சிதறவைக்கும். அப்படி, காத்துபோலத் திரிஞ்சவன் பச்சை. 25 வயசுக்குள்ளே மொத்த வாழ்க்கையையும் முடிச்சுக்கிட்டவன். ஒரு மரணம் யாராவது ஒருத்தரைக் கலங்கவைக்கும்... கதறி அழவைக்கும். ஆனால், பச்சை இறந்தப்போ, யாரும் ஒரு துளிக் கண்ணீர்விடலை. அன்னிக்கு அவனோட மனைவி பிரியாணி சாப்பிட்டுட்டு நிம்மதியாத் தூங்கினாங்க. பச்சையின் கதையைக் கேட்டப்ப, யாரையும் கலங்கவைக்காத, அதிரவைக்காத ஒரு மரணம் சாத்தியமான்னு அதிர்ச்சியா இருந்தது. அந்த அதிர்வை உங்களுக்குக் கடத்துறதுதான் என் வேலை!"
"எல்லோரும் புதுமுகங்களோ?"
"பாத்திரங்கள் மட்டுமே தெரியணும்னு நினைச்சேன். 'பச்சை'யா என் நண்பன் வாசு தான் பயந்துக்கிட்டே நடிச்சான். கொஞ்ச நாள்லயே, 'அப்படியே பச்சை மாதிரியே நடிக்கிறான்... நடக்குறான்'னு பச்சையோட நண்பர்கள் அங்கீகாரம் கொடுத்துட்டாங்க. ஸ்கூலில் கடைசிப் பெஞ்ச்சில் உட்கார்ந் திருக்கிற மாதிரி, கொஞ்சம் பூசின உடம்போடு ஒரு ஹீரோயின் தேவைப்பட்டாங்க. கேரளா வில் இவங்களைப் பார்த்ததுமே 'தேவதை மாதிரி இருக்காங்க'ன்னு தோணுச்சு. ரொம்ப யோசிக்காம 'தேவதை'ன்னே அந்தப் பொண்ணுக்குப் பெயர் வெச்சுட்டேன். செட்டில் 'தேவதை'ன்னு கூப்பிடும்போது, அந்தப் பொண்ணுக்கு வர்ற வெட்கத்தைப் பார்க் கணுமே... அதையே, தனி சினிமாவா எடுக்கலாம் சார்!"
|