Published:Updated:

சினிமா விமர்சனம் - சிங்கம்

சினிமா விமர்சனம் - சிங்கம்

சினிமா விமர்சனம் - சிங்கம்

சினிமா விமர்சனம் - சிங்கம்

Published:Updated:

சினிமா விமர்சனம்  
சிங்கம்  
விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் - சிங்கம்
சினிமா விமர்சனம் - சிங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம் - சிங்கம்
சினிமா விமர்சனம் - சிங்கம்

டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைக்க ஆசைப்பட்டு, போலீஸ் டிபார்ட்மென்ட்டையே கலங்கடிக்கும் துரை'சிங்கம்'!

மளிகைக் கடை வைக்க விரும்பும் சூர்யா, அப்பாவின் ஆசைக்காக உள்ளூர் காவல் நிலையத்தில் சொந்தபந்தங்களுக்கு மத்தியில் எஸ்.ஐ-யாகப் பணிபுரிகிறார். எதிர்பாராத திருப் பத்தில் சூர்யாவோடு சென்னை தாதா பிரகாஷ்ராஜுக்கு முட்டிக்கொள்கிறது. கிராமத்தினரை மீறி சூர்யாவை எதுவும் செய்ய முடியாமல் புறமுதுகிடுகிறார் பிரகாஷ்ராஜ். சிறிது நாட்களில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுடன் சென்னைக்கு மாற்றலாகிறார் சூர்யா. (ஆங்... ஊர்க்கார ஹீரோ, சென்னை வந்துட்டாரா!) மாற்றலுக்குப் பின்னணி பிரகாஷ்ராஜ். தொடரும் ரணகள அடிதடிகள், ஆக்ஷன் சரவெடிகள்!

காக்கிக் கதையில் காரசார மசாலா கலக்கிக் குலுக்கிய ஹரி ஸ்பெஷல் கமர்ஷியல். இந்தப் படத்திலும் டாடா சுமோ, சவால், சவடால், வெள்ளை வேட்டி வெள்ளந்தி மனிதர்கள், கூட்டுக் குடும்ப சென்டிமென்ட், காதல், ஆக்ஷன், அரிவாள், துப்பாக்கி என ஹரி முத்திரை கொஞ்சம் அழுத்தமாகவே!

நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஹரி பட ஹீரோக்களின் இலக்கணத்தை மீறாமல் சூர்யாவும். ஆக்ஷன் அதிரிபுதிரி காட்டி, பாசத்தில் நெகிழ்ந்து, காதலில் நனைந்து 24ஜ்7 பளிச் பரபரப்பு. ஆனால், ஒரு விஷயம்... போலீஸ் என்பதற்காக எந்நேரமும் விறைப்பாக இருப்பது சரிதான். அதற்காக, அப்பா பாசமாகப் பேசும்போதுகூட முகத்தை இறுக்கி, உடம்பை முறுக்கி நிற்க வேண்டுமா சூர்யா? ('காக்க காக்க' அன்புச்செல்வன், துரைசிங்கத்தைப் பார்த்தால், ரத்தக் கண்ணீர் வடிப்பார்!)

அழகு அனுஷ்கா... படத்துக்குப் பளபள பலம். சாதாரண சுடிதார்களில் ஏரியா ஃபிகராக வசீகரிப்பவர், பாடல் காட்சிகளில் 'வானவில் மறைக்கும்' அபார அழகு காட்டுகிறார். சும்மா சும்மா ஆடி விட்டுப் போகாமல், படத்தின் ஓட்டத்துக்கும் ஈடு கொடுக்கிறார். ஆனால், ஹீரோவுடன் பற்றவைக்கும் கெமிஸ்ட்ரிக் குத்தான் அணை போடுகிறது அம்மணியின் மிஸ்ட்ரி உயரம்!

பார்த்துப் பழகிய கதாபாத்திரம் என்பதால், சிற்சில இடங்களில் மட்டுமே மிரட்டுகிறது பிரகாஷ்ராஜின் உறுமல்.

காவல் நிலையத்தில் ஊரே அங்காளி, பங்காளி என்று சூர்யாவுக்காகக் கொலைவெறியோடு கூடுவதும், பதில் அடியாக சூர்யாவை சென்னைக்கு வரச் செய்து பிரகாஷ்ராஜ் சவால் விடுவதும்தான் படத்தை இறுக்கிப் பிடிக்கிறது. வில்லன்கள் ஊற்றும் பெட்ரோலைப் பற்றவைத்து அவர்களையே திருப்பி அடிப்பது, சாவி துவாரத்தில் மொபைல் கேமரா வைத்து உள்ளே இருப்பவர்களைக் கண்டுபிடிப்பது என ஆங்காங்கே ஆக்ஷன் ஐடியாக்கள் சுவாரஸ்யம்.

படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் 'ஆய்... ஊய்...' என்று வாய் கிழியப் பேசும் வசனங்கள்தான் காது கிழிக்கின்றன. 'பசிக்குப் பொங்கல் சாப்பிடுறவனை மன்னிக்கலாம். ருசிக்குப் பாயாசம் சாப்பிடுறவனை மன்னிக்கவே கூடாது' என்று உறுமுகிறார் சூர்யா. என்னதாங்க சொல்ல வர்றீங்க? பேப்பர் கிழிப்பதுபோல டாடா சுமோவின் கதவு, கூரைகளைப் பிய்த்துக் கிழித்து எறிகிறார். ஏங்க இவ்வளவு கோபப்படுறீங்க? 'தீப்பிடித்த திரைக்கதை' என்று மெனக்கெட வேண்டியதுதான்.

சினிமா விமர்சனம் - சிங்கம்

அதற்காக 'என்ன நடக்குது, ஏன் நடக்குது' என்று யோசிக்கும் முன்னரே, விறுவிறு கிறுகிறுவெனக் காட்சிகள் கடந்து சென்று மலைப்பூட்டுகிறதே. ஏங்க விரட்டி விரட்டி அடிக்கிறீங்க?

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் 'காதல் வந்தாலே' பாடல் மட்டும் ஆட்டத்தோடு பார்க்கையில் தாளம் போட வைக்கிறது. பரபர திரைக்கதையில், திகுதிகு வசனம் பேசி 'யோசிக்கவிடாமல்' கதை சொல்லி அனுப்புவது ஹரியின் சாமர்த்தியம். அந்த வகையில் இந்த 'சிங்கம்' சர்க்கஸில் சொன்னதைச் செய்திருக்கிறது!

சினிமா விமர்சனம் - சிங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism