Published:Updated:

சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி

சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி


சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி
சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி
விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி

ணக்காரக் கனவில் பகல், இரவு பார்க்காமல் உழைப்பவனே... 'அம்பாசமுத்திரம்

அம்பானி!'

அம்பானி ஆகும் ஆசையில் சென்னை வருகிறார் கருணாஸ். பேப்பர் போடுவது, குல்பி ஐஸ், இளநீர், அப்பளம் விற்பது என சகல வியாபாரங்களும் செய்து பணம் சேர்க்கிறார். ஒரு காம்ப்ளெக்ஸில் சொந்தமாகக் கடை வாங்க வேண்டும் என்பது அவரது கனவு. சேர்ந்த பணம் 40 லட்சத்தை காம்ப்ளெக்ஸ் முதலாளி கோட்டா சீனிவாச ராவிடம் கொடுத்துவைக்கிறார். கணக்கு வழக்கு எதுவும் எழுதாத நிலையில், கோட்டா சீனிவாச ராவ் மரணமடைந்துவிடுகிறார். கருணாஸ§க்குப் பணம் கிடைத்ததா? கடைவைக்கும் கனவு என்ன ஆனது என்பது மீதிக் கதை!

சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி

உழைப்பால் உயரும் உத்தமர் கதை. அதைக் கொஞ்சம் காமெடியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.ராமநாத். உழைப்பால் உயரும் நாயகன் கதையில் 'பணம் எப்படிச் சேர்ந்தது' என்று லாஜிக் இருக்காதே? இங்கேயும் இல்லை.

'கஞ்சன் தண்டபாணி' கேரக்டரில் பணக்காரனாக நள்ளிரவில் ஒற்றைக் காலில் தவம் இருப்பதும், பணத்துக்காக, சாக்கடைக்குள் குதிப்பதுமாக மனதில் பதிகிறார் கருணாஸ். காதல், ஏமாற்றம்போன்ற இடங்களில் மட்டும் கருணாஸின் முகத்தில் பார்த்துப் பழக்கப்பட்ட பழைய எக்ஸ்பிரஷன்களே ஓடி மறைகின்றன. அது சரி... வெச்சுக்கிட்டா, வஞ்சகம் பண்றார்!

நாயகி நவ்னீத் கவுருக்கு அடிக்கடி ஆடை அவிழ்க்கும் வேலை. அம்மா சேலையைக் கொடுத் ததற்கே கருணாஸின் மீது காதல் வயப்பட்டு விடுகிறார். பெற்றோரை இழந்து அநாதையாகிக் கண்ணீர் மல்கும் நவ்னீத், அடுத்த காட்சியிலேயே சேலை கழற்றி அழகு காட்டுகிறார். என்ன ஒரு சிந்தனை!

கருணாஸின் உதவியாளராக வரும் சங்கர், பழைய காஜா ஷெரீப்பை நினைவுபடுத்துகிறார். நரம்புத் தளர்ச்சிச் சிறுவனாக உடம்பு உதறப் பிச்சை எடுக்கும்போதும், கருணாஸ§க்குத் துரோகம் செய்துவிட்டுக் கதறி அழும்போதும்... முதிர்ச்சியான நடிப்பு. தன்னை வாழவைத்துக்கொண்டு இருக்கும் கருணாஸ§க்கு சங்கர் ஏன் துரோகம் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை?

சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி

காமெடிக் கூட்டணிக்கு டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து எனப் பலர் வந்துபோனாலும், காமெடி வொர்க்-அவுட் ஆக மறுக்கிறது. 2,000 ரூபாய்க்கு கருணாஸின் நம்பருக்குத் தப்பாக டாப்-அப் செய்துவிட்டு, தினமும் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து கிண்டி வந்து போன் பேசிவிட்டுச் செல்லும் மயில்சாமி யின் காமெடி மட்டும் ஆறுதல். வேலைக்குச் செல்லும் அவசரத்தில் மாடியில் இருந்து மண்ணில் குதித்துச் செல்லும் முகம் தெரியாத டி.டி.ஆர் கேரக்டரும், அவரது மனைவி நிரோஷாவும் சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.

கருணாஸ் லட்சியத்தில் ஜெயிக்கப் போராடிக்கொண்டு இருக்கும்போது, லேகியம், தாம்பத்யம் என்று திசை மாறும் திரைக்கதை எரிச்சல் ரகம். கோட்டாவை அவ்வப்போது வில்லனாகக் காட்டி பில்ட்-அப் ஏற்றும்போதே முடிவு தெரிந்துவிடுகிறது. ஆனாலும், விடாமல் சுற்றி வளைத்து கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சிறு வயதில் இருந்து பேப்பர் போட்டு கருணாஸ் சம்பாதிக்கும் பணம் ஏழு லட்சம். அதே வேலையைச் செய்து அடுத்த சில மாதங்களில் 30 லட்சம் சம்பாதித்து விடுகிறார். கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் கணக்கு சரியா வரலையே?

கருணாஸின் இசையில் 'ஒத்தக் கல்லு...'

ரீ-மேக் பாட்டு செம கமர்ஷியல் குத்து. கருணாஸ் போடும் ஆட்டம் ஆச்சர்யம் கொடுக்கிறது.

ஆனாலும், தண்டபாணி... அம்பானி ஆகவில்லை!

சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி
சினிமா விமர்சனம் : அம்பாசமுத்திரம் அம்பானி