"எப்படி இருக்கார் ஆர்யா?"
" 'நான் கடவுள்' படத் துக்குப் பிறகு ஆர்யா இன்னிக்குப் பண்பட்ட நடிகர். இதில் இரண் டாவது கருத்துக்கு இடம் இல்லை. ருத்ராட்ச மாலை யும் கோபமும் ஆவேசமுமாகத் திரிந்த அவர், இதில் நேர்மாறான ஆளா வர்றார். அழுக்காத் திரிஞ்சவர், இதில் செம ஸ்டைலான சாக்லேட் பையன். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி சில பசங்க இருப்பாங்கள்ல. அப்படி நொடிக்கு ஒரு குறும்பு பண்ணி, சின்னச் சின்னதாப் பொய் சொல்லி, எதிரில் வர்ற எல்லோரையும், சீண்டிப்பார்க்கிற ச்சோ ஸ்வீட் பையன் ஆர்யா.
லவ்லகூட ஃபீலிங் பார்ட்டி கிடையாது. காதலையும் லைட்டா காமெடியாவே பார்க்கிற பையன். போட்டோ செஷனில் பார்க்கணுமே, ஆர்யாவும் ஸ்ரேயாவும் கொஞ்சிக்கிட் டதை. அன்னிக்குப் பேச ஆரம்பிச்சவங்க இன்னிக்கு வரைக்கும் விடாம போன்ல பேசிட்டே இருக்காங்க. அப்படி என்னதான் இருக்குமோ சார்!"
|