"துரோகத்துக்கும் விசுவாசத்துக்கும் துளி வித்தியாசம்தான். இப்போது அதுகூட இல்லை. நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இப்போ வித்தியாசமே இல்லை. இவனுக்குள் அவன் இருக்கான், அவனுக்குள் இவன் இருக்கான். உங்களுக்குள்ளேயும் ஒரு துரோகி இருக்கான்'' - அருமையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் சுதா கே.பிரசாத். மணிரத்னத்தின் மாணவி.
''பெண்கள் என்றாலே மென்மையாக ஒரு காதல் கதை சொல்வாங்கன்னு நினைச்சோம்..!''
''நான் ஒரு பெண் என்பதால் எனக்கு மென்மையான கதை அம்சம் உள்ள படம்தான் எல்லையா என்ன? எனக்கு ஒரு நல்ல கமர்ஷியல் படம் பண்ணணும்னு ஆசை. 'தாரே ஜமீன் பர்', கமர்ஷியல்தான். இரண்டரைக் கோடியில் தயாரிச்ச 'வெட்னஸ்டே' பிரமாதமான வெற்றிப் படம். 'எல்லோருமே ஒருவகையில் துரோகிதான்' என்ற ஒரு வரிக் கதைதான் படம். ஒரு நேரத்தில், நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடிக்கிற சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகா இருக்கும். ஆனால், வாழ்க்கை பொரட்டிப் போட்டா, எல்லாமே மாறும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் என் துரோகி!''
''நம்ப முடியலை... ஸ்ரீகாந்த்தும் விஷ்ணுவும் தனியாத் தெரியறாங்க!''
|