Published:Updated:

ஜோக்ஸ் 2

ஜோக்ஸ் 2

ஜோக்ஸ் 2

ஜோக்ஸ் 2

Published:Updated:

ஜோக்ஸ்  
ஜோக்ஸ் 2
ஜோக்ஸ் 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக்ஸ் 2

''அந்த நடிகை அரசியல் கட்சியில சேர்ந்ததும் நல்லா பேசக் கத்துக்கிட்டாங்க!''
''எப்படிச் சொல்றீங்க?''
''ஷூட்டிங் ஸ்பாட்ல ஆரஞ்சு ஜூஸ் வேணும்னாகூட 'மதிப்புக்குரிய தயாரிப்பாளர் அவர்களே... மரியாதைக்குரிய டைரக்டர் அவர்களே'ன்னுதான் ஆரம்பிக்குறாங்க!''
- வந்தை ஜி.கே.நிதி

''பொதுக்கூட்டத்தில் பர்ஸ் காணாமல்போனதற்கு, எங்கள் தலைவர் காரணம் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்!''
- பெ.பாண்டியன்

''ஆபரேஷனுக்குக் கூடமாட உதவியா இருந்த வார்டு பாயை ஏன் கொன்னீங்க டாக்டர்?''
''கொலையை நேர்ல பார்த்த சாட்சி இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க, அதான்!''
- வி.சகிதா முருகன்

''நம்ம தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரே!''
''எப்படிச் சொல்றே?''
''குழந்தைக்குப் பேர் வெச்சுட்டு இனிஷியலையும் நான்தான் வைப்பேன்னு அடம்பிடிக்கிறாரே!''
- க.கலைவாணன்

''டாக்டர்... என் பையன் செல்போனை முழுங்கிட்டான், அதை வெளியே எடுக்கணும்!''
''ஃபீஸ் கொஞ்சம் அதிகம் ஆகுமே!''
''அப்ப, சிம்கார்டை மட்டும் எடுத்துக்கொடுங்க!''
- க.கலைவாணன்

ஜோக்ஸ் 2
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism