருப்பேன். ஒரு பெண்ணைப் பயங்கரமாக் காதலிச்சுப் பிரச்னையாகி, ராத்திரி 12 மணிக்கு, ஊரைவிட்டு ஓடி வர வேண்டிய நிர்பந்தம் வந்துச்சு. என் கதையை நானே எடுக்கக் கூச்சமா இருந்தது. அதெல்லாம் வேற கதை சார். என்னை மாதிரியே இருக்கிற ஒரு பையனைத் தேடிப் பிடிக்க அலைஞ்சோம். தாம்பரத்தில் கதிர்னு ஒரு பையன் கிடைச்சான். பி.இ., படிச்சு முடிச்சு இருந்த பையனைக் கையோடு கூட்டி வந்து பயிற்சி கொடுத்து, இப்பப் படம் முடிவதற்குள் அவனுக்கு வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு."
"உங்க காதலி மாதிரியே ஹீரோயின் தேடினீர்களா?"
"தெரிஞ்சிடும் சார். துடிப்பான, கிராமத்து ஜாடை அதிகம் இருக்கிற பெண்ணைத் தேடினேன். இங்கே எங்கேயும் இல்லாமல் அருந்ததியை நான் பார்த்தது பெங்களூரில். மாநிறத்தில் இருந்த பொண்ணு இப்ப தமிழ் படிச்சு, ராமநாதபுரம் பாஷையில் பின்னி விளையாடுது. படம் வெளிவருவதற்குள் வேறு படங்களில் நடிக்கப் போயிருச்சு."
"பெரிய ஹீரோக்களை வெச்சு எடுத்துட்டு, புதுமுகங்களால் படம் விற்பனை முதற்கொண்டு கஷ்டம் இல்லையா?"
|